மனுமகன் சேசு பாகம் - 21

ஆன்ம வலிமையோடு வளர்ந்தார் இயேசு..

“ இயேசு வளர வளர ஞானத்திலும் முதிர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் மென்மேலும் உகந்தவரானார் “

லூக்காஸ் 2 : 52

இயேசு சுவாமி எல்லா வயதிலும் ஆண்டவருக்கு உகந்தவராக இருந்தார் என்று பறைசாற்றுகிறது இந்த இறைவார்த்தை..

இப்போதுள்ள குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகின்றன..

பிறந்து 15 நிமிடத்திற்குள் தந்தையால் அல்லது உறவினரால் போட்டோ எடுக்கப்பட்டு ஆன்லைன் ஸ்டேட்டசுக்கு போய்விடுகிறது..

(ஓரு பத்து பதினைந்து நாட்களாவது ஆனால்தான் என்ன? அதற்குள் என்ன அவசரம்)

அதன் பின்பு தாயோடு டி.வி சீரியல் கேட்டுக்கொண்டே மற்றும் பார்த்துக் கொண்டே வளர்கிறது..

ஒரு வயது ஆவதிற்கு விளையாடுவதற்கு தந்தையின் போனைக் கேட்கிறது.. அவரும் பெருமையோடு அதை விளையாடக் கொடுக்கிறார்..

போனில் விளையாட்டு தொடர்கிறது.. பள்ளிக்கு செல்லும் வயது வரை.. அதன் பின்பும்..

( இந்த தப்பை நம்மில் பலரும்தான் செய்கிறோம்.. எனக்கும் சேர்த்துதான்)

டி.வி சீரியல் பார்த்துக்கொண்டும்.. போனில் விளையாடிக்கொண்டு வளரும் குழந்தைகள் எப்படி தெய்வ பக்தியில் தெய்வ பயத்தில் வளரும்..?

நாமே நம் கண்களை குத்திவிட்டு.. அதன்பிறகு வலிக்கிறது என்றால்.. அதற்கு நாம்தானே காரணம்..

தினமும் குடும்பத்தோடு அமர்ந்து ஜெபிக்கிறோமா? குடும்ப ஜெபமாலை ஜெபிக்கிறோமா?

24 மணி நேரத்தில் ஒரு கால்மணி நேரம் கடவுளுக்காக செலவிடுகிறோமா?

உலகக்கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை.. ஆன்மீக கல்விக்கு கொடுக்கிறோமா? செல்லம் எதற்கெடுத்தாலும் செல்லம்.. எதைக் கேட்டாலும் செல்லம்.. செல்லம் கொடுத்து கொடுத்து நம் குழந்தைகள் வாழ்க்கையை நாமே வீணாக்குகிறோம்..

நம் குழந்தைகளுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுக்கிறோமா?

ஜெபமாலை ஜெபிக்க கற்றுக் கொடுக்கிறோமா?

பைபிள் படிக்க கற்றுக் கொடுக்கிறோமா?

ஞாயிறு மறைக்கல்விக்கு அனுப்புகிறோமா?

அல்லது நாமாவது மறைக் கல்வி கற்றுக் கொடுக்கிறோமா?

அந்த கிளாஸ் இந்த கிளாஸ்.. கம்ப்யூட்டர் கிளாஸுக்கு அனுப்பும் நாம் மறைக்கல்வி வகுப்புகளுக்கு ஏன் அனுப்புவதில்லை..?

ஞாயிற்றுக்கிழமையும் டியூசன்.. அல்லது ஸ்பெசல் கோச்சிங்க்..

அல்லது படிப்பு… படிப்பு… படிப்பு..

சில குடும்பங்களில் பிள்ளைகளுக்கு ஞாயிறு கடன் திருப்பலி கட்..

இதை விட கொடுமை என்ன இருக்கிறது..?

முதலில் பெற்றோர்கள் ஜெபித்தால்தானே பிள்ளைகள் ஜெபிப்பார்கள்..

டி.வியில் எந்த புரோகிராம் பார்க்கவேண்டும் எதை பார்க்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பெற்றோர்களுக்கு இருந்தால்தானே பிள்ளைகளுக்கும் இருக்கும்..

ஒரு நிகழ்ச்சி.. அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் எது போதிக்கப்படுகின்றன.. ஏன் நிகழ்ச்சி எப்படி இருக்கிறது.. ஏன் நடத்தப்படுகிறது என்று அலசி ஆராய்கிறோமா?

குறிப்பாக கலாச்சாரத்தை மகா கேவலமாக சீரழிக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸை குடும்பத்தோடு  பார்த்தால் குடும்பம் விளங்குமா? உருப்படுமா?

அது திட்டப்மிட்டு (Pre Plan) இயக்கப்படும் சினிமாதான் (கதை வசனத்தோடு) என்பது யாருக்கு புரிகிறது..?

தீடீரென்று வளர்ந்த ஒரு தொலைக்காட்சி சானல் போதிப்பது அனைத்தும் தமிழ்க்கலாச்சாரத்திற்கும், வாழ்க்கை நெறிக்கும் எதிரானது என்று நமக்கு ஏன் புரியவில்லை..?

எல்லாம் கெட்டு குட்டிச் சுவராகிக்கொண்டு வருகிறது..

