பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை ***

பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்
எந்தையும் என் தாயும் நீயன்றோ - நீயே
என்னையாளும் மன்னவனன்றோ

1. நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ
என் நிம்மதி இழந்து நின்றேன்
வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி
நான் அளவில்லா பாவம் செய்தேன்
தனது இன்னுயிரை பலியெனத் தந்தவரே
உனக்கு நான் எதையளிப்பேன் - இன்று
உனக்கு நான் எனையளித்தேன்

2. வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
ஒழிந்திட உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
நிலைத்திட பணி செய்வேன்
உன்னத தேவனே உனதருட் கருவியாய்
உலகினில் வாழ்ந்திடுவேன் - என்றும்
உன்னிலே வாழ்ந்திடுவேன்