தேவமாதா யார்? பகுதி-6 : மாதா கன்னியும் தாயுமானவர்கள்..

எரிகின்ற முட்செடியில் மோயிசனுக்கு காட்சியில் மாதா..

“ஆண்டவரோ, ஒரு முட்செடியின் நடுவினின்று, நெருப்புக் கொழுந்து உருவத்தில் அவனுக்குக் காட்சியளித்தார். அவன், முட்செடி வெந்து போகாமலே எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.”

யாத்திராகமம் 3 : 2

எரிகின்ற முட்செடி மாதாவின் முன் அடையாளமே..

மாதா கன்னியும், தாயுமானவர்கள்..

முட்செடி கொழுந்துவிட்டு எரிகிறது.. ஆனால் அது கருகவில்லை..

கருகாமலே எரிகின்றது.. மாதாவின் கன்னிமையின் தூய்மை கெடாமலே மாதா கடவுளின் தாயாக இருக்கிறார் என்பதை அது அறிவிக்கிறது..

இந்த சம்பவம் மட்டுல்ல பழைய ஏற்பாட்டு பல சம்பங்கள் காட்சிகள் புதிய ஏற்பாட்டின் முன்னடையாளமாக இருக்கின்றது..

முக்கியமாக ஆண்டவர் இயேசுவையும், தேவ மாதாவையும் மறைமுகமாக சில வேளைகளில் நேரிடையாக அறிவிக்கும் உணர்த்தும் பல சம்பவங்கள் இருக்கின்றன.. அதே போல் திவ்ய நற்கருணை ஆண்டவருக்கு முன்னடையாளம் ஒரு சம்பவங்கள் அல்ல பல சம்பவங்கள் உள்ளன..

இப்போது மீண்டும் முட்செடிக்கு வருவோம்..

ஆகவே, மோயீசன்: “நான் போய், முட்செடி வெந்துபோகாமல் எரிகிற இந்த அதிசயக் காட்சியைப் பார்ப்பேன் என்றான்.”

யாத்திராகமம் 3 : 3

ஆனால் கடவுள் அதற்கு தடைபோடுகிறார்..

அவர்: “அணுகி வராதே! உன் காலணிகளைக் கழற்றி விடு. ஏனென்றால், நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி “ என்றார்.

இங்கேதான் இந்த இரண்டு  உயிருள்ள வார்த்தைகளையும் நாம் தியானிக்க வேண்டும்..

முதலில் மோயிசன் செய்தது போலவே இன்று பலரும் செய்கிறார்கள்..

மாதாவை ஆராய்ச்சி செய்ய பலரும் முயற்சி செய்கிறார்கள்.. அவர்கள் உண்மையில் மாதாவை ஆராய்ச்சி செய்யவில்லை. கடவுளை ஆராய்ச்சி செய்கிறார்கள்.. வேதாகமத்தை புரட்டு புரட்டு என்று புரட்டி விட்டு பரிசுத்த ஆவியானவரின் துணையை நாடாமல் அதை வாசித்துவிட்டு வாய்க்கு வந்தபடி விளக்கம் கொடுத்து தப்பரையில் சிக்குவது மட்டுமல்ல பிதாவுக்கு எதிராகவும், சுதனுக்கு எதிராகவும் முக்கியமாக பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகவும் பேசி வருகிறார்கள்..

ஆராய்ச்சி செய்வதற்கு பதிலாக அன்பு செய்தால் மாதாவையும் கண்டுபிடிக்கலாம்.. கடவுளையும் கண்டுபிடிக்கலாம்..

பிதாவானவர் மோயிசனுக்கு ஒரு எல்லை போட்டுவிட்டுவிட்டார் ( Boundary) அதற்கு மேல் அவரைத்தாண்ட ஆண்டவர் அனுமதிக்கவில்லை..

