பரிசுத்த தேவமாதா தனது ஆத்தும சரீரத்தோடு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைத் தியானிப்போமாக.

எத்தனை நாட்கள் கடந்து விட்டன? அதைத் தீர்மானிப்பது கடினமாக இருக்கிறது. மாதாவின் திருச்சரீரத்திற்குச் சூட்டப் பட்டுள்ள மலர்களைக் கொண்டு அதைக் கணக்கிட்டால், ஒரு சில மணி நேரம்தான் கடந்திருக்கிறது என்று நாம் சொல்லலாம். வேண்டி யிருக்கும். ஆனால் ஒலிவக்கிளைகளின் மீது விழுந்து கிடக்கிற புது மலர்களையும், ஏற்கெனவே சருகாகிப்போன இலைகளைக் கொண் டுள்ள கிளைகளையும், அருளிக்கங்களைப் போல பெட்டியின் மூடியின் மேல் கிடக்கும் மலர்களையும் வைத்துக் கணக்கிட்டால், இப்போது சில நாட்கள் கடந்துவிட்டன என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

ஆனால் மாதாவின் திருச்சரீரம், அவர்கள் மரித்தபோது எப்படி இருந்ததோ, அப்படியே இப்போதும் இருக்கிறது. மரணத்தின் சுவடு எதுவும் அவர்களது முகத்தின் மீதோ, அல்லது அவர்களுடைய சிறிய கரங்களின் மீதோ காணப்படவில்லை. அந்த அறையில் துர்வாசனை எதுவும் வீசவில்லை. மாறாக, தூபம், லீலி மலர்கள், ரோஜா மலர்கள், பள்ளத்தாக்கின் லீலிகள், மலைப் பூண்டுகள் இவற்றின் வாசனைகள் எல்லாம் கலந்த ஒரு விவரிக்க முடியாத நறுமணம் அந்த அறையின் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது.

அருளப்பர் உறங்கிக் கொண்டிருக்கிறார். எத்தனை நாட்கள் அவர் தூங்காமல் இருந்தார் என்று தெரிய ஷவில்லை. களைப்பு மிகுதியினால் ஒரு முக்காலியின் மேல் அமர்ந்து அவர் உறங்குகிறார். தரையில் வைக்கப்பட்டிருக்கிற விளக்கின் வெளிச்சம் அவர்மேல் விழுந்து, அவரது களைத்துப் போன முகம் வெளுத்திருப்பதைக் காட்டுகிறது. அவருடைய கண்களைச் சுற்றிக் கருவளையம் காணப்படுகிறது. அதிகம் அழுததால், அவருடைய கண்கள் சிவந்திருக்கின்றன.

விடியல் மிக அருகில் இருக்க வேண்டும். ஏனென்றால் அதன் மங்கலான ஒளியில் மொட்டை மாடியும், வீட்டைச் சுற்றியுள்ள ஒலிவ மரங்களும் கண்ணுக்குப் புலப்படுகின்றன. நேரம் செல்லச் செல்ல அதிகரித்து வருகிற ஒளி, கதவினூடாக ஊடுருவி உள்ளே வருகிறது. முதலில் சிறிய விளக்கின் வெளிச்சத்தில் அரைகுறையாக மட்டுமே தெரிந்த அந்த அறையில் உள்ள பொருட்கள் இப்போது அதிகாலை வெளிச்சத்தில் அதிகத் தெளிவாகத் தென்படத் தொடங்குகின்றன.

திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி அந்த அறையை நிரப்புகிறது. அந்த ஒளி படிப்படியாக அதிகரித்து, விடியற்காலையின் வெளிச் சமும், விளக்கின் வெளிச்சமும் மங்கச் செய்கிறது. தேவ சுதன் பெத்ல கேமின் குகையில் பிறந்தபோது அங்கே பெரும் பிரவாகமாகப் பொங்கிப் பரவிய ஒளியைப் போல அது இருக்கிறது. இந்தப் பரலோக ஒளியில், சம்மனசுக்கள் தோன்றுகிறார்கள். அதனால் முன்பிருந்த வெளிச்சத்தைவிட அதிகப் பிரகாசமான ஒளி இப்போது அறையில் பரவியிருக்கிறது. இடையர்களுக்கு சம்மனசுக்கள் தோன்றிய போது நிகழ்ந்தது போல, மெதுவாக அசைக்கப்படுகிற அவர்களது இறக்கை களிலிருந்து பல வண்ணங்களிலான ஒளித்துணுக்குகள் புறப்பட்டு அவர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. அந்த இறக்கைகளிலிருந்து மனதிற்கு மிக இணக்கமான மெல்லிய ஒலி வெளிப்படுகிறது. யாழ் மீட்டப்படுவது போல அத்தனை இனிமையாயிருக்கிறது அந்த ஒலி.

