பரிசுத்த தேவமாதா பரலோக பூலோக இராக்கினியாக அர்ச். தமத்திரித்துவத்தினால் முடிசூட்டப்பட்டதை தியானிப்போமாக.

மாதா கூறுகிறார்கள் :

"மோட்சத்தில் இவ்வளவு அதிகமான மகிமை எனக்காக வைக்கப் பட்டுள்ளது என்று நினைக்க என் தாழ்ச்சி என்னை அனுமதிக்கவில்லை. சர்வேசுரனைச் சுமந்திருந்ததால், என் சரீரம் அழுகலுக்கு உட்படாது என்று என் மனதில் நான் நிச்சயமாயிருந்தேன். ஏனென்றால் கடவுள் ஜீவியமாயிருக்கிறார். அவர் ஒரு சிருஷ்டியைத் திருப்திப்படுத்தி, அதைத் தம்மைக் கொண்டு நிரப்பும் போது, அவருடைய இந்தச் செயல்பாடு, சாவின் கேட்டிலிருந்து பாதுகாக்கிற சுகந்தத்தைப் போல் இருக்கிறது.

மாசற்றவளாக மட்டும் நான் நிலைத்திருக்கவில்லை. ஒரு கற்புள்ள, வளமிக்க அணைப்பினால் நான் கடவுளோடு இணைக்கப்பட்டிருந்தது மட்டுமல்ல, மாறாக, என் உதரத்தில் தன்னையே மறைத்துக்கொண்டு, அழியக்கூடிய சரீரத்தால் தன்னை மூடி மறைத்துக் கொள்ள விரும்பிய தெய்வீகத்தின் வெளிப்பாடுகளோடு என் மிக ஆழ்ந்த உள்ளரங்கம் வரையிலும் கூட நான் திருப்திப்படுத்தப்பட்டேன். ஆனால் என் சரீரம் என் திருச்சுதனின் கரத்தால் தொடப்படும் உணர்வு மற்றும், அவரது அணைப்பு, அவரது முத்தம், என் காதுகளால் அவரது குரலை மறுபடியும் கேட்டல், என் கண்களால் அவரது முகத்தைக் காணுதல் ஆகியவற்றின மகிழ்ச்சியை நித்திய பிதாவின் இரக்கமானது, தமது அடிமையானவளுக்கென வைத்திருக்கும் என்றும், அந்த பாக்கியங்கள் எனக்கு அருளப்படும் என்றும் நான் சிந்திக்கக் கூட முடியவில்லை. அதை நான் தேடவுமில்லை. இந்தப் பாக்கியங்கள் எல்லாம் என் ஆத்துமத்துக்குத் தரப்பட்டிருப்பது போதுமானதாயிருந்திருக்கும். அது பரலோகப் பேரின்பத்தால் என் சுயதன்மையை நிறைத்திருக்கும்.

மனிதனைப் பற்றிய சிருஷ்டிகரின் சிந்தனையைப் பாருங்கள் : அவன் இவ்வுலகில் வாழ்ந்து, மரணமின்றியே சிங்காரவனத்திலிருந்து பரலோகத்திற்குக் கடந்து செல்ல வேண்டும் என்று அவர் சித்தங் கொண்டிருந்தார். அப்படியே என் பூலோக சீவியம் முடிந்தவுடன், மாசற்றவளாகிய நான் என் சரீரத்தோடும், ஆத்துமத்தோடும் பரலோகத்தில் இருக்க வேண்டுமென கடவுள் விரும்பினார்.

சர்வேசுரன் மனிதனுக்காக எவற்றைச் சித்தம் கொண்டார், எவற்றையெல்லாம் விரும்பினார் என்பதற்கு நான் ஒரு நிச்சயமான சாட்சியாக இருக்கிறேன். அவை : ஒரு மாசற்ற வாழ்வு, பாவத்தை அறியாதிருத்தல், இந்த சீவியத்திலிருந்து நித்திய சீவியத்திற்கு அமைதியாகக் கடந்து போகுதல் ஆகியவை. இதன் காரணமாக, ஒருவன் ஓர் அரண்மனைக்குள் நுழையும்படி, ஒரு வீட்டின் வாசலைத் தாண்டுவது போல, தன் முழுமையான சுயத்தோடு, ஒரு இலௌகீக சரீரமாகவும், ஞான ஆத்துமமாகவும் சிருஷ்டிக்கப்பட்டுள்ள மனிதன், பூமியிலிருந்து பரலோகத்திற்குக் கடந்து போகிறான். அவன், ஆதியில் மனிதனுக்கு முழுமையான சரீர, மற்றும் இஸ்பிரீத்துவுக்குரிய உத்தம் தனத்துடன் சர்வேசுரனால் அளிக்கப்பட்ட சுயதன்மையின் உத்தம் தனத்தில் அதிகரிக்கிறான். இந்த உத்தமதனமானது, சர்வேசுரனுக்கும், அவருடைய வரப்பிரசாதத்திற்கும் பிரமாணிக்கமாக நிலைத்திருந்த ஒவ்வொரு சிருஷ்டிக்கும் வழங்கப்படும்படி தேவ சித்தத்தால் நியமிக்கப்பட்டிருந்தது. மோட்சத்தை ஒளிர்விக்கிற நித்திய சூரிய னாகிய கடவுளிடமிருந்து வந்து மோட்சத்தில் இருந்து அதை நிரப்பும் முழு ஒளியில் மனிதன் இந்த உத்தமதனத்தை அடைந்திருப்பான்.

