ஒரு நாவும் போதாதம்மா உன் திருநாமம் புகழ்கூறி மரியே நான் உனைப்பாட

ஒரு நாவும் போதாதம்மா
உன் திருநாமம் புகழ்கூறி மரியே நான் உனைப்பாட

1. முறையோடு ஜெபமாலை தினம் ஏந்துங்கள்
குறையாத நலம் யாவும் பெறலாம் என்று
கரைசேரும் வழிதன்னை எளிதாய் சொன்ன
மரியாளே உனதன்பின் பெருமை சொல்ல

2. தவறாமல் இறைநோக்கி ஜெபம் செய்யுங்கள்
உலகோர்க்கு மனசாந்தி கிடைக்கும் என்றே
அழியாத நெறிதன்னை அழகாய் சொன்ன
மரியாளே உனதன்பின் பெருமை சொல்ல

3. பல நாமம் உனக்கென்று அடைந்தாயம்மா
களம் யாவும் அருள்வெள்ளம் பொழிந்தாயம்மா
இறைமைந்தன் நிறையாசீர் வழங்கச் செய்யும்
மரியாளே உனதன்பின் பெருமை சொல்ல