மாதாவுக்கு நம்மை அர்ப்பணம் செய்வது பரிகாரத்தின் முதல்படி.
உலகம் ஈடேற்றம் பெற பாத்திமாவில் மாதா கொடுத்த அழைப்பு ஜெபம், தவம், பரிகாரம். ஜெப மாலை நம் ஜெபமாக, குறிப்பாகக் குடும்ப ஜெபமாலை நம் ஜெபமாக வேண்டும்.
கத்துவதும், கூச்சல் போடுவதும் ஜெபமல்ல என்பதை உணர வேண்டும். அடுத்து, வாழ்க்கையையே ஒரு தவம்போல் வாழ வேண்டும். விண்ணகத்தை விட்டுக் கடவுள் மண்ணுக்கு வந்து பரிகாரம் செய்து நம்மை மீட்டார். நம் பாவங்களுக்கு அவர் பரிகாரம் செய்தார் என்றால், நம் பாவங்களுக்கு நாம் பரிகாரம் செய்ய வேண்டாமா?
இவ்வுலகிலேயே நம் பரிகாரத்தை நாம் முடிக்காவிட்டால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அதைத் தீர்க்க வேண்டியது வரும். இங்கு தீர்ப்பது எளிது. அங்கு தீர்ப்பது கடினமானது (மத். 5:25-26). நல்ல கள்ளன் இதைச் செய்துதான் இயேசுவோடு கூட ஒரே நேரத்தில் மோட்சத்திற்குள் நுழைந்தான் லூக். 23:43).
தனது பாவங்களுக்குத் தண்டனையாக தன் சிலுவைச் சாவை ஏற்றுக் கொண்டான் (லூக். 23:41). தன் பாவப் பரிகாரத்தை இவ்வுலகிலேயே முடித்துக் கொண்டான். எனவே மரணத்துக்குப் பின் கடவுளால் அவனைத் தண்டிக்க இயலாது. மோட்சத்தில் சேர்த்துக் கொண்டார். மற்ற கள்வனோ இங்கும் வேதனை அனுபவித்து மோட்சத் தையும் இழந்தான். சக்கேயுவும் தன் பாவத்திற்குப் பரிகாரம் செய்துதான் மீட்படைந்தான் (லூக்.19:8-9).
நாமும் ஏன் உலகம், நரகம் என்று இரு பக்கமும் வேதனை அனுபவிக்க வேண்டும்? இங்கு அனுபவிக்கும் வேதனைகளைப் பாவப் பரிகாரம் ஆக்குவோம் எனில் எளிதாக மோட்சம் சேரலாமே!
ஒரு தலைவலி வந்தால் அந்த வேதனையை இயேசு வின் முள்முடி வேதனையோடு சேர்த்துப் பாவப் பரிகாரமாக ஒப்புக்கொடுப்போம்! கால்வலி வந்தால் இயேசுவின் 3ஆம், 7ஆம், 9ஆம் ஸ்தல வேதனை களோடு ஒப்புக்கொடுப்போமே! எளிதாக நமது பாவப்பரிகாரம் இவ்வுலகிலேயே முடியும்.
நல்ல கள்ள னைப் போன்ற நிஜ சிலுவை நமக்கில்லை! மாறாக, நம் வாழ்வின் இன்பம், துன்பம், அவமானம், வெயில், குளிர் எல்லாவற்றையும் நம் ஒப்புதல் வழியாகப் பாவப் பரிகாரம் ஆக்கமுடியும். நம்மையும் மீட்டுக் கொண்டு மற்றவர்களையும் மீட்க முடியும்!
மோட்சம் சேர எளிய வழி நல்ல கள்ளன் வழி! இதோடு பிறரை நேசிப்பதையும், மன்னிப்பதையும், பிறருக்கு உதவுவதையும் அது சிலுவையாகத் தோன்றினாலும் வாழ்க்கையின் தவமாகச் செய்வோம் (மத்.16;24; லூக்.14:27).
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
பரிகாரம் இல்லையெனில் பரிதாபம்
Posted by
Christopher