வினா-விடைகள் 301 முதல் 350 வரை.

301. இஞ்ஞாசியாரைச் சந்தித்த தோழர்கள் திருப்பயணம் செல்லும் முன் எங்கு சேவைப்பணிகளில் ஈடுபட்டனர்?

மருத்துவமனைகளில். 

302. மருத்துவமனைகளில் அவர்கள் ஆற்றிய பணிகள் யாவை?

நோயானிகளைக் குளிப்பாட்டி உணவு ஊட்டுதல், துப்புரவு செய்தல், இரவில் கண்விழித்துப் பராமரித்தல், இறந்தவர்களை அடக்கம் செய்தல். 

303. இஞ்ஞாசியார் திருத்தந்தை மூன்றாம் பவுலைச் சந்தித்து எத்தனை உத்தரவுகளைப் பெற விரும்பினார்?

மூன்று. 

304. இஞ்ஞாசியார் திருத்தந்தையிடம் பெற விரும்பிய உத்தரவுகள் யாவை? 

புண்ணியபூமிக்குத் திருப்பயணம் செல்ல அனுமதி, தங்களில் குருப்பட்டம் பெறாதவர்கள் விரும்பிய ஆயர்களிடம் குருப்பட்டம் பெறுதல், தாங்கள் பணிபுரியும் இடங்களில் மறையுரையாற்றவும் ஒப்புரவு அருளடையாளம் வழங்கவும் அனுமதி. 

305. இஞ்ஞாசியார் தம் தோழர்களுடன் திருத்தந்தையை எப்போது சந்தித்தார்?

03.04.1537. 

306. திருத்தந்தை இஞ்ஞாசியாரின் தோழர்களிடம் எப்போது உரையாடி மகிழ்ந்தார்?

இரவுணவு வேளையில். 

307. இஞ்ஞாசியார் மற்றும் அவரது தோழர்கள் மீது கொண்டிருந்த நன்மதிப்பால் திருத்தந்தை என்ன செய்தார்? 

மூன்று உத்தரவுகளையும் வழங்கி திருப்பயணத்திற்கு பொருளுதவி அளித்தார். 

308. 1537 இல் வெனிஸ் நகரிலிருந்து எருசலேமிற்கு கப்பல் செல்லாததன் காரணம் யாது?

வெனிஸ் - துருக்கி போர். 

309, வெனிஸ் நகரில் குறைந்த வயது காரணமாக குருப்பட்டம் பெறாதிருந்த இயேசுசபைத் தோழர் யார்?

சால்மரோன். 

310. இயேசுசபைத் தோழர்கள் குருப்பட்டம் பெற்றபிறகு எத்தனை நாட்கள் கடுந்தவத்திலும் செபத்திலும் தங்களை ஈடுபடுத்தி திருப்பலி நிகழ்த்தினர்? 

40 நாட்கள்.

311. இஞ்ஞாசியாரைக் குருவாக திருநிலைப்படுத்திய ஆயர் யார்? 

ஆயர் நாகசாந்த 

312. இஞ்ஞாசியாரைக் குருவாக திருநிலைப்படுத்திய ஆண்டு எது?

1597. 

313. வெனிஸ் நகரில் குருப்பட்டம் பெற்றும் திருப்பலி நிறைவேற்றாதவர் யார்?

இஞ்ஞாசியார். 

314 இஞ்ஞாசியார் எங்கு தனது முதல் திருப்பலியை நிறைவேற்ற விரும்பினார்?

பெத்தலகேம். 

315. இஞ்ஞாசியார் பீட்டர் ஃபேபர், லெயினசுடன் எங்கு தங்கியிருந்தார்?

விசன்னா என்னும் நகருக்கு வெளிப்புறத்திலிருந்த துறவற மடத்தில். 

316, ஃபேபரும் லெயினசும் மக்களிடம் உணவுத் தேவைக்காகப் பெற்றுவந்த பொருட்களைக்கொண்டு உணவு தயாரித்துக் கொடுத்தவர் யார்?

இஞ்ஞாசியார். 

