எனவே நான் முன் சொன்னதையே மீண்டும் கூறுகின்றேன். பாமர மக்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையில் பொது இடம் பெறுவது தாழ்மையே. இதுவே பேரறிவினைக் காண வழி. நம் காலத்தில் மிகவும் அவசியமான பண்பு ஒன்று உண்டென்றால் அதுதான் கற்பிக்கத்தக்கதான பக்குவம் கொண்டிருக்கும் நிலை. இதைக் கேள்வி பயன் என்றும் கூறலாம்.
சுய சிந்தனையாலும் ஏட்டுக் கல்வியாலும் கிடைப்பதற்குத்தான் இன்றைய உலகம் ஏங்கிக் கிடக்கிறது சிலர் தங்களின் வெறும் சுய முயற்சியைக் கொண்டே உண்மையை உணரலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர் எனவே கடவுளின் வெளியீட்டால் தமது அறிவை அதிகரிக்கக் கூடும் என்ற எண்ணத்தை வெறுத்து ஒதுக்குகின்றனர் சிலர் கூரறிவு என்பது விஞ்ஞானத்தைப் பற்றிய அரைகுறை அறிவு தான் என்றும் அல்லது ஒரு “மாதத் தாள்” என்றும் அல்லது பெய்ப்பிங் என்னுமிடத்திலே தோண்டியெடுக்கப்பட்ட புது மண்டையோடு என்றும் நம்பி வாழ்கின்றனர்
பல்கலைக்கழக கல்வி கூட உதவாக்கரை நிகழ்ச்சிகளை ஆராய்வதில் முனைந்து ஆராய்ச்சி என்பது இறுதி முடிவுக்கு, பேருண்மையைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு வழி என்பதை மறந்து விட்டுள்ளது நம்முடைய அநேக பல்கலைக்கழகங்கள் ஏரோதரசனை ஆராய்ச்சியாளன் என்று அழைக்கலாம் என்பதை நினைவில் இருத்தல் வேண்டும்.
ஏனெனில் திருக்குழந்தை எங்கே பிறந்தது என்ற விவரங்கள் அவன் மிக நுணுநுணுக்கமாக கேட்டறிந் தான் அல்லவா? இருப்பினும் பேரறிஞரோ கல்வியைப் பற்றி அவனைவிட பன்மடங்கு அதிகமதிகம் அறிந்திருந்தனர் அவர்களும் ஆராய்ச்சியாளர்கள்தான். ஏனெனில் வானுலகை அவர்கள் துருவி ஆராய்ந்தனர்; அவர்களிடமோ தாழ்ச்சியெனும் பண்பும் இருந்தது. ஆராய்ச்சி ஒரு கருவி மட்டுமே என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர் எனவே விண்மீன்களின் விஞ்ஞானத்தைப் பின்பற்றி அவைகளைப் படைத்த நம் சேசு கிறீஸ்துவை - மெய்யறிவை - கண்டடைந்தனர்
போதனை ஏற்பவரே ஆசிரியரையும், கேள்வி உணர்வினரே கல்விச் செல்வனையும், தாழ்ச்சி உடையவரே
மிக்க புகழ் பெற்றவரையும் கண்டடைகின்றனர். ஆயர்களைப் போன்ற எளிய உள்ளங்களே கடவுளைக் காண்கின்றன. காரணம், அவைகள் தாம் அறிந்தது ஒன்றுமில்லை என்று உணர்கின்றன. பேரறிஞரைப் போன்ற கற்றறிந்த ஆத்துமங்கள் தாம் அறியக்கூடுமான அனைத்தையும் அறியவில்லை என்று உணர்வதால் கடவுளை அடைகின்றன.
தொடரும்...