சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 61

குருக்கள் நிறைவேற்றும் திருப்பணியே சிறந்த பொது வழிபாடு. குருத்துவ வழிபாட்டுக் கிரிகையைத் திருப்பணி என்று அழைப்பது பொருத்தமானது. இச்சொல் நம் பரிசுத்த வேதத்தில் தொன்றுதொட்டு உபயோகிக்கப்பட்டு வரும் லித்தூர்ஜியா” (Liturgia) என்ற வார்த்தைக்கு “பொதுப் பணி” என்று பொருள்

உரோமை மக்கள் பண்டை காலத்திலே சமூகப் பொது அலுவல்களை லித்தூர்ஜியா என்று அழைத்தார்கள் உலக, ஆன்மீகப் பொது ஊழியம் இரண்டையுமே லித்தூர் ஜியா என்றார்கள். அதாவது அரசாங்க ஊழியர்கள் செய்த அலுவல்களும், கோயில் ஊழியர்கள் குருக்கள் தேவை வழிபாட்டு அலுவல்களும் இந்த ஒரே சொல்லால் குறிக்கப் பட்டன.

 ஏனென்றால், நாட்டு அதிகாரிகளும், கோயில்   குருக்களும் பொதுநலப் பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள் அந்நியமனப்படி அவர்கள் கடமையேற்று, மக்களின் நன்மைக்காக ஊழியம் புரிகிறார்கள். அவ்வூழியம் அவர்க ளுடைய வாழ்க்கைக்கு வேண்டிய பொருளைப் பெற உரிமை அளிக்கிறது. ஆகவே, இப்பொதுநலப் பணியின் அடிப்படைத் தத்துவம் யாதெனில்: அதற்கான நியமனம். தேவாராதனைத் திருப்பணியில் அவ்வாறு. ஆதலின் “ஆரோன் பால் சர்வேசுரனால் அழைக்கப்பட்டாலொழிய ஒருவனும் இந்த மகிமைக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.

 அப்படியே கிறீஸ்து நாதரும் குருப்பிரசாதியாகும்படி தம்மைத் தாமே உயர்த்த வில்லை. ஆனால், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெனிப்பித்தேன் என்று அவரை நோக்கிச் சொன்னவரே அவரை உயர்த்தினார். அப்படியே வேறோரிடத்தில், நீர் மெல்கிசெதேக்கின் முறைமையின்படியே என்றென்றைக்கும் குருப்பிரசாதியாயிருக்கிறீர் என்று திருவுளம் பற்றுகிறார்” என்று அர்ச். சின்னப்பர் உரைத்தார் (எபி. 5:4-6). மேலும் நியமிக்கப்பட்ட பொது ஊழியன் குறிப்பிட்ட ஒரு முறைமைப்படி அலுவல் புரிய வேண்டும். தான் விரும்பியபடி செய்ய முடியாது

ஆதலால், அபிஷேகம் பெற்ற குருவானவர் தமது குருத்துவ ஆற்றலுடன் குறிப்பிட்ட முறைமைப்படி நிறைவேற்றும் தேவ வழிபாடு திருப்பணி. கத்தோலிக்கத் திருப்பணியின் முறையை கிறீஸ்துநாதர் நிறுவியவைகளின் அடிப்படையில் சத்திய திருச்சபை ஏற்படுத்தியிருக்கிறது பூலோகத்தில் நீ எதைக் கட்டுவாயோா, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்” (மத். 16:19) என்று சேசுநாதர் இராயப்பருக்கு மொழிந்தது இதிலும் நிறைவேறுகிறது

தொடரும்...