இந்த சம்மனசுக்கள் அந்தச் சிறிய படுக்கையைச் சுற்றி வட்டமாக நின்று, குனிந்து, அசையாமல் இருக்கிற மாதாவின் திருச்சரீரத்தைத் தூக்குகிறார்கள். அப்போது அவர்களுடைய இறக்கைகள் இன்னும் வேகமாக அடித்துக்கொள்கின்றன. அதனால் அவற்றிலிருந்து வரும் ஒலியும் முன்பிருந்ததைவிட அதிகரிக்கிறது. சேசுவின் கல்லறை அற்புதமாய்த் திறக்கப்பட்டது போல, வீட்டின் மேற்கூரையில் அற்புதமாகத் திறக்கப்பட்டிருக்கிற ஒரு பெரிய திறப்பின் வழியாக, தங்கள் பரிசுத்த இராக்கினியின் மிகப் பரிசுத்தமான திருச்சரீரத்தைச் சுமந்து கொண்டு அவர்கள் வெளியேறுகிறார்கள். அது மிகப் பரிசுத்த சரீரம் என்பது உண்மைதான். ஆயினும் அது இன்னமும் மகிமைப் படுத்தப்படவில்லை. ஆதலால் அது இயற்பியல் விதிகளுக்கு இன்னமும் உட்பட்டிருக்கிறது. சம்மனசுக்களின் இறக்கைகளின் ஒலி மேலும் அதிகரித்து, இப்போது ஒரு ஆர்மோனியக் கருவியின் இசையொலியைப் போல அடர்த்தி மிக்கதாக ஆகியிருக்கிறது.

அருளப்பர் இன்னும் தூக்க மயக்கத்தில் இருந்தாலும் அவர் தம் முக்காலியின் மீது இரண்டு மூன்று தடவை அசைவதைக் காண முடிந்தது. அந்த அடர்த்தியான ஒளியும், சம்மனசுக்களின் இறக்கை களின் பலத்த சத்தமும் அவரது தூக்கத்தை சற்று கலைத்திருக்க வேண்டும். இப்போதோ அந்த சத்தத்தால் அவர் விழித்துக் கொண்டு விட்டார். திறந்த கூரை வழியே உள்ளே வந்து வாசல் வழியே வெளியேறுகிற காற்று, கடுமையான சுழற்காற்றாக உருவெடுக்கிறது. அது இப்போது வெறுமையாயிருக்கிற படுக்கையின் விரிப்புகளையும், அருளப்பரின் ஆடைகளையும் அசைக்கிறது. அக்காற்றில் விளக்கு அணைந்து விட்டது. கதவு பலத்த சத்தத்துடன் அறைந்து மூடுகிறது.

இன்னமும் அரைத் தூக்கத்தில் இருக்கும் அப்போஸ்தலர், என்ன நடந்தது என்று சுற்றிலும் பார்க்கிறார். படுக்கை வெறுமையாயிருக்கி றதையும், வீட்டின் மேற்கூரை திறந்திருக்கிறதையும் கவனிக்கிறார். ஏதோ ஓர் அற்புதம் நடந்திருக்கிறது என்று புரிந்துகொள்கிறார். ஒரு ஞான உள்ளுணர்வால், அல்லது ஒரு பரலோக அழைப்பினால் உந்தப்பட்டவராக அவர் மட்டுப்பாமாடியை நோக்கி வெளியே ஓடி, தலையை உயர்த்திப் பார்க்கிறார். உதிக்கும் சூரியனின் வெளிச் சத்தால் தம் பார்வை மட்டுப்படாதபடி, சூரிய வெளிச்சத்திலிருந்து கண்களுக்கு கைகளால் நிழல் ஏற்படுத்திக் கொண்டு பார்க்கிறார்.