பரலோக மகிமைக்கு சரீரத்தோடும், ஆத்துமத்தோடும் உயர்த்தப் பட்ட என்னை கடவுள் பிதாப்பிதாக்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், அர்ச்சியசிஷ்டவர்களுக்கும், சம்மனசுக்களுக்கும், வேதசாட்சி களுக்கும் மேலாக ஸ்தாபித்து, இப்படிக் கூறினார்:

''சிருஷ்டிகரின் உன்னதமான கைவேலை இங்கே இருக்கிறது. இதுவே சகல மனித குமாரர்களிலும் நான் என் அதிக உண்மையான சாயலாகவும், பாவனையாகவும் சிருஷ்டித்த எனது சிருஷ்டி. இது என் தெய்வீக சிருஷ்டிக்கும் வல்லமையின் தலைசிறந்த படைப்பின் கனி; தெய்வீகமாயிருப்பதால், நித்திய ஞான அரூபியாகிய என்னில் மட்டும் அடைப்பட்டிருக்கிறதாக இப்பிரபஞ்சம் காண்கிற அதன் அதிசயம். என்னைப் போலவே அதுவும் இஸ்பிரீத்துவாகவும், புத்தி யுள்ளதாகவும், சுதந்திரமுள்ளதாகவும், பரிசுத்தமுள்ளதாகவும் இருக் கிறது. இது மிகப் பரிசுத்த, மாசற்ற சரீரத்தில் இருக்கிற இலௌகீக சிருஷ்டியாகவும் இருக்கிறது. சிருஷ்டிப்பின் மூன்று இராச்சியங் களிலும் இருக்கிற மற்ற சகல ஜீவராசிகளும் அதை வணங்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றன. இதுவே மனிதன் மேல் நான் கொண் டுள்ள அன்பின் சாட்சியாக இருக்கிறது. அவன் என் இராச்சியத்தில் உத்தமமான ஓர் உருவமைப்பும், நித்திய சீவியத்தின் பேரின்பமுள்ள கதியையும் கொண்டிருக்க வேண்டும் என நான் விரும்பினேன்.

மனிதனை நான் மன்னித்துள்ளேன் என்பதற்கான சாட்சியம் இதுவே. தமத்திரித்துவ அன்பின் சித்தத்தினால், அவன் தனது ஆதி அந்தஸ்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்படவும் என் கண்களில் அவன் புதுசிருஷ்டியாக இருக்கவும் நான் அவனுக்கு அருளினேன். இதுவே மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே சந்திப்புப் பாலமாக இருக்கிறது. இவளே காலங்களைத் தொடக்க நாட்களுக்குத் திருப்பி எடுத்துச் செல்பவள்; நான் சிருஷ்டித்தபடியே ஏவாளை மீண்டும் காணும் மகிழ்ச்சியை என் தெய்வீகக் கண்களுக்குத் தருபவள்; இப்போது இன்னும் அதிக அழகாகவும், பரிசுத்தமாகவும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாள். ஏனெனில் இவளே என் வார்த்தையானவரின் மாதாகவும், சகலத்திலும் பெரிய மன்னிப்பின் வேதசாட்சியுமாக இருக்கிறாள். எந்தக் கறைதிறையை யும் ஒருபோதும் அறியாத இவளது மாசற்ற இருதயத்திற்கு, நான் பரலோகத்தின் பொக்கிஷங்களைத் திறக்கிறேன். அகங்காரத்தை ஒருபோதும் அறியாத இவளுடைய சிரசுக்கு நான் என் மகிமைப் பிரகாசத்தின் மலர்க் கிரீடம் ஒன்றைச் செய்து முடிசூட்டுகிறேன். ஏனென்றால் இவளே உங்கள் இராக்கினியாக இருக்கும்படியாக, எனக்கு எல்லாரிலும் அதிக பரிசுத்தமானவளாக இருக்கிறாள்.''

மோட்சத்தில் கண்ணீர் என்பது இல்லை. ஆனால் அரூபிகள் ஓர் உணர்ச்சியால் தூண்டப்பட்டுத் துளிர்க்கிற திரவமாகிய கண்ணீர் சிந்துவதற்கு அனுமதிக்கப்பட்டால், அந்த மகிழ்ச்சி நிறைந்த கண்ணீருக்குப் பதிலாக, அங்கே, அப்போது, இந்த தேவ வார்த்தை களுக்குப் பிறகு, மின்னி ஜொலிக்கிற ஒளிகளின் சுடர் இருந்தது. பரலோகப் பேரொளிகள் இன்னும் அதிக உயிருக்கமுள்ள அழகிய ஒளிச்சிதறல்களாக மாறிய மாற்றம் இருந்தது. மிகப்பிரகாசமாகப் பற்றியெரிந்த தேவசிநேக நெருப்புகளின் சுவாலை இருந்தது. விஞ்சப் பட முடியாததும், விவரிக்க முடியாததுமாகிய பரலோக இசைகளின் வாசிப்பு இருந்தது. அவற்றோடு, பிதாவாகிய சர்வேசுரனுக்கும், நித்தியப் பேரின்பத்திலிருக்கிற அவருடைய அடிமைக்கும் தோத்திரமாக, என் நேசகுமாரனின் அழகிய குரலொலி இணைந்து ஒலித்தது.

மரியாயே வாழ்க!