வியாகுல அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்நியாச சபை!

தனது வியாகுலத்திற்கு வணக்கம் செலுத்துவதை விசேஷ நோக்கமாகக் கொண்ட ஒரு சந்நியாச சபை திருச்சபையில் இருக்க வேண்டும் என்று தேவதாய் விரும்பி னார்கள் என்பதிலிருந்து, நாம் அவர்களுடைய வியாகுலங் களின்மீது பக்தி கொள்வதை எந்த அளவுக்கு மாதா விரும்பு கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இத்தகைய பக்தி எல்லாக் காலங்களிலும் திருச்சபையில் இருந்து வந்துள்ளது. பரிசுத்த திருச்சபைத் தந்தையரின் எழுத்துக் களாலும், பல ஜெபங்கள், படங்கள், மனதைத் தொடும் பாடல்கள் ஆகியவற்றாலும் இது எண்பிக்கப்படுகிறது. ஆனால் தமது திருக்குமாரனின் தாயாரின் வியாகுலத்தின்மீது திருச்சபையின் உறுப்பினர்கள் கொண்டுள்ள இந்த பக்தி யானது, ஒரு நிலையான பக்தியாக இருக்க வேண்டும் என்று கடவுளே சித்தங்கொண்டார். இது நிறைவேற ஒரு சந்நியாச சபை மரியாயின் வியாகுலத்தின்மீது பக்தி கொண்டு, அதை எல்லா இடங்களிலும் பரவச் செய்யவும் அவர் விருப்பம் கொண்டார். இத்தாலியில் உள்ள ப்ளோரென்ஸ் நகரில் இந்த சந்நியாச சபையை நிறுவும் அலுவல் ஏழு பிரபுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கி.பி. 1223-ல் புனித வெள்ளியன்று இந்த பக்திமிகு இளைஞர்கள் ஆண்டவருடைய பாடு களையும், அவருடைய திருத்தாயார் அனுபவித்த வியாகுலங் களையும் பற்றித் தியானம் செய்யும்போது, மாதாவே மோட்ச அழகுடன் சம்மனசுக்கள் புடைசூழ அவர்களுக்குத் தோன்றிார்கள். சில சம்மனசுக்கள் ஆண்டவருடைய பாடுகளின் போது பயன்படுத்தப்பட்ட கருவிகளுடனும், மற்றவர்கள் கறுப்பு ஆடையைத் தங்கள் கையில் ஏந்தியும் காணப்பட்டார்கள். அவர்களில் ஒரு சம்மனசானவர் தம் கையில் அர்ச். அகுஸ்தீனாரின் சட்டங்கள் அடங்கிய நூலையும், இன்னொருவர் தம் வலது கையில், “மரியாயின் ஊழியர்கள்” என்ற பொன்னிற எழுத்துக்கள் கொண்ட ஒரு சுருளையும், தமது இடது கையில் ஓர் ஓலையையும் தாங்கி நின்றார்கள். அர்ச். கன்னிமரியம்மாள் தனது ஊழியர்களைக் கறுப்பு உடையால் உடுத்தினார்கள். அந்த உடைதான் கறுப்பு நிற மேலங்கியாகும்.

இந்தக் காட்சியால் பரவசம் அடைந்த இந்த இளை ஞர்கள் மாதாவின் திருவாயிலிருந்து பின்வரும் வார்த்தைகள் ஒலிப்பதைக் கேட்டார்கள்: “என் தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களே, நான் உங்கள் மன்றாட்டுகளுக்குப் பதில் சொல்லி உங்களைத் தேற்ற வந்துள்ளேன். இந்த உடையை வாங்கி அணிந்து கொள்ளுங்கள். நான் என் திருக்குமாரன் மரித்த இந்நாளில் அனுபவித்த வியாகுலங்களை இந்தக் கறுப்பு உடை எப்பொழுதும் உங்களுக்கு ஞாபகப்படுத் தட்டும். நீங்கள் இந்த உலகில் எனக்கு விசுவாசமாக ஊழியம் செய்தால் உங்களுக்காக மோட்சத்தில் காத்துக் கொண் டிருக்கும் மகிமையை நீங்கள் தாங்கும் இந்த ஓலை உங்களுக்குப் பறைசாற்றுகிறது,”

மாதா கட்டளையிட்டவாறு இந்தப் புனித ஸ்தாபகர்கள் செய்தார்கள். அவர்களது ஞானப் பிள்ளைகள் அவர்களைப் போலவே மிகுந்த ஆர்வமுடன் மரியாயின் வியாகுல பக்தியைப் பரப்பினார்கள். அவர்கள் மரியாயின் ஊழியர்கள் அல்லது செர்வைட்ஸ் (தற்போது ஏழு வியாகுலங்கள் சபையினர்) என்று அறியப்பட்டார்கள். கறுப்பு உத்தரியத்தைத் தரித்து ஊழியம் செய்து வரும் இந்த ஊழியர்களின் நல்ல ஊழியத்திலும், பேறுபலன்களிலும் இதில் உறுப்பினர்கள் அல்லாதவரும் பங்கு பெறலாம். இந்த உத்தரியம் ஐந்து மடிப்புள்ள உத்தரியம் என்றும் அழைக்கப் படுகிறது. பக்தியோடு இந்த உத்தரியத்தை அணிபவர்கள் பல வரப்பிரசாதங்களையும், நன்மைகளையும் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் மரியாயின் வியாகுலங்களின்மீது கட்டாயம் பக்தி கொண்டிருக்க வேண்டும்.