மாதாவின் அர்ச்சியசிஷ்டதனத்திற்கு இந்த துயரங்கள் ஒத்திருந்தன!

சர்வேசுரனுடைய தாயார் என்ற முறையில் மாதா ஒப்பிட முடியாத ஒரு பரிசுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். அவர்களது மேன்மையின் உயரத்தைக் கண்டுபிடிப்பவன் யார்? அல்லது அவர்களின் அர்ச்சியசிஷ்டதனத்தின் பேராழத்தை அறிய வல்லவன் யார்? அர்ச். தாமஸ் அக்குவி னாஸ் முயற்சித்தார். எல்லாம் வல்லவராலும் புதிதாய்க் கண்டுபிடிக்க முடியாத “மேன்மையான உன்னதமாக” மாதா இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு அவர் வந்தார். மாதாவின் அர்ச்சியசிஷ்டதனத்துக்கு ஒத்ததாக அவர்களின் வியாகுலங் களும் இருக்க வேண்டும் என்பது அவசியமாக இருந்தது. ஏனெனில் அர்ச்சியசிஷ்டவர்களின் துயரங்களும் வேதனை களும் அவர்களது அர்ச்சியசிஷ்டதனத்தின் அளவுக்கு ஏற்ப எப்பொழுதும் கூடுகிறது. இதே முறையில்தான் மாதாவின் வியாகுலங்கள் அவர்களின் உன்னதத்தின் அளவுக்கு ஒத்து இருந்தன. அந்த உன்னதம் கடவுளின் தாயின் உன்னதம் ஆகும். மாதாவின் வரப்பிரசாதங்களின் உயர்நிலையையும், பேறுபலன் களின் உன்னத நிலையையும் கண்டுகொள்பவன் யார்? மேலும் இதன் விளைவாக அப்படிப்பட்ட பரிசுத்ததனத் திற்கு ஏற்ற மிகப் பெரிய வியாகுலங்களும் தேவை என்ப தையும் காட்டி, அவர்களின் குற்றமற்ற நிலை முழுமையடை யவும், மிகச் சரியான முறையில் முடிசூட்டப்படவும் செய்துள்ளது. 

கடவுளின் தாயான மரியாயின் வியாகுலங்கள் மனித தாங்கும் சக்தியை விட மிகவும் அதிகமாக இருந்தன. ஞான ஆசிரியர்களின் ஒருமித்த கருத்து என்னவென்றால், கற்பனை செய்ய முடியாத மரியாயின் வியாகுலங்கள் அளித்த அழுத்தத்தினால் பாதிக்கப் பட்ட அவர்களது வாழ்வு ஆச்சரியமான, புதுமையான வழியில் பாதுகாக்கப்பட்டது. சிமியோனின் தீர்க்கதரிசனத்தின்போது மாதாதன் வியாகுலங்களை உண்மையான முறையில் முன்பே கண்டார்கள். கடவுளின் முழு வல்லமையின் உதவி இல்லா விட்டால், அந்த வியாகுலத்தின் மத்தியில் மரியாயின் ஆன்மா அவர்களது உடலை விட்டுப் பிரிந்திருக்கும்.

உண்மையாகவே மிகவும் ஆச்சரியமான விதத்தில் மாதா அமைதியாக இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் முழுமை யாக கடவுளின் சித்தத்திற்குப் பணிந்திருந்தார்கள். ஆனால் இந்நிலை அவர்களின் துயரங்களைக் குறைக்கவில்லை. மரியாயின் சுபாவம் ஒருபொழுதும் பாவத்தால் இடைஞ்சல் படவில்லை . எனவே அது மிகவும் வழக்கத்திற்கு மாறான மென்மையையும், வர்ணிக்க முடியாத உன்னத நிலையில் துன்பத்தால் பாதிக்கப்படும் நிலையையும் கொண்டிருந்தது. "மனிதர்கள் ஒருபோதும் என்னுடைய வியாகுலங்களின் வேதனையைப் புரிந்துகொள்ள முடியாது” என அர்ச். பிரிட்ஜித்தம்மாளுக்கு மாதா வெளிப்படுத்தியுள்ளார்கள். கல்வாரியில் மாதா வியாகுலத்தில் குனிந்தபடி இருக்கும் படமானது, இந்த உலகத்தில் வேதனையானது நேசத்தின் இரட்டைச் சகோதரியாக இருக்கிறது என்பதை நமக்குப் படிப்பிக்கிறது.