அர்ச். சாமிநாதர் மூன்றாம் தவச் சபையினருக்குரிய முக்கிய விதிமுறைகள்

1. சபையினர் அர்ச். சாமிநாதர் தவச்சபை ரீதியின் படி பரிசுத்த கன்னிகையின் சிறிய கட்டளை ஜெபத்தை அனுதினமும் சொல்லி வர வேண்டும். முடிந்த வரை நியமிக்கப் பட்ட ஜெப நேரங்களில் அதன் ஜெபங்களைச் சொல்ல அவர்கள் முயல வேண்டும்.   கட்டளை ஜெபம் ஜெபிக்க  இயலாத நாட்களில் காலையில் ஒரு பகுதியும், பகலில் ஒரு பகுதியும் மாலையில் ஒரு பகுதியுமாக 153 மணி ஜெபமாலை சொல்ல வேண்டும்.

2.. தாங்கள் சட்டபூர்வமாகத் தடைசெய்யப் பட்டாலன்றி, அவர்கள் மாதம் இருமுறை உரிய ஆயத்தத்துடன் பாவசங்கீர்த்தனம் செய்து, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும், கடன் திருநாட்களிலும் திவ்யநன்மை உட்கொள்ள வேண்டும்.

3. சட்டபூர்வமாகத் தடை செய்யப் பட்டாலன்றி, அவர்கள் திருச்சபை நியமித்திருக்கிற ஒருசந்தி நாட்கள் நீங்கலாக, எல்லா வெள்ளிக் கிழமைகளிலும், ஆகமன காலம். தவக் காலம், பெந்தேகோஸ்தே காலம் மற்றும் செப்டம்பர் மாதத்தில் வரும் தவ நாட்களிலும், கிறீஸ்துமஸ் மற்றும் பரிசுத்த ஜெபமாலை மாதா  திருநாளிலும், நமது பரிசுத்த தந்தை அர்ச். சாமிநாதர், அர்ச். சியயன்னா கத்தரீனம்மாள் ஆகியோரின் திருநாட்களிலும், அமல உற்பவத் திருநாள், தேவமாதாவின் மோட்ச ஆரோகணத் திருநாள் ஆகிய திருநாட்களுக்கு முந்தின நாட்களிலும்  ஒருசந்தியும், சுத்த போசனமும்  கடைப்பிடிக்க வேண்டும்.

4. திருச்சபையின் பண்டைய விதிமுறையின் படி அவர்கள் திவ்ய நன்மை உட்கொள்ளும் நாட்களில், நள்ளிரவு துவக்கி உபவாசம் இருக்க வேண்டும்.  முடியாத பட்சத்தில் திவ்ய நன்மை உட்கொள்ளுமுன் குறைந்தது மூன்று மணி நேரம் உபவாசமிருக்க வேண்டும்.

5. தங்கள் மேலதிகாரிகளின் வழிநடத்துதலின் கீழ், அவர்கள் தனியாகவோ, குழுவாகவோ, தங்கள் திறமை, இடம் மற்றும் காலத்திற்கு ஏற்றவாறு தர்ம காரியங்களில் ஈடுபடுவார்கள். அறியாதவர்களுக்குப் போதிப்பதே ஞானரீதியான தர்ம காரியங்களில் தலைசிறந்தது என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

பின்வரும் இதர ஆறு ஞான காரியங்களை அவர்கள் மறவாமல் ஏற்று பயிற்சி செய்யப் பிரயாசைப்படுவார்கள்:

1. தேவைப்படுவோருக்கு ஞான ஆலோசனைகள் வழங்குதல்.

2. பாவிகளைக் கண்டித்துத் திருத்துதல்

3. கஸ்திப்படுவோரைத் தேற்றுதல்

4. பிறர் குற்றங்களை மன்னித்தல்

5. பிறர் தங்களுக்குச் செய்யும் அநீதிகளைப் பொறுமையோடு சகித்தல். 

6. ஜீவியருக்காகவும் மரித்தோருக்காகவும் தங்களைத் துன்புறுத்துவோருக்காகவும்   மன்றாடுதல்.

7.  ஒரு சகோதரர் இறக்க நேரிட்டால், மற்ற சகோதரர்களுக்கு அது உடனடியாக அறிவிக்கப் படவேண்டும்.  ஒரே சபையைச் சேர்ந்த எல்லா உறுப்பினர்களும் இறந்தவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். 

மரணச் செய்தி கிடைக்கப் பெற்ற எட்டு நாட்களுக்குள் அந்தச் சபையைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும், இறந்தவரின் ஆத்தும இளைப்பாற்றிக்காக 53 மணி ஜெபமாலையும், மரித்தோருக்கான கட்டளை ஜெபத்தில் மூன்று கணித ஜெபங்களில் ஒன்றையும், 129ஆம் சங்கீதத்தையும் ஜெபிக்க வேண்டும்.  முடிந்தால் இதே கருத்துக்காக அவர்கள் பூசை கண்டு நன்மை ஏனென்றால் அவை நமக்காகப் பலியான கிறீஸ்துநாதரின் பெயரால் அவர் முன் வைக்கப் படுகின்றன.  

கிறீஸ்துநாதர் தமது மகிமையுள்ள திருக்காயங்களைத் தமது பிதாவுக்குக் காண்பித்து, பரலோகத்திலும், இங்கு பூலோகத்தில் திவ்ய நற்கருணையிலும் நமக்காக இடையறாது பரிந்து பேசுகிறார்.  மேலும், கல்வாரியின் ஐக்கியத்தில் நமது இரட்சகரின் பரிசுத்த ஜீவியத்தின் சகல பரம இரகசியங்களும் நமக்கு இரட்சணியத்தைத் தருவதில் நமக்கு உதவக் கூடியவையாக இருப்பதால், பொதுக் காலம் மற்றும்  கிறீஸ்து நாதருக்குரிய காலங்களின் திருநாட்களுக்குரிய மகா பரிசுத்த பூசைப் பலிகளில் திருச்சபை அந்தப் பரம இரகசியங்களை நினைவுகூர்கிறது.  

கிறீஸ்து பிறப்பு விழாவின் போது, அது முன்னிட்டியின் தேவ குழந்தையை, நம் ஆண்டவரின திருவாழ்வில், பிதாவுக்கு விசேஷ­ மகிமையாய் விளங்கிய அனைத்து நிலைகளோடும், அவருக்கு ஒப்புக்கொடுக்கிறது.  இதன் மூலம் கிறீஸ்துநாதர் நமக்காகச் சம்பாதித்துள்ளவையும், தேவ சுதனும், அவருடைய திருமாதாவும் நமக்கு முன்மாதிரிகை காட்டிய சகல புண்ணியங்களையும் ஒவ்வோர் ஆண்டும் இன்னும் அதிகமதிகமாய்க் கண்டு பாவிக்க நமக்கு உதவுபவையுமாகிய வரப்பிரசாதங்களை நமக்கு அது வாரி வழங்குகிறது.