இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மணம் தரும் மலரில் மகிழ்ந்திடும் இறைவா ***

மணம் தரும் மலரில் மகிழ்ந்திடும் இறைவா
என் மனம் ஏற்க தயக்கமோ - நான்
காகிதப்பூ என்ற வருத்தமோ

1. வசந்தம் மறுத்தால் காற்றிலும் வாழ்வேன்
வான்மழை நின்றால் ஊற்றிலும் உய்வேன்
செல்வங்கள் மறுத்தால் ஏழ்மையில் வாழ்வேன்
இயேசுவே நீயின்றி நான் எங்கு செல்வேன்

2. கனிகளைக் கொடுக்கும் கொடிகளின் முதல்வா
கனிவுடன் படைத்திடும் காணிக்கை ஏற்பீர்
ஒலிவேற் மலைக்கு உம்முடன் வருவேன்
உயிராய் உடலாய் உம்முடன் வாழ்வேன்