கத்தோலிக்க திருச்சபையின் திவ்விய பலிபூசை

உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஒரே திவ்விய பலிபூசை: "திரிதெந்தீன் திவ்விய பலி பூசை" , " உண்மையான திவ்விய பலிபூசை', "எல்லா காலங்களின் திவ்விய பலிபூசை" என்று அழைக்கப்பட்டு லத்தீன் மொழியில் நிறைவேற்றப்படுகிறது.

(நாம் இதில் பங்குபெற நமக்கு லத்தீன் தெரிந்திருக்கத் தேவையில்லை . நிருபம், சுவிசேஷம், பிரசங்கம் முதலியவைகளை தமிழில் கேட்கலாம்.)

திவ்விய பலிபூசையை, நமதாண்டவர் சேசுநாதர் சுவாமி ஏற்படுத்தினார். இராப்போஜனம் முடிந்த பின் முதல் திவ்விய பலிபூசையை நிறைவேற்றி, அப்போஸ்தலர்களுக்கு நிறைவேற்ற கற்றுக் கொடுத்தார்.

* இந்த திவ்விய பலிபூசையை என்பது ''சேசுவின் கல்வாரி பலி, - காலத்தை ஊடுருவி, இரத்தம் சிந்தா முறையில் நம் பீடங்களில் நிகழ்வதாகும்”. (Dz.938)

* முதல் வேதசாட்சியான அர்ச். முடியப்பர் முதல், 2002A D ஆண்டு அர்ச்சிஷ்டப் பட்டம் பெற்ற அர்ச். பாத்ரேபியோ சுவாமிகள் வரை சகல அர்ச்சிஷ்டவர்களும் இந்த பூசையை நிறைவேற்றியதால் அல்லது கண்டதன் பலனால்தான் , அர்ச்சிஷ்டவர்கள் ஆனார்கள்.

* தேவவழிபாட்டு முறைகள் முழுவதும் வளர்ந்த நிலையில் திவ்விய பலிபூசை மாற்றப்பட முடியாத நித்திய சட்டமாக (Canonisation) அர்ச். 5-ம் பத்திநாதர் பாப்பானவரால் 14 ஜூலை 1570AD யில் பிரகடனப்படுத்தப்பட்டது. 

(Apostolic Constitution Quo Primum. 1570 AD) [Canonisation என்றால் - நித்திய சட்டமாக்குதல். அப்படிப்பட்ட சட்டத்தை பின்வரும் எந்த பாப்பானவரும் மாற்ற அதிகாரம் இல்லை . (உ-ம்) முறையாக திருச்சபையால் அர்ச்சிஷ்ட பட்டம் கொடுக்கப்பட்ட ஒரு (Canonised) அர்ச்சிஷ்டவரை, பிற்காலத்தில் வரும் ஒரு பாப்பரசர்." இவர் அர்ச்சிஷ்டவர் அல்ல", என்று அறிவிக்க அதிகாரம் இல்லை . 

எனவே திரிதெந்தீன் திவ்விய பலிபூசையை ரத்து செய்யவோ / தடுக்கவோ / மாற்றவோ அல்லது புது பூசையை காண / நிறைவேற்ற , / நிர்பந்தப்படுத்தவோ என்றும் எவருக்கும் அதிகாரம் இல்லை. (Quo Primum - 14 July 1570)

* இன்று 266 வது பாப்பானவரின் ஆட்சி நடைபெறுகிறது. அர்ச். இராயப்பர் துவங்கி 261 பாப்பானவர்களின் ஆட்சி காலங்களில் இந்த உண்மையான திவ்விய பலிபூசை மட்டுமே நிறைவேற்றப் பட்டது.

* இந்த உன்னத திவ்விய பலிபூசையை அர்ச். தோமையார் இந்தியாவுக்கு கொண்டு வந்து, கிறிஸ்து ராஜாவின் ராஜ்ஜியம் நம்மிடம் வரச் செய்தார்.

* உண்மையான திவ்விய பலி பூசையின் பலனாகத்தான் அர்ச். பிரான்சிஸ் சவேரியார் மக்களை மனந்திருப்பினார். 

