வியாகுல அருள் நிறை மந்திரம்!

வியாகுலங்கள் நிறைந்த மரியாயே வாழ்க, சிலுவையில் அறையப்பட்டவர் உம்முடனே. பெண்களுக்குள் மிகுந்த இரக்கத்திற்குத் தகுதியுள்ளவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் மிகுந்த இரக்கத்திற்குத் தகுதியானவரே.

அர்ச். மரியாயே, சிலுவையில் அறையப்பட்டவரின் மாதாவே, உம்முடைய திருக்குமாரனை சிலுவையில் அறைந்த நாங்கள், மனஸ்தாபக் கண்ணீரை இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் பெற்றுக் கொள்ளும்படியாக, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்.