வினா-விடைகள் 251 முதல் 300 வரை.

251. இஞ்ஞாசியார் இயேசுசபைத் தலைவராக இருந்தபோது அவர் மேசையில் எப்போதும் இருந்த நூல்கள் யாவை?

விவிலியம், கிறிஸ்துவழிவாழ்வு. 

252. இஞ்ஞாசியார் படித்த "ஞானவாழ்வுப்பயிற்சிகள்" நூலின் ஆசிரியர் யார்? 

கார்சியா ஜிமேனஸ் தெ சிஸ்நோராஸ். பார்யா

253. இஞ்ஞாசியார் பாரீசு நகரில் படிக்கும்போது அவருக்குப் பொருளுதவி செய்தவர் யார்?

இசபெல் ரோசர். 

254. இஞ்ஞாசியார் பாரீசில் எந்த பல்கலைக்கழகத்தில் பயின்றார்?

சோர்போன். 

255. சோர்போன் பல்கலைக்கழகத்திற்கு இஞ்ஞாசியார் எப்படிச் சென்றார்?

வெகுதூரம் நடந்து சென்றார். 

256. சோர்போன் பல்கலைக்கழகத்திற்கு இஞ்ஞாசியார். எந்த ஆண்டு சென்றார்?

1528. 

257. இஞ்ஞாசியார் எப்போது இளங்கலைப் பட்டம் பெற்றார்?

1532 

258. பாரீசில் இஞ்ஞாசியார் எத்தனை ஆண்டுகள் பயின்றார்?

ஏழு ஆண்டுகள். 

259. இலக்கணப் படிப்பிற்கு மனப்பாடம் செய்யத் தடையாக இருந்த காரியங்கள் பற்றி தன் ஆசிரியரிடம் இஞ்ஞாசியார் கலந்துரையாடிய இடம் எது?

கடல்மாதா ஆலயம். 

260. எத்தகைய துறவற சபையில் சேர்ந்து இறைப்பணியாற்ற இஞ்ஞாசியார் விரும்பினார்?

தளர்ந்துபோன, மறுமலர்ச்சி தேவைப்படும் துறவறசபையில் சேர. 

261. எந்த ஆலயத்தில் இஞ்ஞாசியார் தம் ஆறு நண்பர்களுடன் தியானம் செய்தார்? 

பாரீசின் மோன்மார்ட் திரு இருதய ஆலயம்.

262. எந்த ஆண்டு இஞ்ஞாசியார் தம் ஆறு நண்பர்களுடன் மோன்மார்ட் ஆலயத்தில் தியானம் செய்தார்?

1534. 

263. "மோமார்த்தர்" என்பது யாது? 

மறைசாட்சிகளின் மலை. 

264. மறைசாட்சிகளின் மலை எங்கு இருந்தது?

பாரீசு மாநகர் அருகில். 

265. மறைசாட்சிகளின் மலை என்று அவ்விடம் அழைக்கப்படக் காரணம் யாது? 

பாரீசின் பாதுகாவலர் எனப் போற்றப்பட்ட புனித டென்னிசும் அவருடைய இரு நண்பர்களும் மறைசாட்சிகளாக மரித்த இடம் என்பதால்.

266. இஞ்ஞாசியாரும் அவரது நண்பர்களும் அன்னை மரியாவின் விண்ணேற்புத் திருநாளன்று எங்கு சென்று திருப்பலிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்?

மறைசாட்சிகளின் மலை. 

267. மறைசாட்சிகளின் மலைக்கு இஞ்ஞாசியார் தம் நண்பர்களுடன் எந்த நாளில் சென்றார்?

15.08.1534. 

268. இஞ்ஞாசியார் இறை இயேசுவின் சேவகர்கள் சபை என்னும் இயேசுசபையை எப்போது தொடங்கினார்?

15.08.1534. 

269. இயேசுசபையைத் தொடங்கியபோது சபையில் எத்தனைபேர் உறுப்பினர்கள்?

இஞ்ஞாசியாரும் அவரது ஆறு நண்பர்களும். 

270. இஞ்ஞாசியார் இயேசுசபைக்குக் கொடுத்த முதல் மூன்று வார்த்தைப்பாடுகள் யாவை?

கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல். 

271. இயேசுசபையின் மறுபெயர் யாது?

அன்பின் சபை. 

272. இஞ்ஞாசியாரும் அவர் நண்பர்களும் மறைச்சாட்சிகளின் மலையில் திருப்பலி ஏற்பாடுகளைச் செய்தபோது குருத்துவ அருட்பொழிவு பெற்றிருந்தவர் யார்? 

பீட்டர் ஃபேபர்.

273. பீட்டர் ஃபேபர் திருப்பலி நிறைவேற்றும் போது மற்ற ஆறு நண்பர்களும் எவ்வாறு வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தனர்? 

பீட்டர் ஃபேபர் தம் தோழர்கள் பக்கம் திரும்பி திவ்விய நற்கருணையை ஏந்திநிற்க பீடம் முன்பு தம் வார்த்தைப்பாடுகளைக் கொடுத்து நற்கருணை உட்கொண்டனர்.

274. ஆலயத்தில் இஞ்ஞாசியாரும் அவரது நண்பர்களும் வார்த்தைப்பாடுகளாக என்ன முடிவெடுத்தனர்? 

ஏழ்மை, கற்பு என்னும் இரு வார்த்தைப்பாடுகளுடன் புனித பூமி எருசலேமிற்குத் திருப்பயணம் செல்லுதல், இயலாமல்போனால் திருத்தந்தையின் விருப்பத்துக்குத் தங்களைக் கையளித்தல். 

275. இஞ்ஞாசியார் எப்போது முதுகலைப் பட்டம் பெற்றார்?

1535. 

276. 1535 ஏப்ரல் 30 ஆம் நாள் பாரீசைவிட்டு ஸ்பெயினுக்கு இஞ்ஞாசியார் ஏன் புறப்பட்டார்? 

வயிற்றுவலி குணமாக ஓய்வெடுக்க.

277, இஞாசியார் பாரீCLINhi ஸ்பெயினுக்கு எவ்வாறு சென்றார்?

278, இருஞாசியார் தாயம் செல்லும்போது யாருடைய பொறுப்பில் தம் நண்பர்களை ஒப்படைத்துச் சென்றார்?

பீட்டர் ஃபேயர். 

279, 1535 இல் தன் சொந்த ஊrchகுச் சென்றபோது இஞ்ஞாசியார் எங்கு தங்குவதற்கு மறுத்தார்?

லொயோலா மாளிகை. 

280, 1535 இல் தன் சொந்த ஊளக்குச் சென்றபோது இஞ்ஞாசியார் எங்கு தாங்கியிருந்தார்?

மக்தலேனா மருத்துவமனை. 

281. உலகம் போற்றும் பேராசிரியராகத் திகழ வேண்டுமென்று விரும்பிய இஞ்ஞாசியாரின் நண்பர் யார்?

சவேரியார். 

282. இனிகோ என்னும் பெயரை இக்னேஷியஸ் என பதம் மாற்றிக்கொண்டது எப்போது?

1535. 

283. இஞ்ஞாசியார் இலத்தீன் மொழியில் எழுதிய கடிதங்களில் எவ்வாறு கையொப்பமிட்டிருந்தார்?

இகனேஷியஸ்.

284. இஞ்ஞாசியார் எந்த கடல்வழிப் பயணத்தில் கடுமையான புயலில் சிக்கித் தவித்தார்? 

வலென்சியாவிலிருந்து இத்தாலி நாட்டிற்குச் சென்றபோது. 285. 

கடுங்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இஞ்ஞாசியாரைப் பராமரித்த உயர்குலப் பெருமாட்டி யார்? 

பேன் ஆக்ஸ்பாஸ்கால்.

286. இஞ்ஞாசியார் அஸ்பெயித்சீயா நகருக்கு வந்துள்ளதாகக் கேள்வியுற்ற அவரது அண்ணன் மார்ட்டின் கார்சியா லொயோலா மாளிகைக்கு அவரை வரவேற்க என்ன செய்தார்? 

இஞ்ஞாசியாரை அழைத்து வருமாறு இருவரைக் குதிரையில் அனுப்பிவைத்தார். 

287. இஞ்ஞாசியார் தாயகம் செல்லும்போது சவேரியார் தம் அண்ணனுக்குக் கொடுத்தனுப்பிய கடிதத்தில் இஞ்ஞாசியாரைப் பற்றி என்ன குறிப்பிட்டிருந்தார்? 

"என் தலைவர் கனிகோ எனது வாழ்க்கையை ஆண்டவர்பால் திருப்பியதை நினைக்கும்போது இப்பேருதவிக்கு எவ்வாறு நான் ஈடு செய்வேன்?".

288. தாயகம் சென்ற இஞ்ஞாசியார் சிறுவர்-சிறுமியருக்கு என்ன கற்றுக் கொடுத்தார்?

மறைக்கல்வி. 

289. ஏழைகளுக்கும் இரந்துண்ணத் தயங்குவோர்க்கும் இஞ்ஞாசியார் செய்த உதவி யாது? 

ஞாயிறுதோறும் திருப்பலிக்கு வரும் பணக்காரர்களிடம் பொருள் திரட்டி ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்தளித்தல். 

290. பணக்காரர்களிடம் பொருள் பெற்று ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்தளிக்க ஊரில் எத்தனைபேரை இஞ்ஞாசியார் நியமித்தார்?

இருவர். 

291. இத்தாலி திரும்புவதற்கு முன்பாக இஞ்ஞாசியார் யாரைச் சந்தித்தார்?

இயேசுசபைத் தோழர்களின் உறவினர்களை. 

292. இஞ்ஞாசியார் ஸ்பெயினுக்குச் சென்றபின் பீட்டர் ஃபேபர் தம் குழுவில் புதிதாகச் சேர்த்துக்கொண்ட மூவர் யாவர்?

கிளாடுலே பாஸ்கேஸ், ப்ரூவே, ஜான் கொதியூர். 

293. வெனிஸ் நகரில் இஞ்ஞாசியாருடன் யாரும் நட்புறவு கொள்ளக்கூடாதென எச்சரிக்கை கொடுத்தவர் யார்?

கராஃபா என்ற குருவானவர். 

294. கராஃபா என்ற குருவானவர் பின்னாளில் வகித்த பொறுப்பு யாது?

திருத்தந்தை நான்காம் சின்னப்பர். 

295. பாரீசிலிருந்த இஞ்ஞாசியாரின் ஒன்பது தோழர்களும் பாரீசிலிருந்து எப்பொழுது வெனிஸ் புறப்படத் திட்டமிட்டிருந்தனர்?

25.01.1537. 

296. பாரீசிலிருந்த இஞ்ஞாசியாரின் ஒன்பது தோழர்களும் பாரீசிலிருந்து வெனிஸ் புறப்படக் காரணம் யாது? 

உயிர்ப்புப் பெருவிழாவன்று திருத்தந்தையிடம் புனித பூமிக்குச் செல்ல ஒப்புதல் பெற. 

297. பாரீசிலிருந்த இஞ்ஞாசியாரின் ஒன்பது தோழர்களும் முன்கூட்டியே பாரீசிலிருந்து வெனிஸ் புறப்படக் காரணம் யாது?

பிரான்சு- ஸ்பெயின் போர் மூளும் அபாயம் ஏற்பட்டதால். 

298. எப்பொழுது இஞ்ஞாசியாரின் தோழர்கள் வெனிஸ் நகருக்குப் புறப்பட்டனர்?

15.11.1536. 

299. 55 நாட்கள் கால்நடையாகப் பயணித்த இஞ்ஞாசியாரின் தோழர்கள் எப்பொழுது வெனிஸ் நகரை வந்தடைந்தனர்? 08.01.1537.

300. வெனிஸ் நகரை வந்தடைந்த இயேசுசபைத் தோழர்களை வரவேற்றவர் யார்?

இஞ்ஞாசியார்.