தாய் தந்தையர் கவனத்திற்கு!

அர்ச்சியசிஷ்டவர்கள் மற்றும் திருச்சபையின் வேத பாரகர்களின் இந்த அற்புதமான வார்த்தைகளை வாசிக்கும் போது, தங்கள் மகன்களில் ஒருவனாவது குருவாக வேண்டும் என்று ஆசையும் ஏக்கமும் கிறீஸ்தவத் தாய் தந்தையருக்கு இல்லாமல் இருப்பது சாத்தியமா?

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நலனை ஆர்வத் தோடு தேடுகிறார்கள்; தங்கள் குழந்தைகளுக்கு எல்லா சந்தோஷங்களையும், நன்மைகளையும், மதிப்பு மரியாதை யையும் பெற்றுத்தர வேண்டும் என்று பாடுபடுகிறார்கள்.

அப்படியிருக்க, இந்த மகிமைகள் அனைத்திலும் எவ்வளவோ மேலானதாகிய குருத்துவத்தை அவர்களுக்குப் பெற்றுத் தர அவர்கள் எந்த முயற்சியும் செய்யாதிருப் பதைக் காண்பது எவ்வளவு பரிதாபமான, வேதனைக்குரிய மூடத்தனமாக இருக்கிறது!

மூன்று, நான்கு, ஏன் ஆறு மகன்களைக் கூட குருத்துவத் திற்குக் கையளித்த சில பெற்றோர்களை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் இவர் களின் எண்ணிக்கை எவ்வளவு குறைவானது! தேவ ஊழியத் திற்காகத் தங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியோடு கையளிப் பவர்களும், தங்கள் குழந்தைகள் தேவ அழைத்தலைப் பெற்றுக் கொள்வதற்காக ஜெபிப்பவர்களும் அதிகரிப்பார்கள் என்றால், எப்பேர்ப்பட்ட தேவ வரங்களால் இந்த உலகம் நிரப்பப் படும், ஆத்துமங்கள் எப்பேர்ப்பட்ட தெய்வீக ஆசீர்வாதங் களைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதை சிந்திப்போமாக!

குறிப்பு:

1. தற்போதைய காலங்களில் இரு, அல்லது ஒரே ஒரு குழந்தை போதும் என்று கத்தோலிக்கப் பெற்றோரும் கூட உறுதியாக இருக் கிறார்கள். இதனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தேவ அழைத்தலுக்கு அனுப்பத் தயாராக இல்லை.

2. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் உலக வாழ்வில் முன்னேறத் தேவையான கல்வியையும், மற்ற வசதிகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோரிடம் தேவசிநேகமோ, நித்திய மோட்சம், நித்திய நரகம் ஆகியவை உள்ளன என்ற உணர்வோ இல்லை. ஆன்மாக்களை நித்திய மோட்சத்திற்கு வழிநடத்தத் தேவையான குருத்துவம் அல்லது துறவறம் தங்கள் பிள்ளை களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு இன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில்லை.

எந்தக் கட்டுப்பாடுமின்றி கடவுள் தங்களுக்குத் தரும் குழந்தைகளைப் பெற்றோர் ஏற்றுக்கொள்வதும், குழந்தைகளோடு தவறாமல் ஞாயிறு பூசை காண்பதும், குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பாரம்பரிய ஞான உபதேசத்தைக் கற்றுக் கொடுப்பதும், சிறு வயதிலேயே அவர்கள் பாவசங்கீர்த்தனம், தேவ நற்கருணை ஆகிய தேவத்திரவிய அனுமானங்களைப் பெறச் செய்வதில் கவனமாயிருப்பதும், இடைவிடாமல் ஜெபிக்கக் கற்றுக்கொடுப்பதும், தேவ அழைத்தல் பற்றிய சிந்தனையை அவர்களுடைய உள்ளங்களில் ஆழமாக விதைத்து விடுவது, இவற்றின் மூலம் உலகம், சரீரம், பசாசு ஆகிய ஆன்ம எதிரிகளுக்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களைத் தயாரிப்பதும் இன்று மிகப் பெரிதாக வளர்ந்து விட்ட இந்தத் தீமைக்கான நல்ல தீர்வுகளாக இருக்கும்.