அர்ச். கிறிஸ்தோதம் அருளப்பர் "இது பாரம்பரியமா? அதற்கு மேல் கேட்காதே”.
அர்ச். பீட்டர் கணிசியுஸ் வேதசாஸ்திரி : "நாம் எல்லோரும் - திருச்சபை பாரம்பரியத்தில் வரையறுக்கப்பட்டவைகளையும், அப்படியே பாரம்பரிய வழக்கமாக இருப்பவைகளையும், மாறுதலின்றி கடைபிடிக்க வேண்டியவர்கள்.''
அர்ச். பீட்டர் தமியான் வேதசாஸ்திரி "திருச்சபையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாரம்பரிய வழக்கத்தை மாற்றுவது சட்டவிரோதமாகும். உங்கள் பிதாக்கள் ஏற்படுத்திய சின்னங்களை நீக்காதீர்கள்.''
பாப்பரசர் அர்ச். முதலாம் ஸ்டீபன் "அவர்கள் எதிலும் புதியவற்றை உருவாக்க கூடாது, ஆனால் பாரம்பரியத்தை கடைபிடிக்க வேண்டும்"
பாப்பரசர் 15-ம் ஆசீர்வாதப்பர் "புதிதாக எதையும் உருவாக்காதீர்கள். பாரம்பரியத்தோடு திருப்தியடையுங்கள்''
அர்ச். லெரின்ஸ் வின்சென்ட் ''...... யாரும், ஏமாற்றுக்களைக் கண்டுணர்ந்து, அவ்வப்போது பதிதர்கள் விரிக்கும் கண்ணிகளைத் தவிர்த்து பாதுகாப்பாக முழுமையான கத்தோலிக்க விசுவாசத்தில் நீடித்திருக்க வேண்டுமானால், சர்வேசுரனுடைய உதவியோடு, விசுவாசத்திற்கு இரண்டு வழிகளில் வலிமை சேர்க்கவேண்டும். முதலில் சர்வேசுரனுடைய சட்டத்தினால், இரண்டாவது கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியத்தினால்!
"கத்தோலிக்கருக்கு 'பக்தியற்ற பதிதர்களைப் போல, - திருச்சபையின் பாரம்பரியத்தை இகழவும், புது நவீனங்களை உருவாக்கவும் அல்லது சட்டப்படியான கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியத்தின் ஒரு சத்தியத்தையேனும் தங்கள் தீமையால், கபடமாக அழிக்கவும் முயற்சிக்க துணிபவர்களை கண்டிக்கும் 2 ம் நிசே பொதுச் சங்கத்தின் அதிகாரத்தை எதுவும் நீக்க முடியாது"
- அர்ச். 10ம் பத்திநாதர் பாப்பரசர் - Pascendi Dominici Gregis