மரியாயின் வேதசாட்சியம் மற்ற அனைவருடைய வேத சாட்சியங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதால் திருச்சபை அவர்களை வேதசாட்சிகளின் இராக்கினி என்று அழைக் கிறது. அவர்களுடைய திருச்சரீரம் வாதிப்பவர்களால் காயப் படுத்தப்படவில்லை என்றாலும், அவர்களுடைய இருதயம், தன் திவ்விய குமாரனின் மீது தான் வைத்த பரிதாபமுள்ள இரக்கம் என்ற வாளால் ஊடுருவப்பட்டது. இந்த வியாகுலம் ஓராயிரம் முறை மரியாயை சாகச் செய்யும் அளவுக்கு மிகப் பெரியது.
மரியாயின் இந்த வியாகுலம் சகல மனிதருக்கும் சம அளவில் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்குமானால், அவர்கள் எல்லோருமே உடனடியாக மரித்திருப்பார்கள் என்னும் அளவுக்கு அது பயங்கர மானதாக இருந்தது என்று அர்ச். சியென்னா பெர்னார்தீன் கூறுகிறார். சேசுவின்மீது மாமரி கொண்டிருந்த நேசம் எவ்வளவு அதிகமாக இருந்ததோ, அவ்வளவு அதிகமாக அவரது பாடுகளைப் பற்றி மாமரி அனுபவித்த வியாகுலமும் அதிகமாக இருந்தது. எனவே நாம் உண்மையாகவே இப்படிக் கூறலாம்: ஓராயிரம் முறை வேதசாட்சிய மரணம் அடைவதையும் விட அதிகமான வியாகுலத்தை மாமரி அனுபவித்தார்கள், ஏனெனில், தன் சொந்த உயிரையும் விட அதிகமாக அவர்கள் சேசுவை நேசித்தார்கள். கடவுளை நோகச் செய்யாமல், துன்பங்களிலிருந்தும், மரணத் திலிருந்தும் தன் திருக்குமாரனை விடுவிக்க தன்னால் முடியும் என்றால், அதற்காக ஓராயிரம் தடவைகள் தன் உயிரைப் பலியாக்கவும் அவர்கள் மகிழ்ச்சியோடு சம்மதித்திருப் பார்கள்.
நமதாண்டவர் புதுமையான விதத்தில் தம் திருத் தாயாரைத் தாங்கியிராவிட்டால், தனது இந்த வேதசாட்சியத் தைத் தாங்கி அவர்கள் உயிர் பிழைத்து இருந்திருக்க முடியாது என்று ஒரு சம்மனசானவர் அர்ச். பிரிஜித்தம்மாளுக்கு வெளிப் படுத்தினார். ம அர்ச். விக்டர் ரிச்சர்ட் கூறுவதாவது: “வேதசாட்சிகளில், அவர்களது நேசத்தின் ஆழமானது, அவர்களது துன்பங்களின் கொடூரத்தைக் குறைத்தது. ஆனால் தேவதாயிடம் அது வித்தி யாசப்பட்டது. எவ்வளவு அதிகமாக அவர்கள் சேசுவை நேசித் தார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் துன்பப்பட் டார்கள், அவர்களுடைய வேதசாட்சியம் அவ்வளவு பெரிய தாக இருந்தது.” அர்ச். ஆன்செல்மும் இதையே அறிவிக் கிறார்: “ஓ, அன்னையே! வேதசாட்சிகளின் சரீரங்களின்மீது எத்தகைய வாதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தாலும், நீங்கள் அனுபவித்த வேதனைகளோடு ஒப்பிடும்போது, அவை மிகவும் குறைவானவைதான்!” அர்ச். பெசில் இதுபற்றி, “சூரியன் தன் ஒளியில் எல்லா நட்சத்திரங்களுக்கும் அப்பாற் பட்டதாக இருப்பது போலவே, மாமரியின் வியாகுலங்களும் மற்ற எல்லா வேதசாட்சிகளின் எல்லா வாதைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது.” மரியாயின் வேதசாட்சிய மானது அவர்களது வாழ்நாள் முழுவதும் நீடித்திருந்தது. ஏனெனில் சிமியோனின் தீர்க்கதரிசனத்தின்படி, அவர்களது திவ்விய குமாரனின் திருப்பாடுகளைப் பற்றிய தெளிவான அறிவு மாதாவுக்குத் தரப்பட்டிருந்தது. அவர்களுடைய சுயம் முழுவதும் கசப் பினுள் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. அவர் களுடைய ஆத்து மத்தை ஊடுருவிய வாள்கள், அவர்களின் பாவமற்ற சரீரத்தில் இருந்த ஒவ்வொரு நரம்பையும், தசைநார்களையும் கூட ஊடுருவின. மற்ற வேதசாட்சிகளுக்கு அவர்களின் வேதனை களின்போது வழங்கப்பட்ட ஆதரவு கூட மாமரிக்கு வழங்கப் படவில்லை. தங்கள் வேதனைகளின் போது, வேதசாட்சிகள் தங்கள் உள்மனதில் பார்வையை சிலுவையில் அறையுண்ட சேசுவின்மீது திருப்பினார்கள். அவருடைய வரப்பிரசாதமும் நேசமும் அவர்களைப் பலப்படுத்தி, அவர்களுக்கு ஆறுதலைக் கொடுத்தது. சேசுவின் நேசத்தின் தீச்சுவாலைகள் அவர் களுடைய சித்திரவதையின் நெருப்புகளைக் குளிர்வித்தன, கசையடிகளின் கொடூரத்தை மென்மையாக்கின, வாளின் கூர்மையை மழுங்கச் செய்தன. ell ore
ஆனால் தன் கொடிய வியாகுலத்தில் மாமரி சிலுவை யடியில் நின்றபோது, அவர்கள் யாரிடம் தன் பார்வையைத் திருப்பியிருக்க முடியும்? சேசுவின் மீதா? ஆ. மிகச் சரியாக அவர்களுடைய திவ்விய குமாரனின் தோற்றம்தானே அவர் களுக்கு அனைத்திலும் அதிகக் கொடிய வேதனையைத் தந்தது! அவர்கள் அவருடைய தாயாக, அனைத்து தாய்மாரையும் விட அதிக நேசமுள்ள தாயாக, வேறு எந்தத் தாயும் நேசித்திருக்க முடியாத அளவுக்கு நேசிக்கிற தாயாக இருந்தார்கள். எல்லாத் தாய்மாரும் ஒன்றிணைந்து நேசிக்கக் கூடியதையும் விட, அவர்களுடைய ஆயிரம் மடங்கு பாசங்களும் கூட ஒரே யொரு நேசச் செயலாக ஒன்றிணைக்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும்விட அதிகமாக மாதா தன் சேசுவை நேசிப்பவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய இருத யத்தில் சுபாவமான ஒரு நேசம் இணைக்கப்பட்டிருந்தது. அதைக் கொண்டு அவர்கள் சேசுவைத் தன் திருமகனாக நேசித்தார்கள், அப்படியே சுபாவத்திற்கு மேலான நேசமும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. அதைக் கொண்டு அவர்கள் அவரைத் தன் கடவுளாக நேசித்தார்கள். - சேசு, மாதாவின் மகனாக இருந்தார், அதுவும் அவர் எப்பேர்ப்பட்ட மகனாக இருந்தார்! மிக அதிசயமான விதத்தில் அவர் அவர்களின் மகனாக இருந்தார். அவரே மாதாவின் பொக்கிஷமாகவும், அவர்களுடைய வாழ்வின் வாழ்வாகவும், அவர்களுடைய எல்லாமுமாகவும் இருந்தார்! இந்தக் காட்சியில் எப்பேர்ப்பட்ட துயரமும், வேதனையும் அவர்களை ஊடுருவியிருக்கும் என்பது தெளிவாகிறது. சேசு, மாதாவின் சர்வேசுரனாகவும் இருந்தார்! ஆனால் துப்பப் படுதலும், எள்ளி நகையாடப்படுதலும், பரிகசிக்கப்படு தலும், செந்நிற வரிகளால் திருச்சரீரம் நிறையும் அளவுக்கு கசைகளால் அடிக்கப்படுதலும், பயங்கரமுள்ள காயங்களின் வழியாக இரத்தம் சிந்துதலும் அவருக்கு எத்தகைய அவமானங்களாக இருந்தன! மனம்
அவர்களுடைய திருக்குமாரனும், சர்வேசுரனுமானவர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த வாதைகள், இந்தப் பரிதாபத்திற்குரிய தாய்க்கு எப்பேர்ப்பட்ட கொடிய வேதனையைத் தந்திருக்கும்! சிலுவையினடியில் நின்றபோது, மாமரியின் ஆத்துமத்தை வெள்ளமென நிரப்பிய கடும் வேதனையை ஆராய்ந்து அறிய முற்படுவது பயனற்றதாகவே இருக்கும்! வேதசாட்சிகளின் மகிழ்ச்சியும், ஆறுதலுமா யிருந்த அதே சேசுநாதர், தம்முடைய தாயாருக்கோ, அனைத்திலும் பெரிய துன்பங்களின் காரணமாக இருந்தார். ஒரு முறை தமது மனித சுபாவத்தாலும், மறுமுறை தம் தேவ சுபாவத்தாலுமாக அவர் அவர்களை இருமுறை சிலுவையில் அறைந்தார். தம் தாயார் வியாகுலங்களை அனுபவிக்க வேண்டும் என்று சேசு சித்தம் கொண்டார். ஏனெனில் இரட்சகருடைய திருமாதா என்ற முறையில் அவர்கள் அவருடைய இரட்சணிய அலுவலில் பங்கு பெற வேண்டி யிருந்தது. எந்த வேதசாட்சியமும் அவர்களுடைய வேதசாட்சியத் திற்கு ஒருபோதும் இணையாயிருந்தது கிடையாது! ஆம், சர்வேசுர னுடைய இரக்கம் எங்கே மாபெரும் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்ததோ, அதே சிலுவையின் அடியில் மாமரி வேதசாட்சி களின் இராக்கினியாக ஏற்படுத்தப்பட்டார்கள். அதே வேளையில் அவர்கள் நம் தாயாகவும், துயரப்படுவோருக்கு ஆறுதலாகவும், கிறீஸ்தவர்களுடைய சகாயமாகவும், பாவிகளுக்குத் தஞ்சமுமாக ஆனார்கள்.
சேசுவின் மரணத்தால் நாம் மீட்கப்படுவோம் என்ற ஒரே ஒரு விஷயம்தான் சேசுவின் துயரங்களின்போது மாதாவின் ஒரே ஆறுதலாக இருந்தது. நம் இரட்சணியத்திற்காக மாதா சேசுவை முழு மன சம்மதத்தோடு ஒப்புக்கொடுத்தார்கள். ஆம், “ஒரே சிலுவையில் இருவர் தொங்கினார்கள்” என்று அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் சொல்லும் அளவுக்கு, சேசுவோடு சேர்ந்து அவர்கள் நிறைவேற்றிய பலி மேன்மை மிக்கதாக இருந்தது.