தேவமாதா யார்? பகுதி-8 : மாதாவின் நித்திய கன்னிமைக்கு சான்றுகள்!

“பின்னர் அவர் கீழ்த்திசையை நோக்கியுள்ள தூயகத்தின் புறவாயிலுக்கு என்னைத் திரும்பவும் கூட்டி வந்தார்; அந்த வாயில் பூட்டப்பட்டிருந்தது.

அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, "இந்த வாயிலின் கதவு மூடப்பட்டே இருக்கும்; திறக்கப்படாது; யாரும் இதன் வழியாய் உள்ளே நுழையக்கூடாது; ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் இதன் வழியாய் உள்ளே சென்றார்; ஆகவே இது மூடப்பட்டே இருக்கும்; “

எசேக்கியேல் 44:1-2

இதில் மாதா கன்னித்தாய்.. என்ற சான்றும் இருக்கிறது.. மேலும் இதே பகுதியை ஒத்த உன்னத சங்கீதத்தில் கீழே உள்ள கடவுளின் உயிர்தரும் வார்த்தை நமக்கு மேலும் மகிழ்ச்சி தருவதாயிருக்கும்..

“பூட்டப்பட்ட தோட்டம் நீ, என் தங்காய்! என் மணமகளே! பூட்டப்பட்ட தோட்டம் நீ, முத்திரையிடப்பட்ட நீரூற்று நீ. “ 

உன்னத சங்கீதம் 4: 12

இப்போது இசையாஸுக்கு செல்லலாம்.. பொருத்தமாக இருக்கும்..

“ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்: “இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்;” 

இசையாஸ் 7 : 14

மாதா அமல உற்பவி.. மாதா நித்திய கன்னி.. மாதா  கன்னியும், தாயுமானவர்கள் என்பதற்கு பைபிளில் ஏராளமான முன்னறிவுப்புகள்… ஏராளனமான ஆதாரங்கள் இருக்கின்றன..

மாதாவின் கன்னிமையை ஒரு நாவு பழிக்கிறதென்றால்.. அது கடவுளைப் பழிக்கிறது என்று பொருள்.. எதையும் சீராக.. நேராக..நேர்மையாக.. தீர்க்கமாக சிந்திக்காமல் குறுக்கு வழியில் குறுக்கு புத்தியில் சிந்திந்து மாதாவைப் பழித்துரைக்கும் நாவுகளுக்கு ஐயோ கேடு வந்தே தீரும்..

அவர்கள் மாதாவை புரிந்துகொள்ள என்று சொல்வதைவிட கடவுளைப் புரிந்துகொள்ளவும், மாதாவை அவர்கள் தாயாகவும் ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்..

சரி மாதாவின் புதல்வர்கள் என்ன செய்ய வேண்டும்..

“ அவளுடைய புதல்வர் எழுந்து அவளைப் பேறுடையாள் என்று முழங்கினார்கள். அவள் கணவனும் அவளைப் புகழ்ந்தான்.” 

பழமொழி ஆகமம் 31 : 28

மாதாவின் புதல்வர்கள் அவர்களைப் புகழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள்..இருக்கிறார்கள்.. இருக்கிறோம்.. “அருள் நிறைந்த மரியாயே வாழ்க ! “ என்று அருள் நிறை மந்திரத்தில்..

அவருடைய கணவன் அவரைப் புகழ்ந்தாரா? 

எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே.” 

லூக்காஸ் 1 : 42

எலிசபெத்தம்மாள் புகழவில்லை.. புகழ்ந்தது பரிசுத்த ஆவியானவர்..

இதை விரிவாக இன்னொரு பகுதியில் பார்க்கலாம்..

நமக்கு மற்றவரைப் பற்றி கவலையில்லை.. நாம் நம் தாயை புகழ்கிறோமா.. அதுதான் முக்கியம்..

நம் தாயைப் புகழ்வது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.. நமக்கு மட்டுமல்ல அது மோட்சத்திற்கும், தூய தமத்திருத்துவத்திற்குமே மகிழ்ச்சி அளிக்கிறது..

நம்முடைய புகழ்ச்சியால் மாதா வலிமையடைத்து பிசாசை ஒழித்துக்கட்டுகிறார்கள்.. அதையெல்லாம் பின் வரும் பகுதிகளில் பார்க்கலாம்..

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம்தாரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம்… ஜெபிப்போம் ஜெபமாலை.. “

நன்றி : வேதாகம மேற்கோள்கள், பாடல் “ வாழும் ஜெபமாலை இயக்கம் “

 நம் நேசப் பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !