இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

என் ஆன்மா எந்நாளுமே ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது

என் ஆன்மா எந்நாளுமே
ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது
என் மீட்பரை நினைத்து நினைத்து
எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது

1. ஏழைகளை எளியவரை உயர்த்தினார் - பல
இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார்
செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் - நெஞ்சில்
செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார்

2. அடிமைகளை அன்புடனே நோக்கினார் - அவர்
ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார்
தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் - வாழ்வில்
வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார்