சிறு வாசகம் (சர்வப் பிரசங்கி 24:17-18)

லீபானில் கேதுரு மரத்தைப் போல உயர்த்தப்பட்டேன்.  சீயோன் மலையில் சிப்பிரசென்னும் மரத்தைப் போலானேன்.  காதேஸ் பனைமரத்தைப் போல் உயர்த்தப்பட்டேன்.  ஜெரிக்கோ ரோஜாத் தோட்டம் போலானேன்.

பதில்: சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக.

முதல்: சர்வேசுரன் அவளைத் தேர்ந்து கொண்டார்.  அவளை ஆதியிலேயே முன்குறித்திருந்தார்.

பதில்: சர்வேசுரன் அவளைத் தேர்ந்து கொண்டார்.  அவளை ஆதியிலேயே முன்குறித்திருந்தார்.

முதல்: அன்றியும் அவர் அவளைத் தமது பரிசுத்த கூடாரத்தில் வாசம்பண்ணச் செய்தார்.

பதில்: சர்வேசுரன் அவளைத் தேர்ந்து கொண்டார்.  அவளை ஆதியிலேயே முன்குறித்திருந்தார்.

முதல்: பிதாவுக்கும், சுதனுக்கும் இஸ்பிரீத்து சாந்துவுக்கும் மகிமையுண்டாகக் கடவது.

பதில்: சர்வேசுரன் அவளைத் தேர்ந்து கொண்டார்.  அவளை ஆதியிலேயே முன்குறித்திருந்தார்.

முதல்: ஓ என்றும் கன்னிகையான சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே,

பதில்: எங்கள் ஆண்டவராகிய சர்வேசுரனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசும்.

முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.

பதில்: என் அபய சத்தம் உமது சந்நதி மட்டும் வரக் கடவது.

பிரார்த்திக்கக் கடவோம்

ஓ ஆண்டவரே,  உமது ஊழியரான எங்கள் பாவங்களை மன்னித்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.  அதனால், எங்கள் சொந்தக் கிரியைகளினால் உம்மை மகிழ்விக்க இயலாத நாங்கள், உமது திருக்குமாரனும், எங்கள் ஆண்டவருமானவருடைய திருமாதாவின் பரிந்துரையினால் காப்பாற்றப் படுவோமாக.  இந்த மன்றாட்டுக்களை எல்லாம் தேவரீரோடு, இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்தில் சதா காலமும் இராச்சியபாரம் பண்ணுகிற எங்கள் ஆண்டவரும், உம் திருச்சுதனுமாகிய சேசுக்கிறீஸ்துநாதர் வழியாக எங்களுக்குத் தந்தருளும்.

பதில்: ஆமென்.

முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.

பதில்: என் அபய சத்தம் உமது சந்நதி மட்டும் வரக் கடவது.

முதல்:  ஆண்டவரை வாழ்த்துவோமாக.

பதில்: சர்வேசுரனுக்கு நன்றி!

முதல்: அருள் நிறைந்த மரியாயே, வாழ்க. கர்த்தர் உம்முடனே!

பதில்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவர்  நீரே.  உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.


மாலை ஆராதனை

முதல்: அருள் நிறைந்த மரியாயே, வாழ்க. கர்த்தர் உம்முடனே!

பதில்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவர் நீரே.

உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவரே.

முதல்: சர்வேசுரா, எனக்கு உதவியாக வாரும்.

பதில்: கர்த்தாவே, எனக்கு ஒத்தாசை செய்யத் தீவரியும்.

முதல்: பிதாவுக்கும், சுதனுக்கும், இஸ்பிரீத்து சாந்துவுக்கும் மகிமை உண்டாவதாக.

பதில்: ஆதியில் இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக.    அல்லேலூயா.  ஆமென்.

(செப்துவாஜெசிமா ஞாயிறிலிருந்து உயிர்ப்பு ஞாயிறு வரை அல்லேலூயாவுக்குப் பதிலாக: நித்திய மகிமைக்கு இராஜாவான ஆண்டவரே, உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது என்று சொல்லவும்.)