டி.வி. சானல், போன் எல்லாவற்றிலும் ஆபாசம் மிகுந்து ஆன்மாக்களை குறிப்பாக இளைய சமுதாயத்தைக் கெடுத்து வருவதை அரசாங்கம் கூட வேடிக்கை பார்க்கிறதே.. தடை செய்ய வேண்டியவற்றை தடை செய்யாமல்..

எதிரியின் வேலை எளிதாகிவிட்டது..

தூய தமத்திருத்துவம் கவலையில் இருக்கிறது..

மாதா கண்களில் இரத்தம் வடிகிறது..

நமக்கு ஏன் இந்த நிலைமை..?

எப்படி இருந்த நாம் இப்படி இருக்கிறோம்?..

கிட்டதட்ட அநேக குடும்பங்களில் பெற்றோர்கள் வாயிலிருந்து வரும் பொதுவான பேச்சு..

“ என் மகன்/மகள் சொன்ன பேச்சே கேட்கிறதில்லை..” 

கீழ்படிதலும் தாழ்ச்சியும் குறைந்து வருகிறது..

எப்படி கேட்கும்?

நாம் கீழ்ப்படிந்தால்தானே.. நம் பிள்ளைகள் நமக்கு கீழ்ப்படியும்..?

இதுவும் நடக்கிறது..

“ உன் பையன் எங்க இருக்கான்?”

“அமேரிக்காவுல..”

“ உன் பையன் எங்க இருக்கான்?”

“ லண்டன்ல “

“ நீ எங்கே இருக்கே?”

“ இந்த நக்கல்தானே வேண்டாம்கிறது”

“ நாமே இரண்டுபேரும்தானே அனாதை ஆசிரமத்தில் இருக்கிறோம்”

இது வேடிக்கையாக இருந்தாலும் இதுதானே வாடிக்கையாகி வருகிறது..

நம் பிள்ளைகளைக்கு அன்பை, இரக்கத்தை மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை கற்றுக் கொடுக்கிறோமா?

இயந்திரமாக வளரும் அவர்கள் ஒரு காலத்தில் பெற்றவர்களையே தேவையில்லாத இயந்திரங்களாக எண்ணி வொர்க் சாப்பில் போட்டுவிடுகிறார்கள்..

இதற்கெல்லாம் காரண கர்த்தா யார்? நாமதான்..

இந்த வீழ்ச்சியின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால்..

குடும்பத்தில் ஜெபம் இல்லாமை.. கடவுள் மேல் பக்தி, பயம், ஞானம் இல்லாமல் குழந்தைகள் வளர்க்கப்படுவதால்..

மோட்சம், நரகம், உத்தரிக்கும்ஸ்தலத்தைப் பற்றி அறிவு இல்லாததால்..அதை நாம் போதிக்காததால்..

தேவ மாதா ஜெபித்தார்கள்… புனித சூசையப்பர் ஜெபித்தார்.. சேசு ஜெபித்தார்..

அந்த திருக்குடும்பம் குடும்பமாகவும் ஜெபித்தது..

எல்லாவற்றிற்கும், எல்லா நேரத்திலும் கடவுளையே சார்ந்திருந்தது.. நம்பியிருந்தது..

அதனால்தான் அவர்கள் பாலன் இயேசுவை நன்றாக வளர்த்தார்கள்..

பாலன் சேசுவும்,

“ ஞானத்திலும் முதிர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் மென்மேலும் உகந்தவரானார் “

எந்த குடும்பத்தில் கடவுள் முன்னிலைப்படுத்தப்படுகிறாரோ? அந்த குடும்பம் கண்டிப்பாக 100 சதவீதம் எந்த காலத்திலும் அது வீழ்ச்சியடையாது.. அதில் மகிழ்ச்சியும் குறையாது..

எந்த குடும்பத்தில் உலகம் உலகம் சார்ந்தவைகள் முன்னிலைப்படுத்தப்படுகிறதோ.. அக்குடும்பங்கள் வீழ்ச்சியிலிருந்து தப்பாது..

தற்போதைய மகிழ்ச்சிகள் காணல் நீர்போல் ஒரு காலத்தில் திடீரென்று காணமல் போய்விடும்..

இப்போதுதான் சேசு பாலன் பிறந்திருக்கிறார்.. அவர் ஞானத்திலும் அறிவிலும் சிறந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராக வளர்கிறார்..

இதில் கூட பாருங்கள் கடவுளுக்கு மட்டும் என்று சொல்லவில்லை மனிதருக்கும் என்று சேர்ந்து சொல்லப்படுகிறது..

எங்கும் எல்லா இடத்திலும் ‘சுய நலம்’ மட்டுமே தலைவிரித்தாடும் இந்த காலத்தில் மருந்திற்காகவது.. பிறர் நலம்.. பிறர் ஸ்நேகம்.. நாலு பேருக்கு உதவி என்று நாமும் வாழ வேண்டும்.. நம் பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும்..

இறை அன்பு பிறர் அன்பு என்ற அஸ்திவாரத்தில் கட்டப்படும் குடும்பங்களே வெற்றி பெறும்… வீழ்ச்சி அடையாது..

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !

சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !

மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !