109, 112, 121,126, 147ம் சங்கீதம்

109ம் சங்கீதம்

ஆண்டவர் என் ஆண்டவருக்குத் திருவுளம் பற்றினதாவது:  

நாம் உம்முடைய சத்துருக்களை உம்முடைய பாதங்களுக்கு மணையாகப் போடுமட்டும் நமது வலது பாரிசத்தில் உட்காருமென்றார்.  

ஆண்டவர் சீயோனில் நின்று உமது வல்லமையின் செங்கோலைப் புறப்படச் செய்வார்.  உம்முடைய சத்துருக்களின் நடுவே அரசாள்வீராக.

நீர் ஜனித்து வருகிற போது பரிசுத்ததனத்தின் சோதி மகிமையின் ஆட்சியுரிமையும் உம்மோடு உதிக்கிறது.  

விடியற்காலத்தின் நட்சத்திரத்திற்கு முன் உம்மை பனியைப் போல ஜனிப்பித்தோம்.

நீர் என்றென்றைக்கும் மெல்கிசெதேக் என்பவருடைய முறைமைப்படி குருவாயிருக்கிறீரென்று ஆண்டவர் ஆணையிட்டார். அதை அவர் மாற்ற மாட்டார்.

ஆண்டவர் உமது வலதுபக்கமிருக்கிறார்.  தமது கோபாக்கினையின் நாளில் அரசர்களை அழித்து விடுவார். 

அவர் மக்களினங்களை நடுத்தீர்த்து, துன்மார்க்கர்களைக் கொன்று குவித்து, பூமியயங்கும் அநேகருடைய தலைகளை நசுக்குவார்.  

தன் சீவிய காலத்தில் பெருகி வரும் நீரோடையில் நீர் பருகுவார். ஆனதினால் தலைநிமிர்ந்து நடப்பார்.

பிதாவுக்கும், சுதனுக்கும் ....


112ம் சங்கீதம்

பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள். ஆண்டவருடைய நாமத்தைப் புகழுங்கள்.  

ஆண்டவருடைய நாமம் இப்பொழுதும், இதுமுதல் என்றென்றைக்கும் தோத்தரிக்கப் படக் கடவது.  

சூரியன் உதிக்கிற திசை துவக்கி அஸ்தமிக்கிற திசை மட்டும் ஆண்டவருடைய நாமம் துதிக்குரியதாமே.  

ஆண்டவர் சகல மக்களினங்களிலும் உயர்ந்தவர்.  அவருடைய மகிமை வானங்களிலும் மேலானதாமே.    

உன்னதத்தில் வீற்றிருந்து பரலோகத்தையும், பூலோகத்தையும் ஊடுருவப் பார்க்கிற நம் ஆண்டவராகிய சர்வேசுரனைப் போல் வேறு யாருண்டு?  

வறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார்.  ஏழையைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகிறார்.  அரசர்களிடையே, தம் மக்களை ஆளும் அரசர்களிடையே அவனை நிலைநிறுத்துகிறார்.

மலடியாயிருந்தவளை மக்களின் மகிழ்ச்சியுள்ள தாயாகத் தன் வீட்டிலிருக்கச் செய்கின்றார். 

பிதாவுக்கும் சுதனுக்கும்...


121ம் சங்கீதம்

ஆண்டவருடைய வீட்டுக்குப் போவோமென்று எனக்குச் சொல்லப் பட்டவைகளைப் பற்றிச் சந்தோஷப் பட்டேன்.  

எருசலேம் நகரே, எங்கள் பாதங்கள் உன் வாசல் முற்றங்களில் நின்று கொண்டிருந்தன. 

எருசலேம் தன்னில் இசைவிணக்கமுள்ள பட்டணமாகக் கட்டப் பட்டிருக்கிறதாமே.  

இங்கே கர்த்தருடைய கோத்திரங்கள் இஸ்ராயேலுக்கு இடப்பட்ட கட்டளையின்படியே கர்த்தருடைய நாமத்தைத் தோத்தரிப்பதற்கு ஏறிப் போயின.  

ஏனெனில் அங்கே தாவீதுடைய வீட்டின் மேலான ஆசனங்களாகிய நியாய ஆசனங்கள் ஸ்தாபிக்கப் பட்டன. 

எருசலேம் நகருடைய சமாதானத்திற்கானவைகளை மன்றாடிக் கேளுங்கள். உன்னை சிநேகிக்கிறவர்களுக்குப் பூரிப்பு உண்டாகக் கடவது.

