திருக் குழந்தையிடம்- அதுதான் அவர்களுக்கு கடவுள். குழந்தை உருவில் திகழ்ந்த கடவுள் ஏறெடுத்துப் பார்க்கையில் தன்னைக் கண்டடைந்த இருவகை வகுப்பினரை மட்டும் தான் அன்று பார்த்தார். இவர்களே அவரைக் கடைசி மட்டும் காண்பர் ஆயரும் அறிஞரும்; எளியோரும் கற்றோரும்
உலகின் அரசியலையோ, அல்லது அதன் கலையையோ அல்லது அதன் இலக்கியத்தையோ அறியாத வெள்ளை உள்ளத்தைக் கொண்டவர்களே அந்த ஆயர்கள். உரோமை பேராட்சியிலே, விர்ஜிலின் (Virgil) செய்யுளை அறியாத அறிஞரே இல்லாத அக்காலத்திலே, இவ்விடையர்களில் ஒருவராலும் கூட அப்புலவர் பெருமகனின் ஒருவரியைக் கூட ஒப்பிக்க முடியாது.
அவர்களுடைய மேய்ப்பு நிலங்களிலோ அல்லது எளிய வாழ்க்கையிலோ ஏரோது அரசனது சிற்றின்ப ஆசை கொண்ட அவைகளத்தின் இடறல் மிகுந்த ஒழுங்கீனங்கல் குறுக்கிடவில்லை; கோயிலில் அமர்ந்து ஆண்டின் எழுபது வாரங்களைக் கணக்கிட்டுக்கொண்டிருந்த அறிஞன் கமாலியலைப் (Gamaliel) பற்றிய எதுவும் அவர்கள் செவிக்கு எட்டவில்லை.
நாட்டின் முன்னேற்றத்தில், மக்களின் முன்னேற்றத்தில் இவர்கள் தகுதியற்றவர்கள் என்று உலக பொதுமக்களால் கருதப்பட்டு ஒதுக்கப்பட்டது. இருப்பினும், இந்த எளிய அரசர்களின் வழிவழி வந்த இந்த இடையர்கள், உங்கள் தலைக்கு மேலே உள்ள கடவுளையும் தங்கள் கால்களைச் சுற்றிவரும் ஆடுகளையும் - இரு முக்கிய பொருட்களை நன்கு உணர்ந்திருந்தனர். அந்த எளிய உள்ளங்களுக்கு இவை போதும் அறிந்துகொள்வதற்கு.
அன்றைய இரவிலே, வான்வெளிகள் ஒளி வெள்ளத்தில் மூழ்கி நாடோடிப் பாடல்களைத் தெறித்து ஒளி வீசிக் கொண்டிருக்கையில் மக்கள் பேராவலுடன் விழிமேல் விழிவைத்து எதிர்நோக்கிய பெருமான், தாழ்ந்த மக்களிடையே, ஓர் எளிய மாட்டுக் குடிலிலே, பெத்லகேம் எனப்படும் சிறப்பற்ற சிறு நகரிலே அப்பொழுதுதான் பிறந்தனர் என்று ஒரு தேவதூதர் அறிவித்தார்.
அந்த இடையர் தாங்கள் அறிந்த இரண்டு பொருட்ள்களில் ஒன்றாக ஓர் இளம் செம்மறியைத் தேடி எடுத்து சென்றனர். அதைத் தாங்கள் அறிந்த மற்ற ஒரேயொரு பொருளின், அதாவது, உலக தொடக்கத்திலேயே வெட்டுண்ட செம்மறியாய் மண்ணுலகில் உதித்த கடவுளின் திருவடிகளில் சமர்ப்பித்தனர். இறுதியாக இடையர்கள் தங்கள் ஆயனைக் கண்டடைந்தனர்
தொடரும்...