அப்போது கெதெயோன் கடவுளை நோக்கி, "நீர் சொன்னபடி என்னைக் கொண்டு இஸ்ராயேலரை மீட்பாரானால்,
நான் இந்த ஆட்டு மயிரைக் களத்தில் போடுவேன்; பனி மயிரிலே மட்டும் பெய்து, பூமியெல்லாம் ஈரம் இல்லாதிருக்குமானால், நீர் சொன்னபடி இஸ்ராயேலை என் கையால், மீட்பேன் என்று அறிந்து கொள்வேன்" என்றான்.
அவ்வாறே நடந்தது. நீதிபதிகள் 6 : 37-38
கெதெயோன் கடவுளை நோக்கி, "ஆட்டு மயிரைக் கொண்டு இன்னும் ஓர் அடையாளம் கேட்கத் துணிவேனேயானால், ஆண்டவரே, நீர் என்மேல் கோபம் கொள்ளாதீர்; மயிர்மட்டும் காய்ந்திருக்கவும், பூமி எங்கும் பனியால் நனைந்திருக்கவும் மன்றாடுகிறேன்" என்றான்.
அன்றிரவு அவன் கேட்டபடியே கடவுள் செய்தார்; ஆட்டுமயிர் காய்ந்திருக்கத் தரையில் மட்டும் பனி விழுந்திருந்தது.
இந்த பகுதியைத் தியானிக்கும் முன்..
கெதயோன் ஆண்டவரைப்பார்த்து சொல்லும் சொல் மிக முக்கியமானது..
“ நீர் சொன்னபடி என்னைக் கொண்டு இஸ்ராயேலை மீட்பாரானால்…”
இந்த வார்த்தை வருங்காலத்தில் வரக்கூடிய கடவுளின் மாபெரும் மீட்புத்திட்டத்தை முன்னறிவிக்கிறது..
அந்த மீட்புத் திட்டத்தில் வார்த்தையான உன்னதரை உலகிக்கொண்டு கொண்டுவர கடவுளால் பயன்படுத்தப்படப்போவது யார்?
தேவமாதா? அவர் எப்படி இருக்க வேண்டும்? அவரிடம் என்ன தகுதி இருக்க வேண்டும்..
பாவமின்மை… மாசின்மை.. பரிசுத்தம் மட்டுமே இருக்க வேண்டும்.. ஒரு பாவமில்லாத அமல உற்பவப் படைப்பாக மாதா இருக்க வேண்டும்..
அப்போதுதான் வார்த்தையானவர் அவரிடத்தில் மனு உருப்பெறமுடியும்..
கடவுள் எங்கே பிறப்பார்..? கடவுள் பிறக்க மாசு நிறைந்த உலகில் இடம் எங்கே இருக்கிறது.. கடவுள் அருளால் மட்டுமே நிறைந்து நிற்கும், பாவமாசு கரை ஒரு துளி கூட இல்லாத மகா பரிசுத்த ஆலயமான தேவ மாதாவின் மாசற்ற திரு உதிரத்தில் உருப்பெற்று அவர் திருவயிற்றில் தங்கி வளர்துதானே பிறக்க முடியும்…
மேலே உள்ள இரண்டு பகுதியுமே ஒன்றே ஒன்றைத்தான் சொல்லுகின்றன..
மீட்பர் பிறப்பது அமல உற்பவத்தில் மட்டுமே..
1. முதல் பகுதி கடவுளின் அருளின் முழுமையைக் குறிக்கிறது. அங்கேதான் கடவுள் பிறக்க முடியும்..
2. இரண்டாவது பகுதி பாவ மாசின்மையை குறிக்கிறது. அங்கேதான் கடவுள் பிறக்க முடியும்..
இப்போது மீண்டும் லூக்காஸ் நற்செய்திக்கு செல்வோம்..
" அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே "
" மரியே, அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.”
லூக்காஸ் 1 : 28,30
மாதா எங்கெல்லாம் இருக்கிறார்கள்.. உண்மை என்னவென்றால் மாதா பைபிள் முழுவதும் இருக்கிறார்கள்.. ஆதியாகம் முதல் திருவெளிப்பாடுவரை..
இன்றைய நற்செய்தியில் கூட மாதா இருக்கிறார்கள்..
“கெட்ட கனி தரும் நல்ல மரமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரத்தையும் அறிவது அதனதன் கனியாலே.” லூக்காஸ் 6 : 43-44
இதைப் பற்றி வேறொரு பகுதியில் விரிவாகப்பார்ப்போம்.. ஒன்றே ஒன்றை மட்டும் இப்போது பார்ப்போம்..
ஆண்டவர் சொல்லுகிறார்.. கனியை வைத்துத்தான் மரத்தை அறிய வேண்டும் என்று.. மரத்தை வைத்து கனியை அறிய வேண்டும் என்று சொல்லவில்லை..
அப்படியென்றால் மரம் எவ்வளவு முக்கியமானது..
“கனி நல்லது.. மரம் கெட்டது.. எங்களுக்கு கனி வேண்டும் ஆனால் மரம் எங்களுக்குத் தேவையில்லை” என்று ஒரு பிரிவினர் சொல்லுகிறார்களே.. அது எந்த வகையில் நியாயம்..?
மேலும் அவர்கள் பேசுவது ஆண்டவரின் வார்த்தைக்கே எதிரான பேச்சு அல்லவா? “ உமக்கு என்னய்யா தெரியும்.. எங்களுக்கு எல்லாம் தெரியும்” என்றுதானே சொல்ல வருகிறார்கள்.. அது இருக்கட்டும்..
நாம் நம் தாயை தியானிப்போம்..
ஆக மீட்புத் திட்டத்தின் முன்னடையாளம், மாதாவின் அமல உற்பவத்தின் முன்னடையாளம்.. கெதயோனின் கம்பளம்..
யார் மகிழ்ந்தால் என்ன? மகிழாவிட்டால் என்ன ? நாம் மகிழ்வோம் நம் தாயைக் குறித்து… நம் நேச பிதாவைக் குறித்து..
அப்படியே.. இயேசுவின் நாமமே திருநாமம் மெட்டில் பாடுவோம்..
“ மரியன்னை புகழினை நீ பாடு- பைபிள்
முழுவதும் முழுவதும் உள்ள அன்னை புகழ்பாடு “
“ எல்லாம் நனைந் தாலும் நனை யாது நின்ற
கெதயோனின் கம்பளமுமே அமலோற்பவம்”
“ மரியன்னை புகழினை நீ பாடு- பைபிள்
முழுவதும் முழுவதும் உள்ள அன்னை புகழ்பாடு..
நன்றி : வேதாகம மேற்கோள்கள் மற்றும் பாடல், வாழும் ஜெபமாலை இயக்கம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !