சமுத்திரத்தின் நட்சத்திரமே - கீதம்

(கீழ்வரும் பாடலின் முதற்பகுதியை முழந்தாளிலிருந்து சொல்லவும்.)

கீதம்

சமுத்திரத்தின் நட்சத்திரமே, சர்வேசுரனுடைய பூசிக்கப்பட்ட மாதாவே, பாவமாசிலா நித்ய கன்னிகையே, பரலோகத்தின் பாக்யமான வாசலே வாழ்க!

கபிரியேல் என்கிற சம்மனசின் வாக்கிலே நின்று புறப்பட்ட மங்கள வார்த்தையைக் கேட்டு, ஏவையின் பெயரை மாற்றி எங்களைச் சமாதானத்தில் நிலைநிறுத்தும்.

பாவிகளின் கட்டுக்களை அவிழும்.  குருடருக்கு ஒளி கொடும். எங்கள் பொல்லாப்புக்களைத் தள்ளும்.  சகல நன்மைகளும் நாங்கள் பெற மன்றாடும்.

நீர் எங்கள் தாயாரென்று காண்பியும். எங்களுக்காக அவதரித்த உம் திருக்குமாரன் சேசுநாதர் உம் வழியாக எங்கள் வேண்டுதலைக் கேட்பாராக.

உத்தம கன்னிகையே, சகலரிலும் அதி சாந்தமே, எங்கள் பாவங்களினின்று விடுவிக்கப்பட்டு நாங்கள் தாழ்ச்சியும் கற்பும் உள்ளவர்களாகச் செய்தருளும்.

சேசுவை அடியோர் தரிசித்து நிரந்தரம் களிகூர்ந்திருக்கும் வரை எங்கள் பாதையைக் காத்தருளும்.

பிதாவாகிய சர்வேசுரனுக்குத் தோத்திரம்! திருச்சுதனுக்கு மகிமை! இஸ்பிரீத்து சாந்துவுக்கு மங்களம்! திரியேக தேவனுக்கு தேவாராதனை! ஆமென்.

முதல்: சேசுகிறீஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக,

பதில்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.