பரிகாரப் பக்தியை சேசுவும் மாதாவும் கேட்ட அபூர்வமான காட்சி

பாத்திமா சிறுவர்களுக்கு நரகத்தைக் காட்டிய பின் மாதா: பாவிகள் நரகத்தில் விழுவதைத் தடுத்து நிறுத்த, ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்றும், முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்க வேண்டுமென்றும் கேட்க வருவேன் என்று கூறியிருந்த படியே அவற்றைக் கேட்க வந்தார்கள்.

டிசம்பர் மாதம் 10-ம் தேதி 1925-ம் ஆண்டு போந்தவேத்ரா என்னும் இடத்திலுள்ள அர்ச். டோரதி யம்மாள் சபையில் லூஸியா நவகன்னியாயிருந்தாள். அன்று பால சேசுவும் மாதாவும் அவளுக்குத் தரிசனையானார்கள். சேசு 10 வயதுச் சிறுவனாக ஒரு சிறு ஒளி மேகத்தில் நின்றபடி காட்சி தந்தார். முழங்காலிட்டிருந்த லூஸியாவின் தோளில் தன் இடது கையைப் படிய வைத்தபடி மாதா தோன்றி னார்கள். அவர்களின் வலது கையில் முட்கள் குத்தி நிறைந் திருந்த ஒரு இருதயம் இருந்தது. சேசுலூஸியாவைப் பார்த்து: "உன் மிகப் பரிசுத்த அன்னையின் மாசற்ற இருதயத்தின் மீது இரக்கப்படு. நன்றியற்ற மனிதர் ஒவ்வொரு கணமும் அதைக் குத்தும் முட்களால் அது நிறைந்துள்ளது. பரிகார முயற்சி செய்து அவற்றை எடுப்பதற்கு யாருமில்லை ” என்றார்.

இதன்பின் மாதா லூஸியாவிடம்: “என் மகளே! நன்றியற்ற மனிதர்கள் தங்கள் தூஷணங்களாலும் நன்றிக் கேட் டினாலும் ஒவ்வொரு கணமும் குத்துகிற முட்களால் சூழப்பட்டிருக்கிற என் இருதயத்தைப் பார்! நீயாவது எனக்கு ஆறுதலளிக்க முயற்சி எடு. இதை நீ அறிவி:

தொடர்ச்சியாக ஐந்து முதல் சனிக்கிழமைகளில் எனக்கு நிந்தைப்பரிகாரம் செய்யும் கருத்துடன் :

- பாவசங்கீர்த்தனம் செய்து,

- திவ்ய நற்கருணை உட்கொண்டு, 

- 53 மணி ஜெபமாலை சொல்லி,

- தேவ இரகசியங்களைத் தியானித்தபடி கால் மணி நேரம் என்னுடன் செலவிடுபவர்களுக்கு அவர்களுடைய மரண சமயத்தில், ஈடேற்றத்திற்குத் தேவையான எல்லா வரப்பிரசாதங் களையும் தந்து உதவி செய்வேன் என நான் வாக்களிக்கிறேன்" என்று கூறினார்கள். நம் தாயின் கனிந்த அன்பை இதில் காணாதவர்கள் யார்?

இவ்வாறு செபத்தாலும், பரித்தியாகங்களாலும், மாசற்ற இருதயத்துக்கு முழுவதுமாக நம்மை அர்ப்பணித்துக் கொள்வ தாலும், முதல் சனி பக்தியை அனுசரிப்பதாலும், ஜெபமாலையை அனுதினமும் சொல்வதாலும் அனுசரிக்கப்படுவதே மரியாயின் மாசற்ற இருதய பக்தியாகும். இதை சகோதரி லூஸியா “பரிகார பக்தி” என்றே குறிப்பிடுகிறாள். ஆகவே மாதாவின் மாசற்ற இருதய பக்தி என்பதே மாசற்ற இருதய பரிகாரப் பக்திதான்.