மங்கள வார்த்தை செபம்

அன்னை மரியாயின் உதவியைப் பெற கத்தோலிக்க கிறிஸ்தர்களால் பயன்படுத்தப்படும் செபம் ஆகும்.

இந்த செபம் முதன்மையாக செபமாலையிலும், மேலும் பல்வேறு பக்தி முயற்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

அருள் நிறைந்த மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

அர்ச்சிஷ்ட மரியாயே, சர்வேசுவரனுடைய மாதாவே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.

கி.பி. 513ல் அந்தியோக் நகர் பெருந்தந்தை செவரஸ், மங்கள வார்த்தை செப வாழ்த்து பகுதியின் முதல் வாக்கியமாக அமைந்துள்ள சம்மனசானவரின் வார்த்தைகளான, "அருள் நிறைந்த மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே" என்பதை சில கிறிஸ்தவ சடங்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்.

திருத்தந்தை புனித முதலாம் கிரகோரி (கி.பி.590-604) காலத்தில், அந்த சம்மனசானவருடைய வார்த்தைகளின் பயன்பாடு கிறிஸ்தவர்களிடையே அதிகரித்தது.

பிரான்சு அரசர் புனித ஒன்பதாம் லூயிஸ் (கி.பி.1261-1264) காலத்தில், மங்கள வார்த்தை செப வாழ்த்து பகுதியின் இரண்டாம் வாக்கியமாக அமைந்துள்ள எலிசபெத்தின் வார்த்தைகளான, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியும் (வயிற்றில் வளரும் திருக் குழந்தையும்) ஆசி பெற்றதே" என்பதும் இணைக்கப்பட்டு, வாழ்த்து பகுதி முழுவதும் வழக்கத்தில் இருந்தது.

திருத்தந்தை நான்காம் அர்பன் (1261-1264), இச்செபத்தில் இடம் பெற்றிருந்த "திருவயிற்றின் கனியும்" என்ற வார்த்தைகளை, "திருவயிற்றின் கனியாகிய சேசுவும்" என்று மாற்றி அமைத்தார். திருத்தந்தை 22ம் ஜான் (கி.பி.1316-1334) அந்த மாற்றத்தை மீண்டும் உறுதி செய்தார்.

1569ஆம் ஆண்டு திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ், மங்கள வார்த்தை செபத்தின் வேண்டுதல் பகுதியான, "அர்ச்சியஷ்ட மரியே, சர்வேசுரனின் மாதாவே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்" என்பதை இணைத்தார்.

நாம் பக்தியோடு ஒரு அருள் நிறைந்த மரியாயே செபம் சொன்னால் மாதாவுக்கு ஒரு ரோஜா பூவை கொடுக்கிறோம் தினமும் ஒரு ஜெபமாலை சொன்னால் சேசுவுக்கும் மாதாவுக்கும் ரோஜாமாலையே கொடுக்கிறோம்

அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் மங்கள வார்த்தை பெருவிழா வாழ்த்துக்கள்!