சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 37

ஏன் திரு இருதய பக்தியை மற்றெல்லாப் பக்திமுயற்சி களையும்விட மேலானதென்று சொல்கிறோம்? ஏனெனில் பரிசுத்ததனத்தையும், அதைக் காப்பாற்றுவதற்கு வேண்டிய புண்ணியங்களையும் நமது இருதயத்தில் பிறப்பிக்கவும் அதிகரிக்கவும் திரு இருதயப் பக்தியே மற்ற பக்திச் செயல்கள் எல்லாவற்றையும்விட அதியுந்நதமான வழியிருக்கிறது.

சகல இலட்சணங்களையும் சம்பூரணமாய்க் கொண்ட சேசுவின் திரு இருதயத்தை எச்சமயங்களிலும் நம் கண்முன் வைத்திருப்பதாலும், அதன் நற்குணங்களையும் நேசக் குறிகளையும் ஞாபகத்திற்குக் கொண்டுவருவதாலும், கண்டிப்பாக இவ்விரு தயத்தை நாம் நேசிப்போம். அதில் குடிகொண்டிருக்கும் அர்ச்சியசிஷ்டதனம் நமது நினைவுகளிலும் வார்த்தைகளிலும் செய்கைகளிலும் காணப்படும்.

அதற்கு சிநேகத்திற்குப் பதில் சிநேகம் காட்டவும், அதைக் கண்டுபாவிக்கவும் நமக்கு இருக்கும் ஆசையைத் தளர விடாது தூண்டி வருவோமாகில் அதனிடமிருந்து நம்மைப் பிரிக்க முயலும் சிருஷ்டிப் பொருட்களும், இன்னும் அதை மனவருத்தத்திற்கு உள்ளாக்கக் கூடிய சகலமும் நம்மை விட்டுப் புகைபோல் மறைந்து போகும் கடைசியாய் திரு இருதயத்திற்கு ஒத்த வண்ணம் நமது நடத்தையை உருவாக்கத் தேவையான புண்ணியங்களை அதிசீக்கிரத்தில் அடைவோம்

திரு இருதயப் பக்தியின் உந்நதத்தையும், அதனால் வரும் பிரயோசனங்களையும் சுருக்கமாய்ப் படித்தறிந்தோம் ஆனால் சேசுவின் திரு இருதயத்தின் மேல் மெய்யான பக்தி அவ்வப்போது அதைப்பற்றி உரையாடுவதிலும், அதன் பாடல் களைப் பாடுவதிலும், அதன் சுரூபங்களுக்கும், படங்களுக்கும்

வணக்கம் செலுத்துவதிலும் மாத்திரம் அடங்கியிருக்கிறது என்று நினைக்கக் கூடாது. 

சேசுவின் திரு இருதயம் நமது பாடல்களுக்கும், ஆராதனைகளுக்கும் தகுதியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இவ்வணக்க ஆராதனைகள் எவ்வளவு புகழ்ச்சிக்குரியதாயிருந்த போதிலும், இவைகள் மெய்யான பக்தியின் வெளியரங்க அடையாளங்களே ஒழிய மற்றப்படி யல்ல. நாம் சேசுவின் திரு இருதயத்திற்குக்காட்டும் இந்த வெளிப்படையான சிறப்புகள் அதற்கு முற்றிலும் பிரியமுள்ளதாயிருக்க வேண்டுமேயாகில், நமது நடத்தையும் அனுதினச் செயல்களும், நமது பாடல்களுக்கும், ஆராதனைச் சிறப்பு களுக்கும் ஒத்திருக்க வேண்டும். சேசுவின் திரு இருதயத்தில் காணப்படும் புண்ணியங்களை நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வார்த்தையில் சொல்வதானால், நாம் உத்தம கிறீஸ்தவர்களாய் நடக்க வேண்டும்

தொடரும்...