திவ்ய நற்கருணை நாதர் பகுதி-17

“ இதை வாங்கி உண்ணுங்கள், இது என் உடல் “

“ இதிலே அனைவரும் பருகுங்கள். ஏனெனில் உடன்படிக்கைக்கான என் இரத்தம் இது. பாவ மன்னிப்புக்கென்று பலருக்காக சிந்தப்படும் இரத்தம் “

மத்தேயு 26 : 26-27

நம் ஆண்டவர் புதிய உடன்படிக்கை செய்கிறார்? என்ன உடன்படிக்கை..

பழைய உடன்படிக்கை எல்லாம் உலகம் சார்ந்தது.. உலகம் சார்ந்த விடுதலையைச் சார்ந்தது..

பூலோக அடிமைத்தன விடுதலை.. அரசர்களின் வெற்றி.. எதிரி கையிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு விடுதலை.. புதிய நாடு.. புதிய தேசம்.. என்று அத்தனையையும் உலகம் சார்ந்த விடுதலையைக் குறித்தே இருந்தது..

அதேபோல் இஸ்ராயேல் மக்கள் கடவுளை விட்டு வழி தவறி.. பாதை மாறி சென்ற போதேல்லாம் அவர்களைத் கண்டித்து..தண்டித்து.. திருத்தி கடவுள் அவர்களோடு தம் கட்டளைகளையும், நியமங்களையும் கொடுத்து, ஆட்டு இரத்தத்தால் அவர்களுடைய பாவங்களை கழிவி தம் பக்கம் அவர்களைச் சேர்த்தார்..

அதன் பிறகு அவர்களுக்கு கடவுள் கொடுத்த வெற்றியும், நாடுகளும் கூட அவர்களை உலகம் சார்ந்த சவுரியமாக நிம்மதியாக வாழ செய்வதாகவே இருந்தது.. மொத்தத்தில் அது எல்லாம் ஒரு தற்காலிக நிம்மதியையே.. நிறைவையே கொடுத்தது.. 

ஆனால் புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவர் செய்த புதிய உடன்படிக்கை நித்திய விடுதலை.. நித்திய நிறைவு… நித்திய மோட்சம் சம்பந்தப்பட்டது.. அதன் விலை அதிகம்.. அதனால்தான் நம் நேச பிதா, தன்னுடைய ஒரே மகனை இரத்தம் சிந்த வைத்து, கையளித்து அவர் குமாரனின் இரத்தத்தால் புதிய உடன்படிக்கை செய்தார்..

இது உலகம் சார்ந்தது அல்ல.. தற்காலிகமானதும் அல்ல.. நித்திய.. நிரந்தரமானது.. இதுவும் புதிய தேசம்.. புதிய உலகம் சம்பந்தப்பட்டதுதான்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத.. யாராலும் வெற்றி கொள்ள முடியாத முடிவில்லாத மகிழ்ச்சி நிறைந்திருக்கும் நித்திய மோட்சம்..

ஆகவே அந்த நித்திய மோட்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல விலையாகக் கொடுக்கப்பட்டது…  நம் நேச செம்மறியின் இரத்தம்.. மானிட மகனான இயேசு சுவாமியின் இரத்தம்..

இந்த இரத்தம் நம் பாவங்களைக் கழிவி கடவுளிடம் சேர்க்கும் இரத்தம்.. பிசாசிடமிருந்து நம்மைப் பிரிக்கும் இரத்தம்..

அப்படியானால் அந்த இரத்தம் விலையேறப்பெற்ற இரத்தம் ஆனால் விலை மதிக்கமுடியாத இரத்தம்.. மாசற்ற திருஇரத்தம்.

இந்த இரத்தம் இரண்டு இடத்தில் இருக்கிறது.. ஆண்டவருடைய திருவுடலிலும் இருக்கின்றது… ஆண்டவரின் திருஇரத்தத்திலும் இருக்கின்றது..

ஆண்டவரின் உடலும் இரத்தமும் சேர்ந்ததுதானே திவ்ய நற்கருணை.. ஆண்டவருடைய திருவுடலில் அவர் திருஇரத்தமும் இருக்கிறது.. ஆண்டவருடைய திருஇரத்தத்தில் அவர் திருவுடலும் இருக்கிறது..

இதையேதான் பாத்திமா காட்சியும் நமக்கு உணர்த்தியது..

1916-ல் வானதூதன் பாத்திமா சிறுமிகளான லூசியாவிற்கு திவ்ய நற்கருணை வழங்கினார்.. ஆனால் ஜெசிந்தாவிற்கும், பிரான்சிஸிற்கும் ஆண்டவருடைய திருஇரத்தத்தை மட்டுமே குடிக்க கொடுத்தார்.. அதுவே அவர்களுக்கு புது நன்மையாக அமைந்தது என்று பார்க்கிறோம்..

இப்பேர்ப்ட்ட மாசற்ற செம்மரியான நம் இயேசு ஆண்டவரின் திருஇரத்தம் இருக்கும் திவ்ய நற்கருணைக்கு சமீப காலமாக நாம் கொடுக்கும் மரியாதை என்ன? மதிப்பு என்ன? அவர் மேல் நம்முடைய பார்வை எப்படி இருக்கிறது?

இருக்கிறவறான கடவுளுக்கு ( யாத்திராகமம் 3 : 14), திவ்ய நற்கருணையில் இருக்கும் கடவுளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்ன ? அவரைப் பெற நம்முடைய தயாரிப்புதான் என்ன?

அவர் வாக்கு மாறாதவர் “ நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் “ அவர் அப்படியே இருக்கிறார்..

நாம்தான் மாறிவிட்டோம்..

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொ.வ.மு (கொரானா வருவதற்கு முன்).

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொ.வ.பி ( கொரானா வந்த பின்).

“ அன்பின் தேவ நற்கருணையிலே அழியாப் புகழோடு வாழ்பவரே !

அன்புப் பாதையில் வழி நடந்தே அடியோன் வாழ்ந்திட துணை செய்வீர் !”

நம் நேசப் பிதா வாழ்த்தெப் பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !