புனிதரின் திருத்தலங்களுக்குச் சென்று பாவக்கறைகளை நீக்கிடாமல் வேண்டுதல் செலுத்துவது அந்தோனியார் பக்தி அல்ல. இறை இயேசு நமது மீட்பர் எனக்கண்டு, தூயவர் வழியாக அவரை வேண்டி நலம் பெறுதலே உண்மை பக்தி .
இன்று நடப்பது என்ன? உதட்டில் விண்ணப்பம்; உள்ளத்தில் பகை உணர்ச்சி, பேராசை.
ஆசைப்பட்டு கேட்கும் பொருட்களை புனிதர் தருவார் என்ற முட்டள்தனமான நம்பிக்கை பலரிடம் உள்ளது. அவரோ தம் வாழ்நாளில் தன்னிடம் உள்ளதெல்லாம் ஏழைகளுக்குக் கொடுத்தார். ஏழைகளுக்கு உதவுவதன் மூலம் அவரது அன்பைப் பெறலாம்.
அவரது உண்மை பக்தர்கள் தாழ்ச்சி, பக்தி, கற்பு போன்ற நற்பண்புகளைப் பேணவேண்டும். இதுவே நாம் அவருக்குச் செலுத்தும் புகழாகும்.
ஒன்பது செவ்வாய்க்கிழமை பக்தி
ஒன்பது செவ்வாய்க்கிழமை கோடி அற்புதரின் ஆலயஞ்சென்று வேண்டினால் கேட்ட வரம் அருள்வார் புனிதர்.
இத்தாலியா நாட்டு பொலோனியா பட்டணத்தில் இருபத்தி இரண்டு ஆண்டுகள் மகப்பேறு இல்லாத பெண் ஒருத்தி இருந்தாள். 1674 - ஆம் ஆண்டு அவள் அந்தோனியார் ஆலயஞ்சென்று அவரை மன்றாடினாள். அன்று இரவு புனிதர் அவளுக்குத் தோன்றி "நமது ஆலயமொன்றிற்கு தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை சென்று வேண்டினால் கேட்டவரம் கிடைக்கும்” என்று சொல்லி மறைந்தார். அவளும் அவ்வாறு மகப்பேறுபெற்றாள். இப்புதுமையும், பக்தியும் உலகமெங்கும் பரவியது.
செவ்வாய் அல்லது ஞாயிறு பக்தி
அந்தோனியார் படத்தின் முன் அல்லது சுரூபத்தின் முன் 13 செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து வேண்டிவந்தால் நினைத்தது கைகூடும். இந்த நாட்களில் நற்கிரிகைகள், செபம் முதலியன - செய்வோருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பரிபூரண பலன் உண்டு.
"சத்தியத்தில் நடந்து அவரை மகிழ்விப்பதே அவரது பக்தர்களின் கடமை .
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தமிழ் வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயங்கள்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- நூலகம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- முகநூல் பக்கம்
- மரியன்னைக்கான போர்
- English Books
- Donation
- Contact Us
- Disclaimer
அந்தோனியார் பக்தி
Posted by
Christopher