அர்ச். பெரிய லியோ. பாப்பாண்டவர் (கி.பி. 461)
இவர் உரோமையில் பிறந்து சகல சாஸ்திரங்களையும் திறமையுடன் கற்றறிந்து சாதுரிய பிரசங்கியாகி திருச்சபைக்கு அபரிமிதமான நன்மை களைச் செய்துவந்தார்.
இவர் இரு பாப்புமார்களுக்கு உதவிபுரிந்து வந்து, வேதத்திற்காக பல இடங்களுக்கு அனுப்பப்பட்டு அக்காரியங்களை அனுகூல மாய்ச் செய்து முடித்தார்.
3-ம் சிக்ஸ்துஸ் மரணமானபின், லியோ பாப்பு ஸ்தானத்திற்கு தெரிந்துகொள்ளப்பட்டார்.
அக்காலத்தில் மனிக்கை, ஆரிய, அபோலினாரி, நெஸ்டோரியன், யுட்டிக்கன், நோவாசியன், தோனாடிஸ்ட் முதலிய பதித மதங்களால் திருச்சபையில் பயங்கரக் குழப்பங்கள் உண்டானதால், லியோ வாய்சாலகமான பிரசங்கங்களாலும் சிறந்த நிருபங்களாலும், விசேஷமாக, ஜெபத்தாலும் ஒருசந்தியாலும் அப்பதித மதங்களைத் தாக்கி நிர்மூல மாக்கினார்.
துர் மாதிரிகை காட்டிய அரசர்களுக்கும் பிரபுக்களுக்கும் இந்த பாப்பாண்டவர் பயப்படாமல் அவர்களைக் கண்டித்து புத்தி சொன்னார்.
அத்தில்லா என்னும் கொடுங்கோலன் பெரும் படையைச் சேர்த்து அநேக பட்டணங்களைக் கொள்ளையடித்தபின் உரோமையைச் சமீபித்த போது, லியோ அவனுக்கு எதிராகச் சென்று திரும்பிப் போகும்படி கற்பித்தார்.
அந்நேரத்தில் அர்ச். இராயப்பரும் சின்னப்பரும் தனக்கு ஆகாயத்தில் தோன்றி பயமுறுத்தினதைக் கண்ட கொடுங்கோலன் பின்னடைந்தான்.
ஜெனசெரிக் என்னும் வேறொரு குரூரன் அநேக தேசங்களைப் பாழாக்கி உரோமையைக் கொள்ளையடிக்க சென்ற சமயத்தில் லியோ அவனைச் சந்தித்து அவனையும் திரும்பிப் போகும்படி செய்தார்.
இவ்வாறு மகா லியோ பாப்பாண்டவர் திருச்சபைக்கும் பல தேசங்களுக்கும் கணக்கற்ற நன்மைகளைப் புரிந்து புண்ணியங்களால் சிறந்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.
யோசனை
நம்மிலும் பெரியவர்கள் நமக்குத் துர் மாதிரிகையாக நடக்கும்போது அதற்கு உட்படாமல் விமரிசையுடன் அவர்களை விட்டு விலகுவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். அந்திபாஸ், வே.
அர்ச். குத்லேக், வ.
அர்ச். மக்காயி, ம.
அர்ச். ஏய்ட், ம.