எனதான்மா இறையவனை ஏற்றியே மகிழ்கின்றது

எனதான்மா இறையவனை ஏற்றியே மகிழ்கின்றது
மீட்பராம் கடவுளையே என் மனம் புகழ்கின்றது
என்றென்றும் பாடிடும் எனதுள்ளமே
இறைவனின் வல்லமையே

1. இறைவனின் உறைவிடம் ஏழைகளே
உழைத்து உயர்ந்திடும் கரங்களே
ஏழை எளியவர் நிம்மதி அடைய
சுரண்டிய செல்வர்கள் ஓடியே மறைய
நீதியின் அரசு எங்குமே வளர அழைக்கின்றது

2. இன்று முதல் தலைமுறை அறிந்திடுமே
வலியோரின் அரியணை சாய்ந்திடுமே
நீதி உண்மையின் ஆட்சியும் உயர்ந்திட
தீமை வலியவர் வல்லமை குறைய
கருக்குள வார்த்தை சாட்சியாய் விளங்க அழைக்கின்றது