251. ஒருவன் எந்த இடத்திலும் ஒரு புனிதனாக முடியும்… உன் வேலையில், அது என்ன வேலையாக இருந்தாலும், சாந்தம், பொறுமை மற்றும் நேசத்தின் வழியாக நீ ஒரு புனிதனாக முடியும். ஒவ்வொரு நாளும் புதிய தீர்மானத்தோடும், ஆர்வத்தோடும், அன்போடும், ஜெபத்தோடும், மெளனத்தோடும், புதிதாகத் தொடங்கு.
252. கொஞ்சமாக நேசிப்பவன், கொஞ்சமாகக் கொடுக்கிறான், அதிகமாக நேசிப்பவன் அதிகமாகக் கொடுக்கிறான். அளவின்றி நேசிப்பவன் எதைக் கொடுக்கிறான்? அவன் தன்னையே கொடுக்கிறான்.
253. கடவுள் மிக அதிகமாக நம்மை நேசிக்கிறார்; அவர் ஒவ்வொரு கணமும் நம்மைத் தம் மனதில் கொண்டிருக்கிறார், அவர் நம்மைப் பாதுகாக்கிறார், நாம் இதை அறிந்திருக்க வேண்டும், எதற்கும் பயப்படக் கூடாது.
254. நாம் தொடர்ச்சியாக ஜெபிக்கும்போது, ஒவ்வொரு சூழ்நிலையிலும், மிகக் கடினமான சூழ்நிலையிலும் வட நாம் என்ன செய்ய வேண்டுமென்பது பற்றி அவர் நம்மை ஒளிர்விப்பார். கடவுள் நம் இருதயத்தில் பேசுவார். அவர் வழிகளைக் கண்டுபிடிப்பார்.
255. மனிதர்கள் கிறீஸ்துநாதர் இல்லாமல் வெறுமையாயிருக்கும்போது, பொறாமைகள், வெறுப்புகள், அலுப்பு, மனச்சோர்வு, எரிச்சல், உலகத்தன்மையான கண்ணோட்டம், உலக இன்பம் என்று ஆயிரத்தொரு காரியங்கள் வந்து அவர்களை நிரப்பும். உன் ஆன்மா வெறுமையாயிராதபடி கிறீஸ்துவைக் கொண்டு அதை நிரப்பி வைத்திரு.
256. நீ பிரசங்கங்களைக் கொண்டும், வாதங்களைக் கொண்டுமல்ல மாறாக, உண்மையான இரகசிய அன்பைக் கொண்டு, உன் கிறீஸ்தவப் போரில் ஈடுபட வேண்டும். நாம் வாதம் செய்யும்போது, மற்றவர்கள் பதில் வாம் செய்கிறார்கள். நாம் மனிதர்களை நேசிக்கும்போது, அவர்கள் நெகிழ்ச்சியடைகிறார்கள். நாம் அவர்கள் மீது வெற்றி கொள்கிறோம். நாம் நேசிக்கும்போது, நாம் மற்றவர்களுக்கு ஏதோ ஒன்றைத் தருவதாக நினைத்துக் கொள்கிறோம், ஆனால் உண்மையில், நாம்தான் முதலில் அதனால் நன்மையடைகிறோம்.
257. கடவுளில் முழுமையான நம்பிக்கை, பரிசுத்த தாழ்ச்சி என்பது அதுதான்.
258. உன் ஆன்மாவாகிய அறையிலிருந்து இருளைத் துரத்த போராடாதே. ஒளி உள்ளே வரும்படி ஒரு சிறு துளை போடு, அப்போது இருள் மறைந்து போகும்.