தூய இஞ்ஞாசியார் செபம்

இறைவா, தாராள மனதை எனக்குத் தந்தருளும்! உமக்கு உகந்த விதத்தில் அன்பு காட்டவும், கணக்கிடாமல் கொடுக்கவும், காயத்தைக் கவனியாமல் போரிடவும், ஓய்வைத் தேடாமல் உழைக்கவும், கைம்மாறு கருதாமல் கொடுக்கவும் எனக்கு வேண்டிய மனப்பக்குவத்தைத் தாரும். உமது திருவுளத்தை நிறைவேற்றுகிறேன் என்பதில் மட்டும் நிறைவு காண எனக்கு வரம் அருளும். 

ஆமென்.