அந்தோனியார் அற்புதச் சீட்டு

“உங்களுக்கு கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவு கூருங்கள். அவர்களது வாழ்வின் நற்பயனை எண்ணிப் பார்த்து அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.”

(எபிரேயர். 13/7) அந்தோனியார் என்றாலே பசாசுகளுக்கு நடுக்கம். சிறு பையனாக திருப்பலிப் பூசைக்கு உதவி செய்யும்போது சிலுவை அடையாளத்தால் சாத்தானைக் கட்டிப்போட்டார்.

நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சீடர்களால் ஊமைப் பேய்பிடித்த ஒருவனைக் குணப்படுத்த இயலவில்லை. இதுபற்றி "இவ்வகை பேய் செபத்தினாலன்றி வேறு எதனாலும் வெளியேறாது'' (மாற். 9:20)

பிரபா இவ்விரு அறநெறிகளிலும் பதுவைப் பதியர் சிறிதும் வழுவாதவ ராகையால் அவர் குரல் கேட்டதும் அலகை அலறிப்புடைத்து ஓடியதில் வியப்பில்லை .

போர்ச்சுக்கல் நாட்டில் சாத்தானால் பீடிக்கப்பட்ட ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். தேகஸ் என்ற நதியில் வீழ்ந்து தற்கொலை செய்ய பசாசு அவளை அடிக்கடி தூண்டியது. அவ்வாறு செய்தால் முடிவிலா இன்பம் கிட்டும் என்ற எண்ணத்தை எழுப்பியது.

அந்தோனியார் மீது பக்தி கொண்ட அப்பெண் ஆலயஞ் சென்று, "புதுமை வள்ளலே! நான் ஆற்றில் வீழ்ந்து மடிந்ததும் பரகதியடைய உதவிபுரியும்” என மன்றாடி மூர்ச்சையானாள். அந்தோனியார் அவளுக்குக் காட்சி அளித்து பேயின் மாயையை விலக்கினார். சீட்டொன்றை அவள் கழுத்தில் அணிவித்து மறைந்தார். - பேயும் அவளை விட்டகன்றது. தற்கொலை வேட்கையும் நீங்கியது. - நடந்ததைக் கேட்ட தேனீ என்ற அரசன் அவளை வரச்செய்து, அச்சீட்டை அவள் கழுத்தில் இருந்து அகற்றினான். பேய் மறுபடியும் அவளும் புகுந்து கொண்டது. எனவே அதன் நகல் ஒன்றினை எடுத்து விட்டு அச்சீட்டை அவளுக்கே அணிவித்தான். அதன் பின் தற்கொலை ஆசை அவளில் என்றுமே எழவில்லை .

இந்த அதியச் சீட்டு இன்று உலகமெங்கும் பரவியுள்ளது. பலரும் பயனடைந்து வருகின்றனர். க இச்சீட்டினை 5ம் சிக்தூஸ் பாப்பானவர் நகல் எடுத்து தூய இராயப்பர் பேராலய அடித்தளத்தில் பதித்தார். திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாளன்று இச்செபம் இடம்பெறுகின்றது. இச்சீட்டைக் குருவிடம் அளித்து மந்திரித்து அணிவது சாலச் சிறந்தது.

அந்தோனியார் சீட்டு

+ இதோ ஆண்டவருடைய சிலுவை
+ சத்துருக்களே ஓடி ஒளியுங்கள்
+ யூதா கோத்திரத்தின் சிங்கம்
+ தாவீதின் சந்ததி வெற்றி கொண்டது! அல்லேலூயா