சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 59

கடவுளை வழிபடுவதற்கு உள்ளத்தில் அன்பு வேண்டும் என்றால், மக்கள் ஒன்றுகூடி ஒருமனதாய் செபிப்பதும், தொழுவதும் எவ்வளவோ சிறந்தவை! ஆதலால்தான், “உங்களில் இரண்டு பேர் தாங்கள் மன்றாடிக் கேட்கும் எந்தக் காரியத்திலும் பூமியில் ஒருமனப்பட்டிருந்தால், அது பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவினால் அவர்களுக்குச் செய்தருளப்படும் ஏனெனில் என் நாமத்தினாலே எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே நான் இருக்கிறேனென்று திருவுளம்பற்றினார்” (மத். 18:19-20)

கூடிச் செபிப்பது மனிதரின் சமூக இயல்புக்கு ஒத்தது எனவே, எங்கும் எப்போதும் மக்கள் கூட்டம் தெய்வத்தை வணங்கி வந்திருக்கிறார்கள். திருவிழாக்கள் இப்பொழுது வழிபாட்டுக்கு உதவியாகவே ஏற்படுத்தப்பட்டன

ஆயினும், பொது வழிபாடு ஒழுங்காகவும், சிறந்த முறையிலும் நடைபெறுவதற்கு ஏற்ற வழி குருத்துவப் பணி குருக்கள், நாடு நகரம் என்ற மக்கள் சமுதாயங்களின் சார்பாக அர்ச்சனைகள் நிறைவேற்றிப் பிரார்த்திக்கிறார்கள். மக்களின் காணிக்கைகளை ஒப்புக்கொடுக்கிறார்கள். பலி செலுத்து கிறார்கள். அவர்களுடைய திருப்பணியின் பயனாக சர்வேசுரன் தந்தருளும் ஆசீர் பொதுவாக நாடு முழுவதற்கும், சிறப்பாக பூசை சடங்குகளுக்கு அவசியப்படும் பொருள் தந்து, அவைகளைச் செய்விப்பவர்களுக்கும் கிடைக்குமென்றும் மக்கள் நம்பினார்கள். ஆராய்ந்து பார்த்தால், இவ்வெண்ணமும் நம்பிக்கையும் சரிதானென்று விளங்கும். ஏனெனில், குருக்கள் கடவுளுக்கும், மனிதருக்கும் மத்தியஸ்தராக நியமனம் பெற்றவர்களானதால், அவர்கள்தான் திருச்சந்நிதியில் செல்லத் தகுதியும், பிரார்த்திக்க ஆற்றலும் கொண்டவர்கள் என்று கருதப்பட்டது

சர்வேசுரனும் தாம் தெரிந்துகொண்ட இஸ்ராயேல் மக்கள் மத்தியில் லேவி கோத்திரத்தாரை குருத்துவப் பணிக்கு

நியமித்து, அவர்களில் ஆரோனைப் பெரிய குருவாக்கி செபங்கள், காணிக்கைகள், பலிகள் ஒப்புக்கொடுக்கும் முறையையும் வகுத்து, கொண்டாட வேண்டிய திருவிழா களையும் நிறுவினார். பழைய ஏற்பாட்டின் குருத்துவம் திருப்பணியும் பல நூற்றாண்டுகள் நீடித்தன. இறுதியில் காலம் நிறைவேறின போது ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும் நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவருமாக தம்முடைய சுதனை சர்வேசுரன் அனுப்பினார்” (கலாத். 4:5). மனிதாவ தாரம் எடுத்த தேவ சுதன் “மெல்கிசெதேக்கின் முறைமையின் படியே பிரதான குருப்பிரசாதி என்று சர்வேசுரனால் நாமம் சூட்டப்பட்டார்” (எபி. 5:10; சங். 109:4). ஆதலால் சர்வேசுர னுக்கும் மனிதருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே, மனுஷனான சேசு கிறீஸ்துநாதர் (1 தீமோ. 2:5). அவர் என்றென்றைக்கும் குருவாயிருக்கிறார் (எபி. 6:20; 7:21, 24)

சேசு கிறீஸ்துநாதர் ஏக மத்தியஸ்தரான நித்திய குருவாதலால் அவர் வந்தது முதல் ஏனைய குருத்துவங்களும் திருப்பணிகளும் அர்த்தமற்றவையாகி விட்டன. அவர் வழியாக மட்டும் சர்வேசுரனுக்கு உகந்த வழிபாடும், மக்கள் தேவ வரப்பிரசாதம் பெறும் இரட்சணியமும் நிறைவேறுகின்றன இந்த வழிபாடு, வரப்பிரசாதப் பெருக்கும் உலகம் முடியும் மட்டும் நீடிக்குமாறு தாம் ஏற்படுத்தின திருச்சபையில் தேவ ஊழியத்துக்குத் தெரிந்தெடுக்கப்படுகிறவர்கள் தமது குருத்துவத்தில் பங்கு பெற்றுத் திருப்பணி புதிய ஏற்பாடு செய்திருக் கிறார். எனவே, கத்தோலிக்க வழிபாட்டின் தனிப்பெருஞ் சிறப்பு, கிறீஸ்துவின் குருத்துவம், திருப்பணியும் ஆகும் அப்போஸ்தலர்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த (உலகம் முடியுமட்டும் வரும்) மேற்றிராணிமார், குருக்களும், வம்ச வழியால் அல்ல, தேவ அழைத்தலின் பயனாகக் கிறீஸ்துவின் அதே குருத்துவத்தில் பங்கடைந்திருக்கிறார்கள். இவர்கள் நிறைவேற்றும் திருப்பணியும் கிறிஸ்து நாதருடையதே 

தொடரும்...