317, நோய்வாய்ப்பட்ட சைமன்ரொட்டிகுவஸை இஞ்ஞாசியாருடன் சென்று சந்தித்தவர் யார்?

பீட்டர் ஃபேயர். 

318. இயேசுசபைத் தோழர்கள் திருப்பயண முயற்சியை நிறுத்திக்கொண்டு தங்கள் சேவைகளைத் திருத்தந்தையிடம் ஒப்படைக்கத் தீர்மானித்ததன் காரணம் யாது?

போர்மூளும் அபாயம் ஏற்பட்டதால். 

319. திருத்தந்தை இஞ்ஞாசியாரின் தோழர்களுக்கு வழங்கிய அறிவுரை யாது?

"நீங்கள் விரும்பினால் இத்தாலி நாட்டையே உங்களது எருசலேமாக நினைத்து இங்கேயே மறைப்பணியாற்றலாம்." 

320. திருத்தந்தையைச் சந்திப்பதற்கு முன் உரோமைநகர் நோக்கிச் செல்ல முடிவெடுத்தவர்கள் யாவர்?

இஞ்ஞாசியார். மீட்டர்ஃபேபர், லெயினஸ். 

321. திருத்தந்தையைச் சந்திப்பதற்குமுன் பதுவைநகர் நோக்கிச் செல்ல முடிவெடுத்தவர்கள் யாவர்?

கொதியூர், ஹொசெஸ். 

322. திருத்தந்தையைச் சந்திக்கும் முன் பொலோஞாவிற்குச் செல்லத் தீர்மானித்தவர்கள் யாவர்? 

பிரான்சிஸ் சவேரியார், போபடில்லா.

323. திருத்தந்தையைச் சந்திக்கும் முன் சியன்னாவிற்குச் செல்லத் தீர்மானித்தவர்கள் யாவர்?

யாம ப்ரூவே. சால்மரோன். 

324. தங்களை யார் கேட்டாலும் தங்களை எவ்வாறு குறிப்பிட வேண்டுமென்று இஞ்ஞாசியாரும் அவரது தோழர்களும் முடிவெடுத்தனர்?

இயேசுவின் குழுவினர். 

325. ரோம் செல்லும் வழியில் இஞ்ஞாசியார் எந்த ஊரிலுள்ள சிற்றாலயத்தில் செபித்தார்?

லா ஸ்டோர்ட்டா. 

326. லா ஸ்டோர்ட்டா என்பதன் பொருள் யாது?

வளைவு. 

327. உரோம்நகர் செல்லும் வழியில் லா ஸ்டோர்ட்டா ஆலயத்திற்கு இஞ்ஞாசியாருடன் சென்ற தோழர்கள் யாவர்?

பீட்டர் ஃபேபர், லெயினஸ். 

328. இஞ்ஞாசியாரை எருசலேமிலிருந்து உரோமை நோக்கித் திருப்பிய இறையனுபவம் யாது? 

லா ஸ்போர்ட்டா அனுபவம். 

329. லா ஸ்டோர்ட்டா ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்தியவர்கள் யாவர்?

பீட்டர் ஃபேபர், லெயினஸ். 

330. லா ஸ்டோர்ட்டா ஆலயத்தில் ஆண்டவர் யாருக்குக் காட்சியளித்தார்?

இஞ்ஞாசியாருக்கு. 

331. லா ஸ்டோர்ட்டா ஆலயத்தில் இறைத்தந்தை இஞ்ஞாசியாரை யாருக்கு அருகில் நிறுத்தினார்? 

தம் மகன் இயேசுகிறிஸ்துவின் அருகில்.

332. லா ஸ்டோர்ட்டாவில் இறையனுபவம் பெற்ற இஞ்ஞாசியார் தான் எங்கு சிலுவையில் அறையப்படக்கூடும் என்று எண்ணினார்?

உரோமையில். 

333. உரோமையை அடைந்தபிறகு தம் தோழர்களிடம் இஞ்ஞாசியார் கூறிய இறையனுபவக்காட்சி யாது?

சன்னல்கள் அடைக்கப்பட்டிருத்தல். 

