சேசுநாதரின் திருப்பாடுகளும் ஆத்தும இரட்சணியமும்!

நம் ஆன்மாக்கள் எந்த அளவுக்கு ஆண்டவருக்குப் பிரியமானவையாக இருக்கின்றன என்றால், அவர் அவற்றைத் தம் உயிரையும் விட மேலாக மதிக்கிறார்.

பாவத்தால் நரகத்திற்கு அடிமையாகிப் போன ஆத்துமத்தை மீட்டு இரட்சிக்கும்படி, அவர் தம் விலை மதிக்கப்படாத உயிரைச் சிலுவையில் பலியாக்குகிறார்.

இவ்வாறு அவர் ஆன்மாக்களின் மீது தாம் கொண்ட பேரன்பை நம் காட்சிக்கு வைக்கிறார் என்று கிறிஸ்துவின் திவ்ய நற்கருணை சிநேகம் என்ற நூல் கூறுகிறது.