வினா-விடைகள் 351 முதல் 400 வரை.

351. இயேசுசபையைத் தொடங்க அனுமதியளிக்கக்கூடாது என தடை கூறிய கர்தினால் யார்?

கர்தினால் கினுலூச்சி. 

352. கர்தினால் ஜினுனூச்சி இயேசுசபைக்கு அனுமதி தருவதில் எதிர்ப்பு தெரிவிக்கக் காரணம் யாது? 

வழக்கமான துறவறச் சபைகளுக்குரிய விதிமுறைகளுக்கு விதிவிலக்கு பெற எதிர்ப்பு தெரிவித்து. 

353. இயேசுசபைக்கு அனுமதி கிடைத்தால் எத்தனை நன்றி திருப்பலிகள் நிறைவேற்றப்படுமென இஞ்ஞாசியார் இறைவனுக்கு வாக்குறுதி அளித்தார்?

3000. 

354. இயேசுசபைக்கு அனுமதி பெற யார்யாரிடம் நற்சான்று பெற்று இஞ்ஞாசியார் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார்?

நாட்டு மன்னர்களிடமும் ஆயர்களிடமும். 

355. இயேசுசபை தொடங்குவதற்கு முன்பிருந்த துறவற சபைகள் எத்தனை?

4

356. இயேசுசபை தொடங்குவதற்கு முன்பிருந்த துறவற சபைகள் யாவை?

பெனடிக்டின், சிஸ்டேர்சியன், பிரான்சிஸ்கன், தொமினிக்கன். 

357. இயேசுசபையின் விதிமுறைகளுக்கு ஒப்புதலளித்த திருத்தந்தை யார்?

பொன் திருத்தந்தை மூன்றாம் பவுல். 

358. எந்த ஆவணத்தில் கையொப்பமிட்டு இயேசுசபைக்கு அங்கீகாக. வழங்கப்பட்டது?

ரெஜிமினி மிலிட்டாண்டிஸ் எக்லேசியே. 

359. இயேசுசபை நிறுவ எப்போது ஒப்புதல் தரப்பட்டது?

27.09.1540. 

360. இயேசுசபை நிறுவ எந்த மாளிகையில் ஒப்புதல் தரப்பட்டது?

சான்மார்கோ. 

361. இஞ்ஞாசியார் தம் வாழ்வில் இலக்காகக் கொண்டிருந்த விருதுவாக்கு எது?

எல்லாம் இறைவனின் அதீமிகு மகிமைக்கே.(AMDG) 

362 AMDG என்பதன் விரிவாக்கம் யாது?

Ad Majorem Dei Gloriam என்னும் இலத்தீன் சொற்றொடரின் சுருக்கமே AMDG. 

363. AMDG என்பதன் பொருள் யாது?

எல்லாம் இறைவனின் அதிமிகு மகிமைக்கே. 

364. இஞ்ஞாசியார் எந்த முறையில் இயேசுசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

இரகசிய வாக்குச்சீட்டுமுறை. 

365. "மடோன்னா தெல்லா ஸ்தரடா" என்பது எந்த மாதாவைக் குறிக்கும்? 

வழித்துணை மாதா.

366. "மடோன்னா தெல்லா ஸ்தரடா" ஆலயத்தை திருத்தந்தையின் ஒப்புதலோடு இயேசுசபைக்குத் தானமாக வழங்கியவர் யார்?

பங்குத்தந்தை பீட்டர் கொடாச்சியோ. 

367. இயேசுசபைக்கென்று முதன்முதலாக சொந்தமாக இல்லத்தை இஞ்ஞாசியார் எப்போது வாங்கினார்? 

1541.

368. இயேசுசபைக்கான முதல் இல்லத்தை யாரிடமிருந்து எந்த இடத்தில் இஞ்ஞாசியார் வாங்கினார்?

பிரான்சிப்பானி என்பவரிடம் தெல்ஃபீனி சாலையிலிருந்த வீடு. 

369. கீழ்ப்படிதலில் குறைவாக இருந்ததால் யாரை இயேசு சபையைவிட்டு அனுப்பியது இஞ்ஞாசியாரின் உள்ளத்தை வாட்டியது?

சைமன் ரொட்ரிகுவஸ். 

370. இயேசுசபையின் ஒழுங்குகள் உள்மனதில் ஆழமாகப் பதிக்கப்பட்டிருந்தால் போதுமென்று எண்ணியவர் யார்? 

இஞ்ஞாசியார்.

271. இஞ்ஞாசியார் இயேசுசபை ஒழுங்குமுறைகளை நூலாக்கம் செய்யக் காரணங்கள் யாவை? 

திருத்தந்தை கேட்டுக்கொண்டதாலும் மற்ற துறவறசபைகள் ஒழுங்குமுறைப் புத்தகம் வைத்திருப்பதாலும். 

372. இயேசுசபை ஒழுங்குமுறை அரசியல் சாசனத்தை தான் எவ்வாறு தொடங்கியதாக இஞ்ஞாசியார் குறிப்பிடுகிறார்?

ஆழமான செபத்தோடும் சிந்தனையோடும். 

373. இயேசுசபை ஒழுங்குமுறைகளை இயற்றுவதில் இஞ்ஞாசியாருக்கு வலக்கரம்போல் உதவி புரிந்தவர் யார்?

அருட்தந்தை பொலாங்கோ. 