* திரிதெந்தீன் திவ்வியபலி பூசைக்காகத்தான், அர்ச். அருளானந்தர் நமது நாட்டில் ஓரியூரில் தன் இரத்தத்தை சிந்தி, வேதசாட்சியானார்.

* ஒவ்வொரு அர்ச்சிஷ்டவரும் மோட்சம் சென்றதற்கும், பெரும் பாவிகளும் பெரிய அர்ச்சிஷ்டவர்கள் ஆனதற்கும் காரணம் இந்த திவ்விய பலிபூசைதான்!

* 28 AD முதல், 1969 AD வரை 1941 ஆ ண்டுகளாக தினமும் , சகல தேவாலயங்களிலும், உலகமெங்கும் திரிதெந்தீன் திவ்விய பலிபூசை ஒரே ஒழுங்குப்படி நிறைவேற்றப்பட்டு, அதனால் தேவ வரப்பிரசாதம் ஆன்மாக்கள் மேல் வெள்ளமாகப் பாய்ந்தது.

* திருச்சபையின் எதிரிகள், பேயின் தூண்டுதலால் கத்தோலிக்க திருச்சபையை அழிக்க அப்போஸ்தலர்களி ன் காலத்திலிருந்தே முயன்று வந்தனர். ''திருச்சபையை அழிப்பதற்கு திவ்விய பலி பூசையை அழிக்கவேண்டும்” என்றான் மார்ட்டின் லூத்தர்.

* கடந்த 300 ஆண்டுகள் தீவிர முயற்சியால், - 'மனிதம்', 'நவீனம்', முதலிய சகல தப்பறை கொள்கைகளை சிறிது சிறிதாக குருக்கள், கன்னியர் மடங்க ளில் எதிரிகள் (Free Masons et al.) விதைத்தனர்.

* இதனால், நாளடைவில் திருச்சபைக்கு உள்ளே இருப்பவர்கள் சிலர் எதிரிகளாக மாறினர். இவர்கள் 2ம் வத்திக்கான் சங்கத்தை தங்களது ஆள்பலத்தால் கைப்பற்றி, அதன் உண்மையான நோக்கத்திலிருந்து அதனை கடத்தி, அழிவிற்கு இட்டு சென்றனர், 2ம் வத்திக்கான் சங்கத்தை கூட்ட விரும்பிய 12ம் பத்திநாதர் பாப்பானவரின் ஆணைப்படி தயாரிக்கப்பட்ட 72 ''பாரம்பரிய போதனை ஆவணங்கள் 'Schemata திருச்சபையின் மசோதாக்கள்) பெரும்பான்மையினரான நவீனர்கள் விருப்பப்படி தூக்கி எறியப்பட்டன: இதனால் சங்கம் செயல் அற்றுப்போனது. முன்பே செய்திருந்த ரகசிய ஏற்பாட்டின் படி தப்பறைகள் மலிந்த நவீன ஆவணங்கள், தினந்தோறும் பல நூறு பக்கங்கள் உள்ளவை வழங்கப்பட்டு, மறுநாளே துரிதமாக அதன் மேல் உரிய விவாதங்கள் இன்றி, ஏற்கபட்டதாய் அறிவிக்கப்பட்டன. பாரம்பரியத்தை காப்பாற்ற விரும்பிய ஆயர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஒடுக்கப்பட்டார்கள். ("Open Letter to the Confused Catholics", ArchBishop Marcel Lefebvre. Chapter 14)

* உண்மையான திவ்விய பலிபூசையை அழிக்கும் முயற்சியில், 2-ம் வத்திக்கான் சங்கத்தில் புது பூசை என்பதை உருவாக்கி, அதனை பலவந்தமாக விசுவாசிகள் மேல் திணித்தார்கள். இன்று தமிழ்நாட்டில் புது பூசை என்பது தமிழில் செய்யப்படும் பூசையாகும்.

* 07/07/2007ல் 16ம் பெனடிக்ட் பாப்பானவர் திரிதெந்தீன் திவ்விய பலிபூசையை வேண்டுவோர், அதனை நிறைவேற்ற / காண சகல மேற்றிராணியார்களும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். (www.vatican.va)