தா, இன்னமும் உயிரற்றதாகவும், உறங்குகிற ஒரு ஆளைப் போலவே தோற்றமளிப்பதுமான அமலோற்பவ மாதரசியின் திருச் சரீரத்தை அவர் காண்கிறார். சம்மனசுக்களின் ஒரு அணியால் தாங்கப் பட்டு, அந்த மாசற்ற சரீரம் உயர்ந்து கொண்டே போகிறது. பிரியா விடையின் ஒரு கடைசி சயிக்கினையாக அவர்களது மேற்போர்வை யின் ஓர் ஓரமும், மூடுதுகிலும் வேகமாக அசைகின்றன. வேகமாக மேல்நோக்கி உயர்வதால் உருவாகும் காற்றினாலும், சம்மனசுக்களின் இறக்கைகளின் அசைவினாலும் அவை அப்படி அசைந்திருக்கலாம். அருளப்பர் அடிக்கடி மாதாவின் திருச்சரீரத்தைச் சுற்றி வைத்துக் கொண்டிருந்தவையும், நிச்சயமாக மாதாவின் உடுப்புகளின் மடிப்பு களில் இருந்திருக்கக் கூடியவையுமான சில பூக்கள் மாடியின் மீதும், ஜெத்சமெனியின் தரைமீதும் விழுகின்றன. அதே வேளையில் சம்மனசுக்களின் பலத்த ஓசான்னா கீதத்தின் ஒலி, அவர்கள் தூரம் செல்லச்செல்ல, படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது.

இது அவரைத் தேற்றவும், தமது சுவீகாரத் தாயாரின் மீது தாம் கொண்டிருந்த அளவற்ற அன்பிற்குப் பிரதிபலனாகவும், கடவுளால் அவருக்கு அருளப்பட்ட ஒரு புதுமைதான். மாமரி இப்போது சூரியக் கதிர்களால் சூழப்பட்டிருப்பதை அவர் காண்கிறார். எந்தப் பரவச நிலை அவர்களது ஆத்துமத்தை சரீரத்திலிருந்து பிரித்ததோ, அந்த நிலையிலிருந்து இப்போது அவர்கள் வெளியே வருகிறார்கள். அவர்கள் இப்போது உயிர்பெற்று தன் பாதங்களில் நிற்கிறார்கள். ஏற்கனவே மகிமைப்படுத்தப்பட்டுள்ள சரீரங்களுக்கேயுரிய பரலோகக் கொடைகளையும் அவர்கள் இப்போது அனுபவிக்கிறார்கள்.

அருளப்பர் கடவுளால் தமக்கு அனுமதிக்கப்பட்ட இந்தப் புதுமையின் பலனாக தேவமாதாவை அவர்கள் இப்போது இருக்கிறபடி அவர் காண்கிறார். மாதா மிக வேகமாக இப்போது சம்மனசுக்களால் தாங்கப்படாமலே மோட்சத்தை நோக்கி உயர்ந்து செல்கிறார்கள். சம்மனசுக்கள் அவர்களைச் சூழ்ந்து பறந்தபடி ஓசான்னா கீதம் பாடு கிறார்கள். எந்த எழுதுகோலாலும், மனித வார்த்தையாலும், கலைஞனின் கைவேலையாலும் சித்தரிக்கப்படவோ, விவரிக்கப்படவோ, செதுக்கப் படவோ இயலாத அந்த பேரழகுக் காட்சியால் பரவச நிலைக்கு உட்பட்டிருக்கிறார் அருளப்பர்.

மட்டுப்பாமாடியின் குட்டைச் சுவரின் மீது இன்னமும் சாய்ந்த படி, அவர் சர்வேசுரனின் இந்த வியத்தகு ஒளி வடிவத்தைத் தொடர்ந்து தரிசித்துக்கொண்டிருக்கிறார். மாமரியைப் பற்றி உண்மையாகவே இந்த வார்த்தைகளை நாம் கூறலாம். அவதரித்த வார்த்தையானவரின் ரூபமாகவே அவர்கள் இருக்கும்படி, அவர்கள் மாசின்றி உற்பவிக்க வேண்டும் என்று விரும்பிய சர்வேசுரனால் ஒப்பற்ற விதமாக அவர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது சிநேகமாகவே இருக்கிற சர்வேசுரன் தமது பூரண பிரியமுள்ள சீடனுக்கு கடைசியாக ஓர் உன்னதமான புதுமையைக் காண்பிக்க சித்தங்கொள்கிறார். மிகப் பரிசுத்த மாதா தமது மிகப் பரிசுத்த திருக்குமாரனைச் சந்திக்கிற காட்சியை அருளப்பர் காண்கிறார். சேசுவும் ஜோதிப்பிரவாகமாகவே காட்சியளிக்கிறார். கம்பீரமும், விவரிக்க முடியாத பேரழகும் உள்ளவ ராக அவர் விரைவாக பரலோகத்திலிருந்து இறங்கி, தம் தாயாரிடத் தில் வந்து சேர்கிறார். அவர்களைத் தமது திரு இருதயத்தோடு அணைத்துக்கொள்கிறார். பின் அவர்களோடு சேர்ந்து, இரண்டு பெரும் கோள்களைவிட அதிகப் பிரகாசத்தோடு, இருவரும் அவர் புறப்பட்டு வந்த இடத்தை நோக்கி மேலேறிச் செல்கிறார்கள்...