அர்ச். பொனவெந்தூர்

259. புனிதர்கள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே கொண்டிருந்ததை மாமரி அதன் பரிபூரண முழுமையில் கொண்டிருந்தார்கள். ஓ வியாகுலம் நிறைந்த கன்னிகையே, என் சிறிய சிலுவைகளைப் பொறுமையோடும், மகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்ளத் தேவையான பலத்தை எனக்குத் தந்தருளும்.

260. இயேசுவின் திருச்சரீரம் முழுவதிலும் சிதறலாகக் காணப்பட்ட காயங்கள்அனைத்தும் மரியாயின் மாசற்ற இருதயத்தில் ஒன்றுசேர்க்கப்பட்டிருந்தன.

261. மரியாயின் திருப்பெயர் எவ்வளவு ஆச்சரியத்திற்குரியது! அதை அடிக்கடி உச்சரிப்பவன் மரண நேரத்தில் பயப்பட மாட்டான்.

262. கொள்ளையர்கள் இரவில் நம்மைத் தாக்குகிறார்கள், ஆனால் விடியற்காலம் வரும் போது அவர்கள் ஓடிப் போகிறார்கள். பசாசும் அவ்வாறே மாமரி வருவதைக் கண்டதும் ஓடிப் போகிறான்.