பக்கத்திலே வராதே.. உன்னால் கண்டுபிடிக்கவும் முடியாது.. உனக்கு அந்த தகுதியும் கிடையாது.. ஏனென்றால் அது பரிசுத்த இடம்.. மேலும் உன் செருப்பை கழற்றிவிடு…

இந்த காட்சியை அப்படியே உள்வாங்கி நம் மனக்கண்முன் கொண்டுவந்து தியானித்து விட்டு நேராக புதிய ஏற்பாடு லூக்காஸ் முதல் அதிகாரத்திற்கு சென்றால்..

“ஆறாம் மாதத்திலே, கபிரியேல் தூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்”

இதிலிருந்து ஆரம்பித்து..

" அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே "

" மரியே, அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.”

“இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.”

"இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே"

"பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும்.”

“ஏனெனில், கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை"

வரை வாசித்தால்..கடவுள்,  வார்த்தையான சர்வேசுவரனை மாதாவின் உதிரத்தில் உதிக்கவும், அவர் திருவயிற்றில் தாங்கவும், அவருக்கு பாலூட்டவும், உணவூட்டவும், தன் மடியில் வைத்து தாலாட்டவும், கரத்தை பிடித்து நடத்தவும், பைபிள் வாசிக்க கற்றுக்கொடுக்கவும் அவரோடு 33 ஆண்டுகள் வாழவும், கல்வாரிவரை உடன் பயணிக்கவும், மீண்டும் கல்வாரியியில் தன் மடியில் தாங்கவும் எந்த தடையும் விதிக்கவில்லை..விதிக்கவில்லை விதிக்கவேயில்லை..

அப்படியென்றால் மாதாவின் பரிசுத்தம் எந்த அளவிற்கு உயர்வானது, உந்நதமானது,மேன்மையானது..

ஆனால் ஒரே ஒரு விலக்கை பிதாவானவர் போட்டுதான் மாதாவை இந்த உலகிற்கே அனுப்பினார்.. பாவமில்லாமை.. ஜென்மப்பாவம் கூட இல்லாமை..

அதுதான் நம் தேவ மாதா அமல உற்பவியாக உதித்தார்.. கன்னிமையின் மாட்சி குன்றாமல் உன்னதருக்கே தாயானார்.. கன்னி மற்றும் தாய்..

முட்செடி எரியும் ஆனாது அது கருகாது..

பிரிவினை சபையினருக்கு ஒரு கேள்வி..

இன்னுமா உங்களுக்கு மாதாவின் பரிசுத்தம் புரியவில்லை.. ? விளங்கவில்லை.. பரிசுத்தம் இல்லாத இடத்தில் கடவுள் இருப்பாரா? வசிப்பாரா? வாழ்வாரா?

மாதாவின் வயிற்றில் ஆண்டவர் என்ன செருப்பு போட்டுகொண்டா இருந்தார்?

ஆண்டவருடைய திருப்பேழையை தொட்ட ஓசா நாசமானான்.. ஆண்டவரின் கோபத்தால் ( 2 சாமுவேல் 6:6)..

ஆண்டவரைத் தொட 33 வயது வரை அனுமதிக்கப்பட்ட அந்த பரிசுத்த தாயின் பரிசுத்ததை உணராதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதுதான் உண்மை..

இப்போது நம்மவர்களிடம் ஒரு கேள்வி..

மோயிசனிடம் கடவுள் சொன்னார் “ உன் செருப்பைக் கழட்டு.. நீ நிற்கின்ற இடம் பரிசுத்த பூமி “ பரிசுத்த பூமியான.. பரிசுத்த இடமான கடவுள் இருக்கும், திவ்ய நற்கருணையில் மூவொரு கடவுளும் பிரசன்னமாகி இருக்கும் கடவுளின் ஆலயத்திற்குள் செருப்பு கால்களோடும், பூட்ஸ் கால்களோடும், சர்வ சாதாரணமாக எந்த ஒரு பயமும் இல்லாமல் உங்களால் செல்ல முடிகிறது.. இருக்க முடிகிறது..?

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே..

ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை..

நன்றி : வேதாகம மேற்கோள்கள் (முந்தைய பதிவுகளையும் சேர்த்து) வாழும் ஜெபமாலை இயக்கம்..

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !