வண. ஸோலானுஸ் கேஸி

267. ஓ, நாம் மட்டும் அவருடைய திட்டத்தின்படி அனைத்தையும் விட்டு விலகி யிருந்தால், கடவுள் நமக்கு முன்பாக எதை வைத்திருந்திருப்பார்!

268. காலத்திற்கு முன்பாகவே கடவுளுக்கு நன்றி செலுத்து.

269. நன்றியறிதல் பகுத்தறிவுள்ள படைப்பின் சிந்தனையின் முதல் அடையாளமாகும்.

270. தமது திட்டங்களில் எல்லாம் நல்லவராக இருப்பவர் வாழ்த்தப்பெறுவாராக!

271. சொகுசான வாழ்வுகளுக்காக ஜெபிக்காதீர்கள்; அதிக பலமுள்ள மக்களாயிருக்கும் படி ஜெபியுங்கள்.

272. நம்மை ஒருவரையயாருவர் சார்ந்திருப்பவர்களாக உண்டாக்கியதில் நல்ல சர்வேசுரன் எவ்வளவு இரக்கமுள்ளவராக இருக்கிறார்!

273. தைரியத்தைக் கைவிடாதே -- அதை விட, கடவுளில் நம்பிக்கை கொள் -- அது தெய்வீகமான முறையில் உறுதிப்படுத்தப்பட்ட தைரியமாக இருக்கிறது.

274. இந்த கணத்திற்கு நாம் பிரமாணிக்கமாக இருக்க வேண்டும், அல்லது நம் வாழ்வுகளுக் கான கடவுளின் திட்டத்தை நாம் குழப்பி விடுவோம்.

275. கவலை என்பது பலவீனம், அதிலிருந்து நம்மில் வெகு சிலர் மட்டுமே முழுமையாக விடுபட்டிருக்கிறோம். நம் ஆத்தும சமாதானத்தின் மகா அருவருப்புக்குரிய இந்த எதிரிக்கு எதிராக நாம் விழிப்பாயிருந்து அந்த சமாதானத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக, நாம் கடவுளில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வோம், அவர் நமக்கு அனுப்பத் தேர்ந்து கொள்கிற எதற்காகவும், அது வருமுன்பே நாம் அவருக்கு நன்றி செலுத்துவோம்.