374. தாம் இயற்றிய இயேசுசபை அரசியல் சாசன அமைப்பில் இஞ்ஞாசியார் எத்தனை இடங்களில் சிறுசிறு மாற்றங்களைக் குறிப்பிடுகின்றார்?

230 இடங்களில். 

375. இயேசுசபை சட்டநூலின் ஒவ்வொரு பத்தியையும் எழுதி முடித்தவுடன் இஞ்ஞாசியார் யாருடைய ஒப்புதலை நாடுவார்? 

தம் மேசையின் மீதிருந்த அன்னைமரியா சுரூபத்திடம்.

376. இயேசுசபை ஒழுங்குமுறை நடைமுறை அமைப்பு எத்தனை தலைப்புகளில் தயாரிக்கப்பட்டிருந்தது? 

ஏழு. 

377. இயேசுசபையில் இணைந்த பதினோராவது தோழர் யார்? 

அன்டோனியா ஆராவூஸ். 

378. அன்டோனியா ஆராவூஸ் யார்?

இஞ்ஞாசியாரின் அண்ணி மதலேனா தெ அரவோஸின் சகோதரர் மகன். 

379. இயேசுசபையின் ஒழுங்குமுறை நடைமுறை அமைப்பை பட திருத்தந்தை மூன்றாம் பவுலிடம் சமர்ப்பிக்க அனுப்பப்பட்டவர் யார்?

அன்டோனியா ஆராவூஸ். 

380. கத்தோலிக்கத் திருஅவையின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தப் பெரும்பணியாற்றிய சபை எது? 

யேசு சபை.

381. தலைமைப் பொறுப்பை ஏற்கும் முன் இஞ்ஞாசியார் உரோமையில் எத்தனை திருத்தலங்களைத் தரிசித்தார்?

382. இயேசு சபை அதன் தொடக்கத்திலிருந்தே ஆற்றிவந்த பணி யாது? 

மறைபரப்புப்பணி.

383. இயேசுசபை கல்லூரிகள் தொடங்க இஞ்ஞாசியார் முதல் முன்னுரிமை எதற்கு அளித்தார்? 

கத்தோலிக்க நாடுகளை இறைநம்பிக்கையில் உறுதிப்படுத்த. 

384. இயேசுசபை கல்லூரிகள் தொடங்க இஞ்ஞாசியார் இரண்டாவது முன்னுரிமையை எதற்கு அளித்தார்? 

லூத்தரின் பதிதர்களால் அலைக்கழிக்கப்பட்ட கத்தோலிக்க இறைநம்பிக்கையை உறுதிப்படுத்த. 

385. இயேசுசபை கல்லூரிகள் தொடங்க இஞ்ஞாசியார் மூன்றாவது முன்னுரிமையை எதற்கு அளித்தார்?

ஆசியாவிலும் அமெரிக்காவிலும் திருமறையைப் பரப்புவதற்கு. 

386. இஞ்ஞாசியார் ரோமன் கல்லூரியை எப்போது நிறுவினார்?

22.02.1551. 

387. இஞ்ஞாசியார் ரோமன் கல்லூரியை நிறுவிய நாடு எது?

இத்தாலி. 

388. இஞ்ஞாசியார் காலத்திற்குப் பிறகு ரோமன் கல்லூரிக்கு நிதியுதவி வழங்கியவர் யார்?

திருத்தந்தை பதிமூன்றாம் கிரகோரியார். 

389. இஞ்ஞாசியார் தொடங்கிய உரோமன் கல்லூரி தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

கிரகோரியார் பல்கலைக்கழகம். 

390. இஞ்ஞாசியார் இரண்டாவது கல்லூரியை எப்போது நிறுவினார்?

1552. 

391. இஞ்ஞாசியார் தொடங்கிய இரண்டாவது கல்லூரியின் பெயர் யாது?

ஜெர்மன் கல்லூரி. 

392. இஞ்ஞாசியார் வாழ்நாளில் எத்தனை கல்லூரிகள் நிறுவப்பட்டன?

21.

393. எந்த நாட்டில் மற்ற நாடுகளைவிட இயேசுசபையினருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது?

போர்த்துக்கல் 

394. போர்த்துக்கல் நாட்டில் இயேசுசபையை வரவேற்றுப் போற்றி வளர்த்தவர் யார்?

அரசர் மூன்றாம் ஜான். 

395. எந்த பல்கலைக்கழகத்தின் கல்விமுறையை தம் கல்லூரிகளில் கடைப்பிடிக்க இஞ்ஞாசியார் விரும்பினார்? 

கப் சார்போன் பல்கலைக்கழகம்.

396. இயேசுசபை இளந்துறவிகள் கல்விகற்க இஞ்ஞாசியார் அவர்களை எங்கு அனுப்பிவைத்தார்?

பாரீஸ். 

397. பிலோம் நகரில் தொடங்கப்பட்ட கல்லூரியில் எத்தனை மாணவர்கள் பயின்று வந்தனர்?

800. 

398. இஞ்ஞாசியார் வாழ்நாளில் ஏற்படுத்தப்பெற்ற இரண்டு பணித்தளங்கள் யாவை?

இந்தியா, பிரேசில். 

399. இஞ்ஞாசியார் மனதிற்குப் பிடித்திருந்த பணி எது?

எத்தியோப்பியாவில் மறைபரப்புப்பணி. 

400. இஞ்ஞாசியார் காலத்தில் எத்தியோப்பியாவில் பரவியிருந்த சபை எது?

போப்டிக்ட் சபை.