தொடக்கத்திலிருந்ததுபோல் இன்றும் இருக்கிறது என்றும் இருக்கும். நம் ஆண்டவரைத் தேடிக் கண்டடைபவர்கள் எளியோரும் கற்றோருமே. சுவடியும் கையுமாய் உடைய எவனும், தான் அறிவதாக எண்ணும் எந்த உள்ளத்தினனும் என்றுமே கண்டடைந்ததில்லை.
அந்த இரவிற்கு திரும்பிப் போ. அன்றுதான் மனிதரின் அறியாமை இருளை அகற்ற ஒளிவீசும் இறையொளி தான் படைத்த உலகத்திலேயே குடி புகுந்தது. அங்கு எளியவரும் கற்றவரும்தான் அவரைக் கண்டனர் என்பதைக் காண்பாய் அவர்கள் ஆயரும் ஆய்வோருமே. வானதூதரும் நட்சத்திரம் ஒன்றும் தீபத்தால் ஏற்றப் பட்ட தீபம் போன்று, அப்பேரொளியின் பிரதிபலிப்பைப் பிடித்து ஆடுகளைக் காவல் காக்கும் ஆயர்களுக்கும் ஆகாயத்தை அலசிப் பார்க்கும் அறிஞருக்கும் அளித்தார்
என்னே ஆச்சரியம்! பெத்லகேமின் மலை வெளிகளில் தங்கள் மந்தைகளைக் காவல் காத்துக்கொண்டிருக்கையில், விண்ணவரின் ஒளியைக் கண்டு அவ்விடையர்கள் மிகவும் அச்சத்தால் நடுங்கினர்.
அவர்களை நோக்கி ஒரு வானதூதன் கூறியதாவது
நீங்கள் பயப்படாதீர்கள்; ஏனெனில் இதோ எல்லா மக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி வருவிக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். அது ஏதெனில் இன்று தாவீதின் நகரத்தில் கிறீஸ்துநாதராகிய உங்கள் இரட்சகர் உங்களுக்காகப் பிறந்து இருக்கிறார் (லூக். 2:10,11).
என்ன விந்தை ! மேதியா (Media) பாரசீக நாடுகளுக்கு அப்பால் வசிக்கும் அந்த முப்பேரறிஞர் (The Three wise men) வானுலகை துருவித் துருவி துழாவுகையில், பேரொளி வீசும் நட்சத்திரம் ஒன்று, கடவுளின் படைப்பில்லத்திலே ஒளி வீசும் திவ்விய நற்கருணைப் பேழை விளக்கு போன்று தோன்றி, அந்த மாட்டுக் குடிலுக்கு அறைகூவி அழைத்தது.
அம்மாட்டுத் தொழுவத்திற்கு மேலே வந்ததும், அங்கேயுள்ள உலகத்தின் ஒளியாகிய வானுலக சுடரொளியின் முன், அந்த நட்சத்திரம் தன் ஒளி இழந்து மங்கிற்று. தீச்சுடரை நோக்கி பாயும் பூச்சிகள் போன்று இடையரும் அந்த அறிஞரும் ஓடிவந்தனர் மாட்டு தொழுவத்திற்கு - அதுதான் அவர்களுக்கு அரியாசனம்
தொடரும்...