சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 29

அந்நாள் தொடங்கி இந்நாள் மட்டும் மதம் மாறி திருமறையில் வந்து சேரும் மக்கள் தொகை திவ்விய நற்கருணைப் பேழையிலுள்ள நம் ஆண்டவர் முன்னே செபமாலை முணுமுணுக்க கத்தோலிக்க பெண்ணாக விரும்பிய ஓர் எளிய மூதாட்டியைப் போன்ற ஆத்துமங்களால் ஆகியது; வரலாற்று நூல்களையும் மெய்யறிவு நூல்களையும், இலக்கியங்களையும் எவ்வளவு கரைத்துக்குடித்தனர் என்றால் கடவுளின் அருளை ஒருமுறை பெற்ற பின்னர் திருமறைக்கு புறம்பே தனித்து வாழ இயலாது போயிற்று 

செஸ்டர்டன், லன், பெல்லக், மாரித்தேன், போன்ற பேரறிவா ளிகளால். ஆதலால்தான், வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத் திலும் அச்சமயம் உலகத்திற்கு மிக்க அவசியமான புண்ணியத்திற்கு பெயர்போன ஓர் புனிதரை கடவுள் அனுப்பி வருகிறார் ஆகையால் இறுமாப்புக்கும் தன்னறிவுக்கும் பெயர் போன இந்நாட்களிலே சிறுமலரை (அர்ச்.குழந்தை தெரேசாளை) உருவாக்கினார். இவர்கள் இரட்சண்யம் தரும் மெய்யறிவைக் கொண்டிருந்தாலும் குழந்தையின் வெள்ளை உள்ளத்தைக் கொண்டிருந்தார்கள். உலகிலே, உருவாக்கும் கருவிகளைக் கொண்டு சக்தியின் வேகத்தை நிர்ணயிக்கும் மனிதர் வாழ்ந்த காலத்தில் இவர்கள் வாழ்ந்தாலும், தான் வானினின்று பொழியும் ரோஜா மலர்களைக் கொண்டு சக்தியை நிர்ணயித்தார்கள்

அர்ச். குழந்தை தெரேசாள் வேண்டுதலினாலே, நூறாயிரக் கணக்கில் மக்கள் மனந்திரும்பி திருக்குகையிலுள்ள மெய்யறிவை அண்டினர் சிலுவையின் உறுபலத்தைப் பெற்றனர். இவர்கள் வழியாகவே பாமர குடியானவனும் பல்கலைக்கழகத்துப் பேராசிரியனும் ஒரே பொதுநிலையைக் காண்கின்றனர். 

ஒவ்வொருவனும் விசுவசிக்க வேண்டியது என்னவென்று அவர்களுக்குத் தெரியும். ஆகையால் ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு பொறுப்பாளியாக நிற்கும் இடம் திருமறை என்று கூறலாம். அறிவாளிகள், எளிய மக்கள் விசுவசிக்க வேண்டியது என்னவென்று அறிகின்றனர். பாமர மக்களும் படித்துணர்ந்த பாவலரும் விசுவசிக்க வேண்டியது என்ன வென்று உணர்கின்றனர். மக்கள் மீட்பு பெற குகையிலுள்ள குழந்தையின் பெயரைத் தவிர உலகில் வேறே ஒன்று இல்லை என்பதை விசுவசித்தலே ஆகும்.

உலகின் ஏரோது மக்கள் எவ்வாறு சேசுவைக் காண்பதில்லையோ, அவ்வாறே திருமறையும் காண்பதில்லை. அதை ஒழிக்க வேண்டுமென்ற சதித்திட்டத்திலுங்கூட காண்பதில்லை. காரணம், மக்கள் திருமறையை எதிர்ப்பதை நிறுத்தும் வரை அதன்பால் ஈர்க்கப் படுதலை உணர மாட்டார்கள். அவர்கள் திறந்த, பரந்த உள்ளத்தோடு நடந்துகொள்ள வேண்டும் - திருமறை உண்மையாக இருக்குமோ என்ற அச்சத்திலுங்கூட. இது, நாம் தாழ்ச்சியாயிருக்க வேண்டும் என்று கூறுவதேயன்றி வேறொன்றுமல்ல.

மக்கள் நிமிர்ந்து நடக்கும்படி சேசு திறந்த வெளியில் பிறக்கவில்லை. அவர் பிறந்தது ஒரு குகையில், உள்ளே நுழைய தலையைத் தாழ்த்திதான் செல்லவேண்டும். அந்தக் தாழ்த்துதல் தாழ்ச்சியின் தாழ்த்துதல். சில உள்ளங்கள் இறுமாப்பால் குனிவதில்லை. எனவே குகைக்குள்ளிருக்கும் மாபெரும் மகிழ்ச்சியை இழந்து விடுகின்றனர். 

ஆயரும் அறிஞரும் நுழைந்து செல்லும் அளவிற்கு தாழ்ச்சியைக் கையாண்டனர். அவர்கள் நுழைந்தும் தாங்கள் குகைக்குள் இல்லை என்பதைக் கண்டனர். ஆனால் ஓர் அழகிய பெண்மணி தலைக்கு மேல் சூரியனையும் திருவடிகளின்கீழ் பிறை நிலவையுங் கொண்டு விளங்கும், ஒரு உலகையே கண்டனர். அங்கு அவர்கள்(மாமரி அன்னை) மலர்கரங்களில் தன் குழந்தையை ஏந்தி நின்றார்கள். அச்சிறு குழந்தை நாம் வாழும் கியூ வையகத்தை தனது பூக்கையால் தங்கியிருந்தது. 

ஆயரும் அறிஞரும் முழந்தாளிட்டு வணங்குகையில், அறிஞர் பாமரரைக் கண்டு பொறாமையுற்றனரா அல்லது பாமரர் தான் அறிஞரைக் கண்டு பொறாமைப்பட்டனரா என்று நினைந்து நினைந்து நான் வியப்புறுகிறேன். அறிஞர்தான் ஆயரைக் கண்டு பொறாமைப்பட்டிருக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை. ஏனெனில் ஆயர்கள் கண்ட வழி அறிஞர் பின்சென்றதைக் காட்டிலும் குறுக்கு வழி. ஆயர்கள் இறைவனாம் மெய்ப்பொருளைத் தேடித்திரிவதில் அநேக நாட்கள் செலவழிக்கவில்லை.

தொடரும்...