334. இஞ்ஞாசியார் தாம் பெற்ற இறையனுபவத்தை யார் யாரிடம் பகிர்ந்துகொண்டார்? தம் நண்பர்கள் பீட்டர் ஃபேபர், லெயினஸ் ஆகியோரிடம்.

335. ஆரஞ்சு இலையில் மூவொரு கடவுளைக் காணும் ஆற்றல் இஞ்ஞாசியாருக்கு இருந்தது என்று கூறியவர் யார்? 

ஜெரோம் நடால். 

336. இஞ்ஞாசியாரிடம் இறைவன் என்ன கூறியதாக பீட்டர் ஃபேபர் குறிப்பிடுகின்றார்?

"உரோமையில் நாம் உன்னோடு இருப்போம்." 

337. இஞ்ஞாசியார் குறித்து இறைத்தந்தை தம் மகன் இயேசுவிடம் கூறியதாக லெயினஸ் குறிப்பிடுவது யாது?

"கவ்வூழியனை நீர் ஏற்றுக்கொள்ள நான் விருப்பமாய் இருக்கிறேன்." 

338. இஞ்ஞாசியார் பற்றி இறைத்தந்தை கூறியதற்கு இஞ்ஞாசியாரிடம் இயேசு கூறிய பதில்மொழியாக லெயினஸ் குறிப்பிடுவது யாது?

"நீ எங்களுக்குச் சேவைபுரிய நாம் விரும்புகிறோம்." 

339. திருத்தந்தை ஃபேபரையும் லெயினஸையும் எங்கு அனுப்பி வைத்தார்?

லா சாப்பியன்சியா என்னும் உரோமைப் பல்கலைக்கழகத்தில் இறையியல் கற்பிக்க. 

340. இஞ்ஞாசியார் தம் முதல் திருப்பலியை எங்கு நிறைவேற்றினார்?

புனித மரியன்னை பேராலயம். 

341. இஞ்ஞாசியார் தம் முதல் திருப்பலியை எப்போது ன நிறைவேற்றினார்? 

25.12.1538. 

342. கிறிஸ்து பிறப்பு இரவில் உரோமில் எந்த ஆலயத்தில் இஞ்ஞாசியார் திருப்பலி நிறைவேற்றினார்?

சாந்தா மரியா மார்ஜியோரே. 

343. இஞ்ஞாசியார் முதல் திருப்பலி நிறைவேற்றிய ஆலயத்திலிருந்த திருப்பண்டம் யாது?

இயேசு பிறந்த குடிலின் ஒரு பகுதியிருந்த வெள்ளிப்பேழை. 

344. இஞ்ஞாசியார் எந்த ஆண்டு தனது சபைக்குரிய சட்ட வரைவுத் தொகுப்பை உருவாக்கினார்?

1539. 

345. இஞ்ஞாசியார் தமது துறவறசபையின் சட்டதிட்டங்களை முதலில் எத்தனை பிரிவுகளில் கொள்கைத்திரட்டாக எழுதினார்?

346. இயேசுசபையின் ஒழுங்குமுறை நூலில் இடம்பெறும் தலையாய சேவை யாது? 

தெய்வீக மகத்துவத்திற்கு மட்டுமே சேவை புரிவது.

347. இயேசுசபையின் ஒழுங்குமுறை நூலில் இடம்பெறும் தலையாய பணி யாது?

திருத்தந்தைக்கும் திருச்சபைக்கும் பணிபுரிவது. 

348. இஞ்ஞாசியார் தமது துறவறசபையின் கொள்கைத்திரட்டை ஒப்படைத்த திருத்தந்தை யார்?

திருத்தந்தை மூன்றாம் பவுல். 

349. இஞ்ஞாசியார் தந்த துறவறசபையின் கொள்கைத்திரட்டைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை வாசித்துக்கூறிய புகழ்மொழி யாது?

"கடவனின் அருட்கரம் இங்கேயுள்ளது." 

350. இயேசுசபைக்குரிய விதிமுறைகளை யாரின் உதவியுடன் திருத்தந்தைக்கு இஞ்ஞாசியார் அனுப்பினார்?

கர்தினால் கொந்தார்னி.