பொன்னும் மணியுமில்ல பூவும் பொருளும் இல்ல ***

பொன்னும் மணியுமில்ல பூவும் பொருளும் இல்ல
மல்லிப்பூவா எந்தன் மனம் இருக்கு - உன்
மலர்ப்பாதம் படைத்தால் போதும் எனக்கு
வந்தேன் வந்தேன் இறைவா என்னைத்
தந்தேன் தந்தேன் தலைவா

1. உள்ளம் எல்லாம் அன்பிருக்கு - உன்
சொல்படி நடக்கிற தெம்பிருக்கு
இதயத்தில் நிறைவிருக்கு ஆ
இறைவா இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு

2. இருப்பதெல்லாம் கொடுத்தேன் - என்னை
இறையருள் நிறைத்திட வரம் கேட்டேன்
வாழ்ந்திடும் நாளெல்லாம் ஆ
மனிதம் மலர்ந்திட உழைத்திட திறம் கேட்டேன்