இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இயேசுவில் இணைந்திட இறைமையில் நனைந்திட ***

இயேசுவில் இணைந்திட இறைமையில் நனைந்திட
எழுந்திங்கு வாரீர் இறைமக்களே
அன்பினில் நனைந்திட அருளினில் வளர்ந்திட
நிறைவுடன் வாரீர் மானிடரே
எழுக எழுக இறைமக்களே வருக வருக மானிடரே

1. புதியதோர் ஆவியும் புதியதோர் இதயமும்
பெறுவது வாழ்வின் கொடையன்றோ
அதை அடைய முயல்வதும் அமைதி காண்பதும்
அகிலம் காணும் வழியன்றோ

2. உறவினில் வளர்ந்திட உண்மையில் நனைந்திட
தன்னையே தந்தவர் இறைவன் அன்றோ
அவர் அரசினைக் காண ஒன்றாய் இணைவது
புதுயுகம் காணும் முறையன்றோ