புனித பெர்னார்ட்

244. மாமரியைப் பின்செல்லும்போது, நீ வழிதவற மாட்டாய், அவர்களிடம் மன்றாடும் போது, நீ அவநம்பிக்கை அடைய மாட்டாய், அவர்களைப் பற்றி சிந்திக்கும்போது, நீ ஒருபோதும் தவறாகச் செல்ல மாட்டாய்.

245. ஆசீர்வதிக்கப்பட்ட திருத்தாயாரை மிக அதிகமாக நேசிக்காதவன் எவனும், அவர்களுடைய திருமகனை மிகக் குறைவாகவே நேசிக்கிறான்.

246. “மரியாயே வாழ்க!” என்று மட்டும் நான் சொல்லும் ஒவ்வொரு முறையும், பரலோகம் அக்களிக்கிறது, நரகம் நடுங்குகிறது, சாத்தான் அலறியோடுகிறான்!

247. உன் காணிக்கை மறுக்கப்படுவதை நீ விரும்பவில்லை என்றால், கடவுளுக்கு நீ ஒப்புக் கொடுக்க விரும்பும் எல்லாவற்றையும் மரியாயின் பொறுப்பில் ஒப்படைத்து விடு.

248. மரியாயே, நீர் ஆபத்திலிருந்து நன்கு காவல் காக்கப்படும் தோட்டமாக இருக்கிறீர். பாவத்தின் கரம் அதன் மலர்களைத் திருடும்படி ஒருபோதும் அதனுள் நுழைந்ததில்லை.

249. ஓ அனைவரிலும் இனியவரான இருதயங்களின் திருடரே, வந்து என் இருதயத்தையும் திருடிக் கொள்ளும்!

250. என் போதனையின் வழியாக நான் செய்துள்ளதை விட, பரிசுத்த ஜெபமாலையின் வழியாக அதிக ஆத்துமங்களை நான் மனந்திருப்பியிருக்கிறேன்.