புனித லூயி த மோன்போர்ட்

239. கடவுளுக்காக எந்த ஓர் ஆபத்தான முயற்சியிலும் நாம் இறங்கவில்லை என்றால், அவருக்காகப் பெரிய காரியம் எதையும் நாம் ஒருபோதும் செய்ய மாட்டோம்.

240. மரியாயே என்று கூப்பிடு, அதன் எதிரொலி இயேசுவே என்று பதிலளிக்கும்.

241. ஜெபமாலைதான் தம் திருத்தாயாரை நேசிக்கும் நம் மீட்பராகிய இயேசுவின் திரு இருதயத்தைத் தொடுவதற்கு அனைத்திலும் மிகுந்த வல்லமையுள்ள ஆயுதமாகும்.

242. தாய்மார் அனைவரின் எல்லா நேசத்தையும் ஒரே இருதயத்தினுள் நீ வைப்பாய் என்றால், அது அப்போதும் கூட, மாமரியின் திரு இருதயம் தன் பிள்ளைகளின் மீது கொண்டுள்ள நேசத்திற்குச் சமமாக இல்லாதிருக்கும்.

243. மிகுந்த நம்பிக்கையோடு, கடவுளின் நன்மைத்தனத்தையும், அவருடைய அளவற்ற தாராளத்தையும், இயேசு கிறீஸ்துவின் வாக்குறுதிகளையும் அடிப்படையாகக் கொண்ட பெரும் நம்பிக்கையுடன் ஜெபி. கடவுள் ஜெபிப்பவர்களின் இருதயங் களுக்குள் இடைவிடாமல் பாய்கிற உயிருள்ள நீரூற்றாக இருக்கிறார்.