உன் வீரத்தில் சமாதானமும், உன் கோட்டைகளில் சம்பூரணமும் உண்டாவதாக.  

என் சகோதரரையும் என்னைச் சேர்ந்தாரையும் பற்றி உனக்காக சமாதானம் பேசினேன்.  நம்முடைய ஆண்டவராகிய சர்வேசுரனுடைய தேவாலயத்தின் நிமித்தமாக உனக்குச் சகல நன்மையும் தேடினேன்.

பிதாவுக்கும் சுதனுக்கும்.... 


126ம் சங்கீதம்

ஆண்டவருக்கு ஒரு வீட்டைக் கட்ட சித்தமில்லாவிடில், அதைக் கட்டுகிறவர்கள் வீணாய் உழைக்கிறார்கள்.  

ஆண்டவருக்கு ஒரு பட்டணத்தைக் காக்கப் பிரியம் இல்லாவிடில், அதைக் காக்கிறவன் வீணாக விழித்திருந்து பராமரிக்கிறான்.

விடிகிறதற்கு முன் நீங்கள் எழுந்திருக்கிறது வியர்த்தம்.  துயரமுள்ள அப்பத்தைச் சாப்பிடுகிறவர்களே, நீங்கள் இளைப்பாறின பின்பு எழுந்திருங்கள்.

தமக்குப் பிரியமானவர்களுக்கு நித்திரை தந்தருளின பின்பு, இதோ, (அவர்களுடைய) குழந்தைகள் கர்த்தருடைய பரம்பரைச் சொத்தும், வெகுமதியும், உதரத்தின் கனியுமாம்.

இளமையில் பிறக்கும் புத்திரர் போர்வீரனின் கையிலுள்ள அம்புகளுக்குச் சமானம்.  அவர்களைக் கொண்டு தன் அம்புக் கூட்டை நிரப்புகிற மனிதனே பாக்கியவான்.  

கோட்டை வாசலில் தன் சத்துராதிகளோடே பேசும்போது அவன் வெட்கத்துக்கு உளளாகான்.

பிதாவுக்கும், சுதனுக்கும் ....


147ம் சங்கீதம்

எருசலேம் நகரே, ஆண்டவரைத் துதி.  சீயோனே, உன் சர்வேசுரனைத் தோத்தரி.  

ஏனெனில் உன் வாசற்கதவுகளின் தாட்பாள்களைப் பலப்படுத்தினார்.  உன்னிலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதித்தார்.  

அவர் உன் எல்லைகளுக்கு சமாதானத்தைக் கட்டளையிட்டு கோதுமையின் செழுமையினால் உன்னைத் திருப்தியாக்கினார்.  

அவர் தம் வார்த்தையைப் பூமிக்கு அனுப்புகிறார்.  அவருடைய வாக்கியம் தீவிரமாய்ச் செல்கின்றது.  

வெண்கம்பளி போல் அவர் பனி பொழியச் செய்கிறார்.   சாம்பலைப் போல் மூடுபனியைத் தூவுகின்றார்.  

தமது கல்மழையைத் அப்பத் துண்டுகளைப் போல அனுப்புகிறார்.  அவர் உண்டாக்குகிற குளிரின் முன்பாக தண்ணீர் உறைந்து போகின்றது.

தமது வார்த்தையை அனுப்பி அவைகளை உருக்குவார்.  அவருடைய காற்று வீசின மாத்திரத்தில் தண்ணீர் உருகி ஓடும்.

யாக்கோபென்கிறவருக்குத் தமது வார்த்தையை அறிவித்தார். இஸ்றாயேலுக்கு தமது நீதிப் பிரமாணங்களையும், நியமங்களையும் அறிவித்தார்.

வேறெந்த இனத்தாருக்கும் அவர் இப்படிச் செய்ததுமில்லை, அவர்களுக்குத் தம்முடைய கட்டளைகளை வெளிப்படுத்தவுமில்லை. 

பிதாவுக்கும், சுதனுக்கும் ....


சிறு வாசகம் (சர்வப் பிரசங்கி 24:20)

சுகந்தம் பொருந்திய இலவங்கப் பட்டை போலும் பரிமளம் போலும் வாசனை வீசினேன்.  விலையுயர்ந்த வெள்ளைப் போளம் போல வாசனையின் சுகந்தத்தைத் தந்தேன்.

பதில்: சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக.