தவக்கால சிந்தனைகள் 23 : சேசுவே இரட்சகர்... கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து...

அப்போது தோமையார்:

“ஆண்டவரே, எங்களுக்கு எதுவும் தெரியாது. நீர் எங்கே போகிறீர் என்று எங்களிடம் சொல்ல வில்லையே. அப்படியானால் உம்மை நோக்கி வருவதற்கு பின்பற்ற வேண்டிய பாதையை நாங்கள் எப்படி அறிவது? காத்திருப்பதைத் தவிர்ப்பதெப்படி?” என்று கேட்கிறார்.

“நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். நான் இப்படிக் கூறியதையும், அதைப் பல தடவைகளிலும் விளக்கிச் சொல்லியதையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். உண்மையாகவே கடவுள் இருக்கிறார் என்று கூட அறியாத சிலர் என் வழியில் முன்னால் சென்றுள்ளார்கள். அவர்கள் ஏற்கெனவே உங்களை முந்திவிட்டார்கள்.

ஓ! இழக்கப்பட்டு என்னால் மந்தைக்குக் கொண்டுவரப்பட்ட கடவுளின் ஆடுகளே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உயர்த்தப்பட்ட ஆன்மாக்களையுடையவர்களே, நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள்?”

“யார்? யாரைப் பற்றிப் பேசுகிறீர்? லாசருடைய மரியாளைப் பற்றியா? அவள் உமது தாயுடன் அடுத்த அறையில் இருக்கிறாள். அவளைக் கூப்பிடவா? அல்லது ஜோஹான்னாவைத் தேடுகிறீரா? நிச்சயமாக அவள் தன் மாளிகையில் இருப்பாள். நீர் விரும்பினால் நாங்கள் அவளைக் கூட்டி வருகிறோம்...”

“அல்ல, அவர்களை அல்ல. மோட்சத்திலே மட்டும் வெளிப் படுத்தப்படவிருக்கிற ஓர் ஆளைப் பற்றியே நான் நினைக்கிறேன்... அதோடு ஃபோற்றினாளைப் பற்றியும். (சேசுவால் மனந்திருப்பப்பட்டவள்.) அவர்கள் என்னைக் கண்டு கொண்டார்கள். அதன்பின் அவர்கள் என் வழியை ஒருபோதும் விட்டுவிடவில்லை. அவர்களில் ஒருவருக்கு பிதாவை உண்மையான கடவுளென்றும், இஸ்பிரீத்துவை இத்தனி ஆராதனையில் ஒரு (தெய்வ) லேவியரென்றும் சுட்டிக் காட்டினேன். மற்றவள் தனக்கு ஒரு ஆன்மா உண்டென்பதைக் கூட அறியாதிருந்தாள். அவளிடம்:

“என் பெயர் இரட்சகர். இரட்சிக்கப்பட வேண்டுமென்ற நல்லெண்ணம் உடையவர்களை நான் இரட்சிக்கிறேன். இழக்கப்பட்டவர்களைத் தேடி வருகிறவர் நான். நான் சீவனையும் சத்தியத்தையும் பரிசுத்தத்தையும் கொடுக்கிறேன். என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்... பலவீன ஏவாள்களாயிருந்த உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன். நீங்கள் யூதித்தை விட தைரியசாலிகளானீர்கள்” என்றேன்...

நான் வருகிறேன்... நீங்கள் இருக்குமிடத்திற்கு நான் வருகிறேன். நீங்கள் எனக்கு ஆறுதலாயிருக்கிறீர்கள்... நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக!...”

நன்றி : www.catholictamil.com

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479