தேவமாதா யார்? பகுதி-37 : உன்னத சங்கீதத்தில் மாதா!

சங்கீதங்களில் மாதா மேலும் இருக்கிறார்கள்.. அதை பின்பு வேறொரு பகுதியோடு சேர்த்துப் பார்க்கலாம்.. இப்போது உன்னத சங்கீதத்தில்..

மாதாவின் பரிசுத்தத்திற்கும், அழகுக்கும், வல்லமைக்கும், கன்னிமைக்கும் சான்றுகள்.. ஒப்புமையோடு..

“ விடிவேளை வானம் போல் எட்டிப்பார்க்கும் இவள் யார்? நிலாவைப் போல் அழகுள்ளவள், கதிரவனைப் போல் ஒளிமிக்கவள், அணிவகுத்த படை போல் அச்சம் தருகிறாளே!"

உன்னத சங்கீதம் 6 : 9

இதையே நாம் திருவெளிப்பாட்டிலும் பார்க்க முடியும்..

“பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்.” 

திருவெளிப்பாடு 12 : 1

நிலா, சூரியன், நட்சத்திரம் மூன்றும் வந்துவிட்டதா?..

இதில் கொஞ்சம் வல்லமை கூடுதலாக இருகிறது…

அணிவகுத்த படைபோல் அச்சம் தருகிறாளே.. யாருக்கு..?

பிசாசுக்கும் அதன் தூதர்களுக்கும்..

திருவெளிப்பாட்டின் அடுத்த வசனத்திலே பிசாசைப்பற்றிய செய்தி வரும் அதற்கு அணிவகுத்த படைபோல் அச்சம் போல் அச்சம் தருபவள்.. இதோடு ஆதியாகமம் 3: 15 ஐயும் ஒப்பிட்டு பார்க்க முடியும்..

அடுத்து மாதாவின் கன்னிமைக்கு சான்று..

“ பூட்டப்பட்ட தோட்டம் நீ, என் தங்காய்! என் மணமகளே! பூட்டப்பட்ட தோட்டம் நீ, முத்திரையிடப்பட்ட நீரூற்று நீ.” 

 உன்னத சங்கீதம் 4:12

இதையே நாம் எசேக்கியேலும் பார்க்கமுடியும்..

பின்னர் அவர் கீழ்த்திசையை நோக்கியுள்ள தூயகத்தின் புறவாயிலுக்கு என்னைத் திரும்பவும் கூட்டி வந்தார்; அந்த வாயில் பூட்டப்பட்டிருந்தது.

அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, "இந்த வாயிலின் கதவு மூடப்பட்டே இருக்கும்; திறக்கப்படாது; யாரும் இதன் வழியாய் உள்ளே நுழையக்கூடாது; ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் இதன் வழியாய் உள்ளே சென்றார்; ஆகவே இது மூடப்பட்டே இருக்கும்;”

எசேக்கியேல் 44 : 1- 2

மாதா அமல உற்பவிக்கு சான்று உன்னத சங்கீதத்திலும்..

“ என் அன்பே, நீ அழகே உருவானவள், உன்னில் மாசு மறுவே கிடையாது”

உன்னத சங்கீதம் 4: 7

இதே இறைவசனம் ஞானாகமத்தில்..

“ அது கடவுளுடைய வல்லமையின் ஆவி; எல்லாம் வல்லவரது மகிமையிளியின் தூய சுடர்; ஆதலால் மாசுள்ளது எதுவும் அதற்குள் நுழைய முடியாது”

ஞான ஆகமம் 7 : 25

இதோடு ஆதியாகமம் 3: 15, திருவெளிப்பாடு 12: 1

சேர்த்துப் படித்தால் மாதா அமல உற்பவி என்பது புலனாகும்..

மாதாவுக்கும் பிசாசுக்கும் நிரந்த பகை என்று பிதாவான சர்வேசுவரனே சொல்லிவிட்டார்.. அதே பகையும், போரும் திருவெளிப்பாட்டிலும் தொடர்கிறது.. பறவை நாகத்தோடு..

பைபிளிலும் எங்கு பார்த்தாலும் மாதாவின் அமல உற்பவம், கன்னிமை, கன்னியும்-தாயும், மாதாவின் பரிசுத்தம், மாதாவின் வல்லமை பரவி இருக்கிறது..

மாதா உற்பவி என்பதற்கு எல்லோருக்கும் தெரிந்த நேரடிச்சான்றும் இருக்கிறது..

“ அருள் நிறைந்தவளே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே “

லூக்காஸ் 1 : 28

“ ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்: இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்;”

இசையாஸ் 7 : 14

மாதா பைபிளில் எங்கு இல்லை.. எங்கும் இருக்கிறார்கள்..

பைபிளில் முன் அட்டையிலிருந்து, பின் அட்டை வரை ஆண்டவர் இயேசுவும், மாதாவும் திரும்ப திரும்ப வருவார்கள்..

பைபிள் எதற்காக எழுதப்பட்டது? 

1. முதலில் கடவுள் யார் என்று தெரிந்து கொள்ள..

2. கடவுளின் பரிசுத்தம், வல்லமை, இரக்கம் பற்றி அறிந்து கொள்ள..

3. அப்புறம் மனிதன் யார் என்று தெரிந்து கொள்ள..

4. கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை, தொடர்பை தெரிந்து கொள்ள..

5. அடுத்து வருவதுதான் மிக முக்கியமானது.. கெட்டுப்போன மனிதனை அப்படியே “ நீ நாசமா போ” என்று விட்டு விடாமல்.. மீட்பைத் தந்தது..

6. அந்த மீட்புக்காக தன்னில் ஒரு ஆளையே மீட்பராகத் தந்தது..

7. அந்த மீட்புக்காகவே பைபிள் எழுதப்பட்டது..?

8. ஏன் நாமும் மீட்படைய வேண்டும் என்று..

9. அப்படியானால் அந்த மீட்பும், மீட்புத்திட்டமும், மீட்பரும் இருக்கும்போது அந்த மீட்பை இந்த உலகிற்கு கொண்டு வந்து அந்த மீட்பரோடு சேர்ந்து நமக்குப் அதைப் பெற்றுத் தந்த திருத்தாயான தேவ மாதா தன் சுதனோடு பைபிளில் அடிக்கடி வர மாட்டார்களா என்ன?

மீண்டும் இன்றும் நமக்கு மகிழ்ச்சி தரும் இறைவார்த்தைக்கு செல்வோம்..

“ விடிவேளை வானம் போல் எட்டிப்பார்க்கும் இவள் யார்? நிலாவைப் போல் அழகுள்ளவள், கதிரவனைப் போல் ஒளிமிக்கவள், அணிவகுத்த படை போல் அச்சம் தருகிறாளே!"

இந்த தெய்வீத திருத்தாயை நாம் இன்னும் முழுவதுமாக கண்டுபிடித்து விட்டோமா? இல்லையா?

நன்றி : பைபிள் மேற்கோள்கள், வாழும் ஜெபமாலை இயக்கம்.

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் !    மரியாயே வாழ்க !